Home தொழில்நுட்பம் ரூ.199 மற்றும் ரூ.399 ரீசார்ஜ் பிளான்களில் கூடுதல் சலுகைகள்: வோடபோன் அசத்தல்

ரூ.199 மற்றும் ரூ.399 ரீசார்ஜ் பிளான்களில் கூடுதல் சலுகைகள்: வோடபோன் அசத்தல்

வோடபோன் நிறுவனம் ரூ.199 மற்றும் ரூ.399 ரீசார்ஜ் பிளான்களை அப்டேட் செய்துள்ளது.

ரூ.199 மற்றும் ரூ.399 ரீசார்ஜ் பிளான்களில் கூடுதல் சலுகைகள்: வோடபோன் அசத்தல்

மும்பை: வோடபோன் நிறுவனம் ரூ.199 மற்றும் ரூ.399 ரீசார்ஜ் பிளான்களை அப்டேட் செய்துள்ளது.

வோடபோன் நிறுவனம் ரூ.199 மற்றும் ரூ.399 விலையில் வழங்கி வரும் பிரீபெயிட் சலுகைகளை மாற்றுவதாக அறிவித்துள்ளது. அதனால் இரு சலுகைகளிலும் பயனர்களுக்கு கூடுதல் பலன்கள் கிடைக்கிறது. வோடபோன் ரூ.199 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜிபி 2ஜி / 3ஜி / 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கும் இந்த சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 42 ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் வரம்பற்ற ரோமிங் வழங்கப்படுகிறது. முன்னதாக தினமும் 1.4 ஜி.பி. டேட்டா வழங்கப்பட்ட நிலையில், தற்சமயம் 100 எம்.பி. கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

அதேபோல ரூ.399 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கும் சலுகையில் பயனர்களுக்கு 84 ஜிபி டேட்டா கிடைக்கும். முன்னதாக இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.4 ஜி.பி. டேட்டா 70 நாட்களுக்கு வழங்கப்பட்டது. அந்த வகையில் தற்சமயம் வேலிடிட்டி நீட்டிக்கப்பட்டு, தினசரி டேட்டா அளவு குறைக்கப்பட்டுள்ளது. இரண்டு சலுகைகளிலும் தினசரி வாய்ஸ் கால் அளவு 250 நிமிடங்களுக்கும், வாரம் 1000 நிமிடங்கள் என கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ரூ.199 மற்றும் ரூ.399 ரீசார்ஜ் பிளான்களில் கூடுதல் சலுகைகள்: வோடபோன் அசத்தல்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

நகைக்கடையில் ரூ.5 லட்சம் திருடிய காவலர்கள் – சென்னை காவல் ஆணையருக்கு அதிரடி உத்தரவு!

சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவலர்களாக முஜிப் ரஹ்மான், சுஜின் ஆகியோர் பணியாற்றினர். அந்தப் பகுதியில் பாதி ஷட்டர் திறக்கப்பட்ட நிலையில் இருந்த நகைக்கடையை கண்ட இவர்கள், ஊரடங்கு காலத்தில்...

டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்!

விருதுநகர் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு கிளம்பி சென்றனர்.

நாளை மறுநாள் முதல் அருங்காட்சியகங்கள் திறக்கப்படும் – மத்திய தொல்லியல் துறை அறிவிப்பு!

கொரோனா காரணமாக இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்கள் வரும் 16ஆம் தேதி முதல் திறக்கப்படும் என மத்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம்...

39 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் மேலும் 39 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். உள், மதுவிலக்கு மற்றும்...
- Advertisment -
TopTamilNews