Home உலகம் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வெளியுலகிற்கு தலைக்காட்டதற்கு இதுவே காரணம்... வெளியான பகீர் தகவல்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வெளியுலகிற்கு தலைக்காட்டதற்கு இதுவே காரணம்… வெளியான பகீர் தகவல்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இருதய அறுவை சிகிச்சை செய்து கொள்ளவில்லை என்றும் கொரோனா அச்சம் காரணமாகவே தனிமையில் இருந்தார் என்றும் தென் கொரியா தெரிவித்துள்ளது. 

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த மாதம் 20 நாட்களுக்கு மேலாக வெளியுலக நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார். குறிப்பாக ஏப்ரல் 15 ஆம் தேதி வடகொரியா நிறுவனரும், கிம்மின் தாத்தாவுமான கிம் இல் சங்கின் பிறந்தநாள் விழாவிலும், கிம் ஜாங் உன் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. நடைபயிற்சி மேற்கொண்டபோது உடல் நலக்குறை ஏற்பட்டதாகவும், இதனால் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் உலா வந்தன. மேலும், அவர் உயிரிழந்திருப்பதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக பேசப்பட்டது. 

 

kim jong un

ஆனால், அனைத்து வதந்திகளையும் உடைத்து விட்டு, அண்மையில் வடகொரியாவில் நடந்த நிகழ்ச்சியில் கிம் ஜாங் உன் கலந்து கொண்டார். இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு பயந்தே, 20 நாட்களுக்கு மேலாக அவர் வெளியுலகில் நடமாடவில்லை என தென்கொரிய உளவு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. வீட்டில் இருந்தபடியே அரசு வேலைகளை அவர் உன்னிப்பாக கவனித்து வந்ததையும் அந்த உளவு நிறுவனங்கள் சுட்டிக் காட்டியுள்ளன. 

மாவட்ட செய்திகள்

Most Popular

ஓட்டப்பிடாரம் மாட்டுவண்டி எல்கை பந்தயம்… அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார்…

தூத்துக்குடியில் வீரபண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தயத்தை ஏராளமானோர் கண்டுகளித்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அடுத்துள்ள மேலதட்டப்பாறை கிராமத்தில் சுதந்திர...

“இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தயார்” : கருணாஸ் பேட்டி!

சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிடம் 2 தொகுதிகளை கேட்கவுள்ளதாக எம்எல்ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி...

நிஜமானது ‘முதல்வன்’ சினிமா: ஒரு நாள் முதல்வர் ஆனார் கல்லூரி மாணவி#Uttarakhand #SrishtiGoswami

ஒரு நாள் முதல்வராக இருந்து பார்.. அப்ப தெரியும் உனக்கு.. என்று ரகுவரன் விடுத்த சவாலை ஏற்று ஒரு நாள் முதல்வராக பொறுப்பேற்கும் அர்ஜூனின் கேரக்டரும், அந்த முதல்வன் சினிமாவும்...

“நான் தமிழன் இல்லை; ஆனால் தமிழை மதிக்கிறேன்” : ராகுல் காந்தி பேச்சு!

தமிழை மத்திய அரசும், மோடியும் அவமதிப்பதை ஏற்க முடியாது என்று எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஈரோட்டில்...
Do NOT follow this link or you will be banned from the site!