Home உலகம் ரூ.4300 கோடிக்கு பில்கேட்ஸ் வாங்கி உலகின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் சொகுசு கப்பல்!

ரூ.4300 கோடிக்கு பில்கேட்ஸ் வாங்கி உலகின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் சொகுசு கப்பல்!

இந்த கப்பலில் திரவநிலை ஹைட்ரஜன் மிகக் குறைந்த தட்பவெட்பநிலையில் காற்று அடைக்கப்பட்ட டேங்கில் பாதுகாப்பாக வைத்திருக்கப்படும். இந்த திரவ ஹைட்ரஜன்தான் ப்ரோட்டான் எக்ஸ்சேஜ் மெமரைன் வழியாகப் பயணித்து மின் ஆற்றலாக மாறி கப்பலை இயக்குகிறது.

ரூ.4300 கோடிக்கு பில்கேட்ஸ் வாங்கி உலகின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் சொகுசு கப்பல்!

உலக கோடீஸ்வரர்களுள் ஒருவரான பில்கேட்ஸ் உலகின் முதல் ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு செயல்படும் சொகுசு கப்பல் ஒன்றை ரூ.4500 கோடிக்கு வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

billgates.jpg1

மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 600 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 4300 கோடி ரூபாய்) கொடுத்து 376 அடி நீளம் கொண்ட முழுக்க முழுக்க ஹைட்ரஜனால் இயங்கக் கூடிய சொகுசு கப்பல் ஒன்றை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளதாக ஃபோர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 
இந்த கப்பலில் திரவநிலை ஹைட்ரஜன் மிகக் குறைந்த தட்பவெட்பநிலையில் காற்று அடைக்கப்பட்ட டேங்கில் பாதுகாப்பாக வைத்திருக்கப்படும். இந்த திரவ ஹைட்ரஜன்தான் ப்ரோட்டான் எக்ஸ்சேஜ் மெமரைன் வழியாகப் பயணித்து மின் ஆற்றலாக மாறி கப்பலை இயக்குகிறது. இந்த செயல்பாடு மூலம் துணைப் பொருளாக சுத்தமான தண்ணீர் உற்பத்தியாகும். இதனால் சுற்றுச்சூழலுக்கு துளி கூட மாசு ஏற்படுத்தாமல் இந்த கப்பல் பயணிக்கும். 

billgates

இது குறித்து கப்பலை டிசைன் செய்து வரும் சாண்டர் சினாட் கூறுகையில், “ஒவ்வொரு கப்பலை வடிவமைப்பதும் எங்கள் குழுவினருக்கு சவாலான வேலைதான். இந்த கப்பலை அதன் உரிமையாளரின் விருப்பத்துக்கு ஏற்ப, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் தயாரித்து வருகிறோம். பரந்துவிரிந்த கடலில் இந்த கப்பல் அதிகபட்சமாக 17 நாட்ஸ் வேகத்தில் 3750 கடல் மைல் தூரத்துக்கு பயணிக்கும்” என்றார்.

billgates.jpg3

இந்த பிரம்மாண்ட சொகுசு கப்பல் ஐந்து தளங்களைக் கொண்டது. மேலே ஹெலிபேட், இரண்டு வி.ஐ.பி-க்கள் தங்கும் அறைகள், பிரம்மாண்ட காட்சி அரங்கம், உடற்பயிற்சிக் கூடம், மசாஜ், யோகா அறை, நீச்சல் குளம் என எல்லா வசதிகளும் நிறைந்ததாக இருக்கும். இந்த கப்பல் 2025-க்குள் தயாரிக்கப்பட்டு பில்கேட்சிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ரூ.4300 கோடிக்கு பில்கேட்ஸ் வாங்கி உலகின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் சொகுசு கப்பல்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

குழந்தைகள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்து உடல்கள் மிதக்கும் வரை.. வெறித்து பார்த்துக் கொண்டிருந்த தாய்

பெற்ற குழந்தைகளை கிணற்றுக்குள் வீசியதில் அக்குழந்தைகள் தண்ணீருக்குள் மூழ்கி உயிரிழந்து உடல்கள் மேலே வந்து மிதக்கும் வரைக்கும் வெறித்து பார்த்து கொண்டிருந் திருந்கிறார். ஆட்கள் அருகே வந்ததும் தான் தற்கொலை...

2 நாட்களில் மூட்டைக்கு ரூ.55 குறைந்த சிமெண்ட் விலை!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக 70% கட்டுமான பணிகள் தேக்கமடைந்துள்ளன. கட்டுமானப் பணிகளுக்கு அழைத்து வரப்பட்டு பணி செய்து வரும் வட மாநில தொழிலாளர்கள் பொதுமக்கள் காரணமாக சொந்த...

விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்- முதல்வர் ஆலோசனை

விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

12 ஆம் வகுப்பு மாணவியுடன் நெருக்கமாக இருந்த முன்னாள் ஆசிரியருக்கு வலைவீச்சு

திண்டுக்கல் மாவட்டம் ஆரணி அருகே 12-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் ஆசிரியரும், அரசு ஊழியருமானவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- Advertisment -
TopTamilNews