Home லைப்ஸ்டைல் ரோல்ஸ் ராய்ஸ் கார்...உருவான கதையும், அதன் பின்னணியில் உள்ள கட்டுக்கதைகளும்!?

ரோல்ஸ் ராய்ஸ் கார்…உருவான கதையும், அதன் பின்னணியில் உள்ள கட்டுக்கதைகளும்!?

ஃபிரடெரிக் ராய்ஸ், என்கிற இங்கிலாந்து சிறுவனுக்கு கார்களின் மேல் அலாதி காதல். அதிகம் படிப்பறிவு இல்லாத ராய்ஸ் தனது இருபத்தி ஒன்றாவது வயதில், கார்களுக்கான உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் பட்டறையை இங்கிலாந்தின் சசெக்ஸ் நகரில் துவங்கினான்.

காரின் கதை

ஃபிரடெரிக் ராய்ஸ், என்கிற இங்கிலாந்து சிறுவனுக்கு கார்களின் மேல் அலாதி காதல். அதிகம் படிப்பறிவு இல்லாத ராய்ஸ் தனது இருபத்தி ஒன்றாவது வயதில், கார்களுக்கான உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் பட்டறையை இங்கிலாந்தின் சசெக்ஸ் நகரில் துவங்கினான். நாற்பதாவது வயதில்தான் அவனால் டெக்சாவைஸ் என்கிற காரை வாங்க முடிந்தது. அதை ஓட்டிப்பார்த்த ராய்ஸ்சுக்கு அந்த காரின் செயல் திறன் திருப்தி இல்லை. அப்போதுதான் தானே ஒரு காரை சொந்தமாக செய்தால் என்ன என்கிற ஆர்வம் வந்தது செயலில் இறங்கினான்.

rolls roys car

பிறந்தது ரோல்ஸ் ராய்ஸ்

1904 ம் ஆண்டு தன் கையாலேயே செய்த முதல் காரை ஓட்டி மகிழ்ந்தார் ராய்ஸ். அப்போதுதான் ராய்ஸுக்கு ஸ்ட்டூவர்ட் ரோல்ஸ் என்கிற கார் டீலர் அறிமுகனானார். ரோல்ஸ்,பெரும் பணக்காரர். அவரும் ராய்ஸின் காரை ஓட்டிப்பார்த்தார், அவருக்கும் அந்தக் கார் பிடித்துப்போகவே ராய்ஸுடன் சேர்ந்து கார் தயாரிக்கும் தொழிலில் இறங்கினார். 1906 ல் இங்கிலாந்தில் நடந்த கார் பந்தயத்தில் ரோல்ஸ்ராய்ஸ் வென்றவுடன் அதன் புகழ் நாடு முழுவதும் பரவி விட்டது.

இந்தியாவிற்கு வந்தது

1908 ம் ஆண்டு அன்றைய பம்பாய் நகரில் நடந்த கார் ரேஸில் கலந்து கொண்டு வென்ற ரோல்ஸ் ராய்ஸ் காரைப் பார்த்ததுமே காதல் கொண்டுவிட்டார் அன்றைய குவாலியர் ராஜாவாயிருந்த இரண்டாம் மாதவராவ் சிந்தியா. அந்த மைதானத்துலேயே காரை வாங்கிக்கொண்டு போய்விட்டார். அதன் பிறகு அத்தனை மகாராஜாக்களுக்குமே ரோல்ஸ் ராய்ஸ் வைத்திருப்பதுதான் அந்தஸ்த்தின் அடையாளமாகிவிட்டது.

rolls roys car india

பாடியாலா ராஜா பழிவாங்கினாரா

லண்டனுக்கு போயிருந்த பாட்டியாலா மகாராஜா ஒருநாள் காலையில் சாதாரண உடையில் வாக்கிங் போன போது ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூமைப் பார்த்ததும் ஆர்வமாக ஷோரூமுக்குள் நுழைந்திருக்கிறார். அவரது தோற்றத்தைப் பார்த்த பணியாளர்கள் உள்ளே அனுமதிக்க மறுத்து விரட்டி விட்டார்களாம்!

maharaj

ஹோட்டலுக்கு வந்த மகாராஜா, குளித்து ராஜாவுக்கே உரிய உடைகள் இன்ன பிற அலங்காரங்கள் என அட்டகாசமாக ரெடியாகியதும், தான் வருவதை முன்கூட்டியே தொலைபேசியில் அறிவித்துவிட்டு ரோல்ஸ்ராய்ஸ் ஷோரூமுக்கு போயிருக்கிறார். வருவது மிகப்பெரிய ராஜா என்ற தகவல் தெரிந்ததும், அட்டகாசமான ஏற்பாடுகள் எல்லாம் பண்ணி, சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தார்களாம் ரோல்ஸ்ராய்ஸ் ஷோர் ரூமில்.

