வண்ணம்  பூசி வள்ளுவரை கொள்ளையடிக்க பார்க்கின்றனர்- கவிஞர் வைரமுத்து 

சென்னை அடையாறில் நடைபெற்ற வெற்றித் தமிழர் பேரவையின் மூலம் நடைபெற்ற திருவள்ளுவர் திருவிழாவில் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டு பேசினர். 

சென்னை அடையாறில் நடைபெற்ற வெற்றித் தமிழர் பேரவையின் மூலம் நடைபெற்ற திருவள்ளுவர் திருவிழாவில் பல்வேறு கவிஞர்கள்,கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.எல்லோரும் பேசிய பிறகு சிறப்புரையாற்ற வந்தார் கவிஞர்  வைரமுத்து. . 

 “வண்ணம்  பூசி வள்ளுவரை கொள்ளையடிக்க பார்க்கின்றனர். விட்டுக் கொடுக்க முடியுமா….? நம்முடைய அறிவை அடையாளத்தை முகத்தை முகவரியை யாராவது கொள்ளை கொண்டு போக அனுமதிப்பீர்களா அனுமதிக்க மாட்டோம்.

thiruvalluvar

அனுமதிக்க மாட்டோம் என்று தலைக்கு மேலே உயர்த்தி என் செவிகளை ஓரம் வந்து விழுந்த வார்த்தைகளை எனக்கு நம்பிக்கையை கொடுக்கின்றனர். எந்த வண்ணம் கொடுத்தாலும் சாயம் போய்விடும், வெள்ளை வேட்டி சாயம் போகாது அதனால்  தான் வள்ளுவனுக்கு வெள்ளை பொருத்தமாக உள்ளது. சாயம் போகாத நம்முடைய நிறமும் அதுதான்.  திருவள்ளுவர் சாயம் போகாத வெள்ளை நிறத்தை மட்டும் தான் உடுத்த வேண்டும் என்பதை தமிழர்கள் கொள்கையாக வைத்துக் கொள்ள வேண்டும்.மயிலிறகு அதிகமானால் வண்டி அச்சு முறிந்திடும்… அதுபோல மக்களுக்கு ஒவ்வாத சட்டத்தை திணித்தால் சமூகம் முறிந்துவிடும். ” எனக்கூறினார். 

Most Popular

நான் அதிருப்தியிலும் இல்லை; பிரதமரையும் தனியாக சந்திக்கவில்லை- திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்

திமுகவில் தனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார். திமுகவிலிருந்து ஏராளமான எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு செல்லவிருப்பதாகவும், திமுக தலைமையை சிலர் ஏற்கவில்லை என்றும் தகவல்கள் கசிந்தது. மேலும் தலைவர்...

65 ஆண்டு கால வரலாற்றில் பவானிசாகர் அணை 26 வது முறையாக 100 அடியை எட்டியது!

1956ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட பவானிசாகர் அணை, கடந்த 65 ஆண்டு கால வரலாற்றில் 26 வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. 2018, 2019 மற்றும் 2020 என தொடர்ந்து 3 ஆண்டுகள்...

போதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி!

குடிபோதையில் தொடர்ந்து துன்புறுத்தி வந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் சேலம் மாவட்டம் ஓமலூரில் நிகழ்ந்துள்ளது. பெரியேரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் போதைக்கு அடிமையான நிலையில் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில்...

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கேரளாவின் இடுக்கி, வயநாடு, ஆலப்புழா, காசர்கோடு கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில்...