Home சினிமா ரொம்பத்தான் கலாய்க்கிறாங்க: பொறுத்தது போதுமென பொங்கி எழுந்த பிக் பாஸ் ஜூலி!

ரொம்பத்தான் கலாய்க்கிறாங்க: பொறுத்தது போதுமென பொங்கி எழுந்த பிக் பாஸ் ஜூலி!

பிக் பாஸ் புகழ் நடிகை ஜூலி, தன்னை கலாய்ப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை: பிக் பாஸ் புகழ் நடிகை ஜூலி, தன்னை கலாய்ப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். 

‘ஜல்லிக்கட்டு’ போராட்டத்தின் மூலம் வீர தமிழச்சியாக அறியப்பட்ட ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்ட ஜூலியை சரமாறியாக கலாய்க்க சமூக வலைத்தளங்களில் எக்கச்செக்கமான ஆர்மிகள் உள்ளன.

julie

பிக் பாஸ் நிகழ்ச்சியிம் முதல் சீசன் முடிந்து, இரண்டாவது சீசனும் முடிந்துவிட்டது ஆனால், ஜூலியை கலாய்ப்பது மட்டும் ஓயவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த ஜூலி, திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அவர் ஹீரோயினாக மாறியும் அவரை ஹேட்டர்ஸ்கள் விடுவதாக இல்லை.

சமீபத்தில் தீபாவளி பண்டிகைக்கு தனது செல்ல பிராணியுடன் வாழ்த்துக் கூறி ஜூலி வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதனை பங்கமாக கலாய்த்த நெட்டிசன்கள், நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜூலியை சீண்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

biggbossjulie

இந்நிலையில், ஹேட்டர்ஸ்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக ஜூலி ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அதையும் விட்டுவைக்காத நெட்டிசன்கள் இன்னும் அதிகமாக கலாய்க்கத் தொடங்கிவிட்டனர். அந்த ட்வீட்டில் எழுத்துப்பிழை இருந்ததால் ஜூலி போட்ட வேகத்தில் ட்வீட்டை நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews