லாட்ஜில் மயக்கநிலையில் மீட்கப்பட்ட கள்ளக்காதல் ஜோடி: போலீசுக்கு பயந்து தற்கொலை முயற்சி!

 ரிஜோஷ் ரிசார்ட் ஒன்றில் பணிபுரிந்து வந்ததால் அதன் அருகிலேயே வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கி வந்துள்ளார். 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சாந்தம்பாறையை சேர்ந்தவர்  ரிஜோஷ். இவருக்கு லிஜி  என்ற மனைவியும் குழந்தையும் உள்ளனர்.  ரிஜோஷ் ரிசார்ட் ஒன்றில் பணிபுரிந்து வந்ததால் அதன் அருகிலேயே வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கி வந்துள்ளார். 

kerala

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு  ரிஜோஷை காணவில்லை என்று கூறி அவரது உறவினர்கள் சாந்தம்பாறை காவல்நிலையத்தில் புகார் கூறியுள்ளனர். அப்போது மனைவி  பயப்பட வேண்டாம், அவர் என்னுடன் செல்போனில் பேசினார் என்று கூறி கால் லிஸ்டை காண்பித்துள்ளார். இருப்பினும் சில தினங்களுக்கு பிறகு மீண்டும் ரிஜோஷ் உறவினர்கள் போலீசில் புகார் அளிக்க போலீசாருக்கு மனைவி லிஜி  மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

murder

இதையடுத்து கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு லிஜி  தனது குழந்தையுடன் காணாமல் போயுள்ளார். மேலும் ரிசார்ட்டின் உரிமையாளர் வாசிம் அப்துல் காதரும் தலைமறைவாகியுள்ளார். இதனால்  போலீசார் விசாரணையை தீவிரப்படுத்த, ரிசார்டின்  பின்புறம் புதிதாக மணல் குவியல் இருந்துள்ளது. அதை தோண்டி பார்த்தபோது சாக்கு மூட்டையில் சடலமாக ரிஜோஷ் கிடந்துள்ளார். இதிலிருந்து,  வாசிம் அப்துல் காதருக்கும் லிஜிக்கும்  கள்ளக்காதல் இருந்ததால், இடையூறாக இருந்த ரிஜோஷை மதுவில் விஷத்தை கலந்து கொடுத்து கொன்றது   அம்பலமானது.

இதை தொடர்ந்து  வாசிம் அப்துல் காதரின் சகோதரருக்கு வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்று வந்துள்ளது. அதில் ரிஜோஷ் கொலை வழக்கில் நான் தான் குற்றவாளி. இதில் என் குடும்பத்துக்கு எந்த சம்பந்தமுமில்லை’ என்று கூறியுள்ளார். 

kerala

லிஜி -ரிஜோஷ் செல்போன் எண்களை  வைத்து, அவர்களின் இருவரும்  குமுளியில் இருப்பது தெரியவந்தது. ஒருவேளை அவர்கள் தப்பிவிட கூடாது என்று  தமிழக போலீசாருக்கும் இருவரின் புகைப்படமும் அனுப்பப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர். 

liji

இந்நிலையில் மும்பை பனவேலியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் ரிஜோஷின் மனைவி லிஜி, இரண்டு வயது மகள் ஜோவனா, காதலன் வசிம் அப்துல் காதர்  ஆகியோர் இருப்பது தெரியவந்தது. இதனால் அங்கு மகாராஷ்டிரா போலீசார் விரைந்தார். இதில் லிஜி  மற்றும் அப்துல் காதர் மயக்க நிலையிலும், குழந்தை ஜோவனா இறந்தும் கிடந்துள்ளாள். இதையடுத்து அனைவரும் விஷம் அருந்தி இருந்த நிலையில், ஆபத்தான நிலையிலிருந்த லிஜிக்கும் அப்துல் காதருக்கும் மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இதை தொடர்ந்து  இடுக்கி தனிப்படை போலீசார் மும்பை விரைந்துள்ளனர்.

போலீசில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காகக் குழந்தைக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு லிஜியும் – வசிம் அப்துல் காதரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  
 

Most Popular

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....

அடுத்த ஆண்டு இந்தியாவில் டி 20 உலகக்கோப்பை- ஐசிசி

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக், விம்பிள்டன் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் வைரஸ் பாதிப்பு எப்போது முடிவுக்கும் வரும் என தெரியாததால் எதிர்வரும்...