Home சினிமா லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும்; வந்தா கண்டிப்பா அடிக்கணும்: ரஜினிகாந்த்!

லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும்; வந்தா கண்டிப்பா அடிக்கணும்: ரஜினிகாந்த்!

‘2.o’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய பஞ்ச் டயலாக் வைரலாகி வருகிறது.

சென்னை: ‘2.o’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய பஞ்ச் டயலாக் வைரலாகி வருகிறது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள ‘2.o’ படத்தின் டிரைலர் இன்று வெளியானது. சத்யம் திரையரங்கில் நடந்த இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன், இயக்குநர் ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். 

மிகுந்த பொருட் செலவில் உருவாகியுள்ள இப்படம் அதிநவீன 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே முதன் முறையாக 4டிசவுண்ட் சிஸ்டம் இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. டிரைலர் வெளியீட்டு விழாவின் தொடக்கத்தில் மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் எழுதிய ‘புல்லினங்கால்’ பாடல் ஒலிபரப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து ‘இந்திரலோகத்து சுந்தரியே’ பாடலும் திரையிடப்பட்டது.

‘2.o’ டிரைலர் வெளியீட்டு விழாவின் இறுதியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ஷங்கர் கூட்டணியில் பணியாற்றிய ‘சிவாஜி’, ‘எந்திரன்’ படங்களின் வெற்றியை போல் இந்த படமும், பட்ஜெட்டை விட அதிகம் வசூலிக்கும். உடல்நிலை சரியில்லாத போது நம்பிக்கை இல்ல, வாங்கின அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுக்றதா சொல்லிட்டேன். சுபாஸ்கரன், ஷங்கர் பேசி தன்னம்பிக்கை கொடுத்ததால தான் படம் பண்ண முடிஞ்சது என்றார்.

மேலும், படம் லேட் ஆகும் போது, ‘ஏன் வரலை, வருமா வராதா’னு கேட்டாங்க. அது முக்கியம் இல்லை. லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும்; கரெக்ட்டா வந்தா கரெக்ட்டா அடிக்கணும். நான் படத்தை சொன்னேன். இன்னும் ரிலீஸ் மட்டும்தான் பாக்கி’ என்று தனக்கே உரிய ஸ்டைலில் பேசி அரங்கையே அதிரச் செய்துள்ளார். 

அரசியலில் ஈடுபட்டிருக்கும் ரஜினிகாந்த் கூறியுள்ள இந்த பஞ்ச் டயலாக், அவரது சினிமா மட்டுமின்றி அரசியலுக்கும் பொருந்தும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

“விவசாயிகள் குறித்து அதிமுகவிற்கு கவலை இல்லை” – உதயநிதி ஸ்டாலின்

தஞ்சாவூர் வேளாண் சட்டங்களை எதிர்த்து பாஜகவின் கூட்டணி கட்சியினரே ராஜினாமா செய்த நிலையில், அதிமுக அரசு விவசாயத்தை பற்றி கவலைப்படாமல் ஆதரவு தெரிவிப்பதாக, திமுக இஞைரணி...

காங்கிரஸிலிருந்து அதிமுகவில் இணைந்த அப்சரா ரெட்டி அதிமுக செய்தித்தொடர்பாளராக நியமனம்

அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அப்சரா ரெட்டி கட்சியின் செய்தி தொடர்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக...

தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம்: தேமுதிக மாநில செயலாளர் சுதீஷ்

கொரோனோ வைரஸ் நோய் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஆம்பூர் தேமுதிக நகர செயலாளர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய தேமுதிக மாநில செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆறுதல் கூறினார்
Do NOT follow this link or you will be banned from the site!