Home சினிமா லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு இப்படி ஒரு ஆசையா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு இப்படி ஒரு ஆசையா?

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகை நயன்தாராவுக்கு சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி இன்னும் சில விஷயங்களில் ஆர்வம் உள்ளது தெரியவந்துள்ளது.

சென்னை: தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகை நயன்தாராவுக்கு சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி இன்னும் சில விஷயங்களில் ஆர்வம் உள்ளது தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் நம்பர்.1 நாயகியாக வலம் வரும் நயன்தாரா, அஜித்துடன் ‘விஸ்வாசம்’, தளபதி விஜய்யுடன் ‘தளபதி 63’, சிவகார்த்திகேயன் திரைப்படம், அறிவழகன் படம், ’சைரா நரசிம்மா ரெட்டி’, ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ என அரை டஜன் திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இது மட்டுமல்லாது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ‘கொலையுதிர் காலம்’, ‘ஐரா’ போன்ற படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

nayanthara

கமர்ஷியல், ஹீரோயின் கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் வித்தியாசம் காட்டி வரும் நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுக்காக தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கப்போவதாக கோலிவுட்டில் பேசப்பட்டது. ஆனால், தயாரிப்பு மட்டுமல்ல நீண்ட காலமாகவே நயன்தாராவிற்கு திரைப்படம் இயக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாம்.

nayanthara

ஏற்கனவே அஜித் நடித்த ‘ஆரம்பம்’ திரைப்படத்தில் நயன்தாரா உதவி இயக்குநராக பணியாற்றியதாக கூறப்படுகிறது. இது தவிர தற்போது எடிட்டிங், கேமரா போன்றவற்றிலும் நயன்தாரா தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறாராம். ஆகவே அடுத்த ஆண்டு நயன்தாரா ஒரு படத்தை இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

குளிர்காலத்தில் விலை உயர பெட்ரோல், டீசல் என்ன சீசன் பழங்களா? மத்திய அமைச்சரை கிண்டலடித்த காங்கிரஸ்

குளிர்காலத்தில் விலை உயர என்ன பெட்ரோல்,டீசல் மற்றும் எரிபொருள் சீசன் பழங்களா? என்று பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை காங்கிரஸ் கிண்டலடித்துள்ளது. பெட்ரோலிய துறை...

மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு எதிராக ஆயுதத்தை எடுக்கும் பா.ஜ.க… களமிறங்கும் யோகி ஆதித்யநாத்

மேற்கு வங்கம் மால்டாவில் முதல் முறையாக அரசியல் பேரணியில் உத்தர பிரதேச முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத் உரையாற்ற உள்ளார். மேற்கு வங்கத்தில்...

28-2-2021 தினப்பலன் – 6 ராசிகளுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்!

சார்வரி வருடம் I மாசி 16 I ஞாயிற்றுக் கிழமை I பிப்ரவரி 28, 2021

நான் ஊழல் இல்லாதவன் என்பதால் 30 நொடியில் தூங்கி விடுவேன்.. மோடியை பார்த்து பயப்படமாட்டேன்.. ராகுல் காந்தி

நான் ஊழல் இல்லாதவன் என்பதால் 30 நொடியில் தூங்கி விடுவேன், மோடியை பார்த்து பயப்படமாட்டேன் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்...
TopTamilNews