Home சினிமா ரெண்டு கல்யாணமும் விவாகரத்தில் முடிந்தது ஏன்? - புலம்பும் மலையாள நடிகை

ரெண்டு கல்யாணமும் விவாகரத்தில் முடிந்தது ஏன்? – புலம்பும் மலையாள நடிகை

மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக தன்மத்ரா என்ற படத்தில் அறிமுகமானவர் மீரா வாசுதேவன். முதல் படமே சூப்பர் ஹிட் என்றாலும் தொடர்ந்து பட வாய்ப்புகள் அவருக்கு சரியாக அமையவில்லை. இவர் தமிழில் உன்னை சரணடைந்தேன், ஆட்டநாயகன், அடங்கமறு உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

ரெண்டு கல்யாணமும் விவாகரத்தில் முடிந்தது ஏன்? - புலம்பும் மலையாள நடிகை

மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக தன்மத்ரா என்ற படத்தில் அறிமுகமானவர் மீரா வாசுதேவன். முதல் படமே சூப்பர் ஹிட் என்றாலும் தொடர்ந்து பட வாய்ப்புகள் அவருக்கு சரியாக அமையவில்லை. இவர் தமிழில் உன்னை சரணடைந்தேன், ஆட்டநாயகன், அடங்கமறு உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

thanmathra

பட வாய்ப்பு சரியாக இல்லாததால் பிரபல ஒளிப்பதிவாளர் அசோக் குமாரின் மகன் விஷாலை 2005ம் ஆண்டு திருமணம் செய்தார். ஆனால் அவர்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்லவில்லை. 2010ல் விவாகரத்து பெற்றார். இதன் பிறகு நடிகர் ஜான் கொக்கனை இரண்டாவதாக திருமணம் செய்தார். இதுவும் விவாகரத்திலேயே முடிந்தது. இவர்களுக்கு அரிஹா என்ற மகன் உள்ளார்.

meera-vasudevan-09

இந்த நிலையில் தன்னுடைய சினிமா வாழ்க்கை வெற்றி பெறாததற்கு என்னுடைய மேனேஜர்தான் காரணம் என்று கூறியிருந்தார் மீரா வாசுதேவன். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது மேலும் ஒரு பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டி பரபரப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. அவரிடம் திருமண வாழ்க்கை பற்றிக் கேட்டபோது, “என் திருமண வாழ்க்கையைப் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. முதல் திருமணத்தால் கணவன் மூலம் அனுபவித்த கொடுமைகள் அதிகம். உடல் ரீதியான கொடுமைகள் மட்டுமல்ல… மன ரீதியான கொடுமை, சித்ரவதைகளை அனுபவித்தேன். என் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டதால் போலீஸ் வரை பிரச்னை சென்றது. பிறகு 2012ல் இரண்டாவது திருமணம் செய்தேன். அந்த திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியைத் தரவில்லை. அவருடன் மன ரீதியாக பழக முடியவில்லை. அதுவும் விவாகரத்தில் முடிந்தது” என்றார்.

ரெண்டு கல்யாணமும் விவாகரத்தில் முடிந்தது ஏன்? - புலம்பும் மலையாள நடிகை
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“மதத்தின் பெயரால் கோவில்களில் துன்புறுத்தப்படும் யானைகள்” – முடிவு கட்டும் நேரமிது என ஹைகோர்ட் கருத்து!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உள்ள ஆண்டாள், லட்சுமி என்ற இரு யானைகளையும் பராமரிப்பது தொடர்பாகவும், பாகன்கள் நியமிப்பது தொடர்பாகவும், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பொது நல வழக்கை...

சமயபுரம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.22 கோடி வசூல்!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.22 கோடி ரொக்கம், இரண்டரை கிலோ தங்கம் உள்ளிட்டவை வசூலாகி உள்ளது. திருச்சி...

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மூச்சுத் திணறல் காரணமாக கடந்த மாதம் 18 ஆம்...

மாமியாரை அடித்துக்கொன்ற மருமகள் -திருப்பூர் பயங்கரம்

திருப்பூர் மாவட்டம் திலகர் நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி மங்காத்தா. பல ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் இரண்டாவது திருமணம் செய்ய ராமசாமி முடிவெடுத்ததால் ராமசாமியை விட்டு...
- Advertisment -
TopTamilNews