Home சினிமா லாஸ்லியாவ லவ் பண்ணுறீங்களா? ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் கவினின் பதில்!

லாஸ்லியாவ லவ் பண்ணுறீங்களா? ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் கவினின் பதில்!

ஆர்மிகளை சம்பாதித்த பெருமை கவினை சாரும். மேலும் காதல், நட்பு உள்ளிட்ட விஷயங்களால் சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டார். 

பிக் பாஸ்  3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானவர் நடிகர் கவின். சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னதிரையில்  அறிமுகமான இவர் வேட்டையன் கதாபாத்திரம் மூலம் பலரது பாராட்டைப்  பெற்றார். இதையடுத்து நடிகை ரம்யா நம்பீசனுடன் இணைந்து அவர் நடித்த ‘நட்புனா என்னனு தெரியுமா’  திரைப்படம் எதிர்ப்பார்த்தளவு கைகொடுக்கவில்லை.  இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் களமிறங்கி அதிகளவு ஆர்மிகளை சம்பாதித்த பெருமை கவினை சாரும். மேலும் காதல், நட்பு உள்ளிட்ட விஷயங்களால் சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டார். 

tn

கவின் ஆர்மிகள் பெய்டு ஆர்மி என்ற விமர்சனம் இருந்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கவினின் அடுத்த திட்டங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளவே, கவினின்  ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். 

 

கவின்

இந்நிலையில் கவின் பிரபல ஆங்கில ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் அவரிடம் நீங்கள் சிங்கிளா?கமிட்டடா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தான் இப்போதும் சிங்கிள் தான். நான் காலேஜ், ஸ்கூல் படிக்கும் போது  நல்ல திருச்சி பெண்ணை பார்த்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன். ஆனால்  இப்போது  அப்படியில்லை. எதிர்பார்ப்பு இல்லாமல் பழகும் உறவு நட்பு மட்டும் இல்லை. காதலும் கூட அப்படி தான். எதிர்பார்ப்பு இல்லாவிட்டாலே  காதல்  வளர்ச்சியடையும். அது கட்டுப்பாடுகள் இல்லாமல், நேர்மையாக இருக்கவேண்டும்’ என்றார்.

ttn

தொடர்ந்து பேசிய அவர், நான் தீவிரமாக காதல் செய்பவன். ஒருவேளை நான் யாரையாவது காதல் செய்தால்  அவருக்காக எந்த எல்லைக்கும் போவேன். அவர்  சிறுவயதில் ஆசைப்பட்டு மறந்த விஷயங்களை எல்லாம் செய்வேன். இது சினிமாதனமாக இருக்கும். ஆனால்  நான் அப்படித்தான். எனக்கு எளிமையாக சுதந்திரமாக இருக்கும் பெண்களை பிடிக்கும். திருமணம் என்பது நம் கலாச்சாரத்தின் ஒரு பகுதி. சிலர் பல ஆண்டுகள் திருமண வாழ்க்கையில்  இருக்கிறார்கள். சிலர் 6 மாதத்தில் பிரிந்தும் விடுகிறார்கள். அதனால் காதல் தான் முக்கியம்’ என்றார். 

மாவட்ட செய்திகள்

Most Popular

மூத்த குடிமக்கள், சிறுவர்கள் வீட்டுக்கு செல்லுமாறு கோரிய மத்திய அமைச்சர்… நிராகரித்த விவசாய தலைவர்கள்

டெல்லியில் போராட்ட களத்தில் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் சிறுவர்களை வீட்டுக்கு செல்லுமாறு வேண்டுகோள் விடுத்த மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் கோரிக்கையை விவசாய தலைவர்கள் நிராகரித்தனர்.

கட்சியில் சுயாட்சி இல்லை.. கோவாவில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியேறிய முக்கிய தலைவர்கள்…

கோவாவில் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் எல்விஸ் கோம்ஸ் உள்பட பல முக்கிய தலைவர்கள் தங்களது அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். ஆம்...

மேற்கு வங்கத்தில் மம்தா கட்சியின் இயல்பான மரணத்தை விரும்புகிறோம்.. ஜனாதிபதி ஆட்சி தேவையில்லை.. பா.ஜ.க.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசின் இயல்பான மரணத்தை விரும்புகிறோம், குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்துவதை விரும்பவில்லை என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் பட்டாச்சார்யா தெரிவித்தார். மேற்கு...

கே.சந்திரசேகர் ராவுக்கு வேறுவழியில்லை…. பரம எதிரியான பா.ஜ.க. அல்லது ஓவைசி கட்சியுடன் கூட்டணி

ஹைதராபாத் மாநகராட்சி மேயர் பதவி வேண்டுமானால் பரம எதிரியான பா.ஜ.க. அல்லது ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியுடன் கூட்டணி வைத்தே தீர வேண்டும் என்று நிலைக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின்...
Do NOT follow this link or you will be banned from the site!