லண்டன் மற்றும் சிங்கப்பூர் அலுவலகங்களை தற்காலிகமாக மூடியது பேஸ்புக் நிறுவனம்

பேஸ்புக் நிறுவனம் லண்டன் மற்றும் சிங்கப்பூர் அலுவலகங்களை தற்காலிகமாக மூடியது.

லண்டன்: பேஸ்புக் நிறுவனம் லண்டன் மற்றும் சிங்கப்பூர் அலுவலகங்களை தற்காலிகமாக மூடியது.

கொரோனா வைரஸ் காய்ச்சலால் உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸை எதிர்கொள்ள பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

facebook

மேலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பேஸ்புக் நிறுவனம் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றும்படி கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலையில், பேஸ்புக் நிறுவனம் லண்டன் மற்றும் சிங்கப்பூர் அலுவலகங்களை தற்காலிகமாக மூடியது. இவ்விரு அலுவலகங்களிலும் கொரோனா வைரஸ் பாதித்த ஒரு ஊழியர் பணிபுரிந்து வந்ததால் பாதுகாப்பை முன்னிட்டு இந்த நடவடிக்கையை பேஸ்புக் நிறுவனம் எடுத்துள்ளது.

Most Popular

மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா!

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் தமிழகத்தில் அதிக அளவில் பரவி வருகிறது. இதனை தடுக்க அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் இணைந்து அதிரடி...

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி லாபம் ஈட்ட முயன்ற பதஞ்சலிக்கு ரூ.10 லட்சம் அபராதம்

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி மக்களின் அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயன கலவையை...

’இந்த லிஸ்ட்டில் நானா?’ கிரிக்கெட்டர் மிதாலி ராஜ் ஆச்சரியம் – டாப்ஸி பெருமை!

ஆண்கள் மட்டுமே கோலோச்சிய வந்த கிரிக்கெட் உலகத்தில் ஒரு பெண் சட்டென்று எல்லோரின் பார்வையையும் தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர் மிதாலி ராஜ். ஆண்கள் கிரிக்கெட்டில் சச்சின் எப்படி கருதப்பட்டரோ அதற்கு...

கொரோனா காரணமாக நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க கோரி மனு!

நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மே மாதம் நடைபெறவிருந்த நீட் தேர்வு ஜூலை 26-ஆம் தேதிக்கு...