Home சினிமா லாரன்ஸ் கனவில் மண்ணை போட்ட தமிழ் ராக்கர்ஸ் 

லாரன்ஸ் கனவில் மண்ணை போட்ட தமிழ் ராக்கர்ஸ் 

நடிகர் ராகவ லாரன்ஸ் இயக்கி, நடித்துள்ள காஞ்சனா 3 திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகர் ராகவ லாரன்ஸ் இயக்கி, நடித்துள்ள காஞ்சனா 3 திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ராகவா லாரன்ஸின் இயக்கத்தில் காமெடி கலந்த பேய் படமாக வெளியாகி தமிழ் சினிமாவில் புது ட்ரெண்டை உருவாக்கிய திரைப்படம் ‘காஞ்சனா சீரிஸ்’. ‘முனி’, காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகம் வெளியாகியுள்ளது. 

lawrence

அதில் ஓவியா, வேதிகா, கோவை சரளா, பிரியதர்ஷினி, என்று பலர் நடித்திருந்தனர். நேற்று வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் திருநங்கைகளைக் கௌரவிக்கும் விதமாக திருநங்கைகளுக்காகச்  சிறப்புக் காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

lawrence

இந்நிலையில் புதிய படங்கள் திரைக்கு வந்தால் உடனே அது திருட்டுத்தனமாகத் தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையத்தில் வெளி வருவது வழகமான ஒன்று ஆகிவிட்டது. இதுவரை, நடிகர் சங்கம் மட்டுமல்ல, தயாரிப்பாளர் சங்கம் உள்பட வேறு எந்த சங்கத்தாலும் திருட்டுத்தனமாகப் படங்களை வெளியிடும் இணையதளங்களை முடக்க முடியவே இல்லை. 

kanchana

இந்த நிலையில் காஞ்சனா 3 திரைப்படம் வெளியாகி சில மணி நேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியாகிப் படக்குழுவை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கோடை விடுமுறையில் படத்தை வெளியிட்டால் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எகிறும் என்று கணக்கிட்டு வெளியிட்டார் லாரன்ஸ். ஆனால் அந்த கனவில் தமிழ் ராக்கர்ஸ் மண்ணை போட்டுவிட்டது.                                                                                                                                                                                                      இதையும் படிங்க: ஒரு பொண்ண பாத்ததுமே அவள தூக்கிட்டு போய் ரேப் பண்ற தைரியம் எங்களுக்கு இருக்கு: நடிகர் விஷால் ஆவேசம்!                                                                            

மாவட்ட செய்திகள்

Most Popular

நெட்பிளிக்ஸிடம் விற்கப்பட்டது மாஸ்டர்

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர்.சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்த படத்தின் ஒட்ட்மொட்த உரிமையையும் லலித் கைப்பற்றியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாவது...

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் அமைச்சர் விஜயபாஸ்கர்!

அதிர்ஷ்டவசமாக அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 42 பயணிகள் உயிர் தப்பி இருக்கிறார்கள். விமானம் புறப்பட தயாராக இருந்த நேரத்தில் விமானிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் கடைசி...

கேரளாவுக்கு கடத்த முயன்ற 850 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்- இருவர் கைது

தேனி சின்னமனூரில் இருந்து கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 850 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள்,...

பூவே பூச்சூடவா, பாண்டியன் ஸ்டோரில் நடித்துவரும் பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி!

பூவே பூச்சூடவா சீரியலில் நடித்து வரும் நடிகை கெளசல்யா செந்தாமரைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜீ தமிழ்...
Do NOT follow this link or you will be banned from the site!