ராஜா, அப்போது ஷோரூமில் இருந்த ஏழு கார்களையும் வாங்கி விட்டாராம். ரோல்ஸ்ராய்ஸ் கம்பெனிக்கும் இந்த பல்க் பர்ச்சேசால் மகிழ்ச்சி.ஆனால், அந்த கார்கள் கப்பலேறி இந்தியாவுக்கு வந்ததும் பாட்டியாலா மகாராஜா போட்ட உத்தரவு ரோல்ஸ்ராய்ஸ் கம்பெனியை கதற வைத்துவிட்டதாம். மகாராஜா வாங்கி வந்த ஏழு கார்களிலும் டயருக்கு பின்னால் இருக்கும் மட் ஃபிளாப்புக்கு பதிலாக அந்தக்காலத்து விளக்கமாறுகளை கட்டிவிட்டு, அந்த கார்களை பாட்டியாலா நகரில் குப்பை அள்ள பயன் படுத்த உத்தர விட்டாராம்.

பதறிப்போன கம்பெனி மகாராஜாவிடம் மன்னிப்பு கேட்டது என்பது ஒரு கதை.இதும்  ‘அப்படித்தாம் ஒரு நாள், அப்துல் கலாம் ஆட்டோவில் போனபோது’ என்பது போன்ற  யாரோ வயிற்றெரிச்சல் காரனின் கற்பனைக்  கதைதான். 

மல்லிலிகா ஷெராவ்த் கதை

பாலிவுட் கவர்ச்சி நட்சத்திரம் மல்லிகா ஷெராவத் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்க ஆசைப்பட்டதாகவும் ஆனால் அவருக்கு காரை விற்க கம்பெனி மறுத்து விட்டதாகவும் கொஞ்ச நாள் முன்னாள் இந்திய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன! ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்க விரும்புபவரின் குடும்ப பாரம்பரியம் அவரது சமூக அந்தஸ்த்து ஏன், அவரது வீட்டைக்  கூட வந்து பார்ப்பார்கள் என்று பல தலை முறையாய் ஒரு கதை இருக்கிறது.

maliga saravath

இதுவும் இன்றைய வாட்ஸ்-அப் வதந்திகள் போன்ற கப்ஸாதான். உங்களிடம் காசிருந்தால் இரண்டரை லட்சம் டாலர், டாலரின் இந்திய மதிப்பு மாறிக்கொண்டே இருப்பதால் அப்படியே எடுத்துக்க வேண்டாம். குத்து மதிப்பாக நம்ம ஊர் பணம் இரண்டு கோடி இருந்தால் பேஸிக் மாடல் ரோல்ஸ்ராய்ஸ் காரை வாங்கிறலாம். அதிகப் பட்ச விலை எவ்வளவு என்பது தெரிந்தால் நீங்கள் மயக்கமாவது நிச்சயம்.

அடுத்த அப்டேட்டுக்காக காத்திருங்கள்…

மாவட்ட செய்திகள்

Most Popular

‘பொருளாதார நெருக்கடி’ அமமுகவை கலைக்கும் தினகரன்?!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தினகரன் கலைக்கவுள்ளதாக கடந்த சில நாட்களாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. சசிகலா அரசியலில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தது தினகரனுக்கு பேரதிர்ச்சியாம். அமமுக...

“எத்தன சீட்டு கொடுத்தாலும் ஏத்துக்குறோம்… சூரியன் சின்னத்துக்கும் ஓகே” – வேல்முருகன் ஓபன் டாக்!

பெரிய கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை திமுக ஒருவழியாக முடித்துவிட்டது. தற்போது சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. சிறிய கட்சிகளைப் பொறுத்தவரை பெரிதாகப் பேரம் பேசாமல் கொடுக்கும் இடங்களைப் பெற்றுக்கொள்ளும் மனநிலையிலேயே...

சத்தியமங்கலத்தில் ஓடும் காரில் திடீர் தீ விபத்து… அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பிய தம்பதி…

ஈரோடு சத்தியமங்கலம் அருகே சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை...

சரத்குமார் கட்சிக்கு இத்தனை தொகுதியா?.. வாய் பிளக்கும் கூட்டணி கட்சிகள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே எஞ்சியிருக்கின்றன. வரும் 15ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கவிருக்கிறது. அதனால், அரசியல் கட்சிகள் அனைத்தும் விறுவிறுப்பாக தொகுதி பங்கீடு...
TopTamilNews