Home இந்தியா ரூ.10 லட்சத்துக்கு மின்சார கார்- ஹூண்டாய் அதிரடி!

ரூ.10 லட்சத்துக்கு மின்சார கார்- ஹூண்டாய் அதிரடி!

இந்தியாவில் ரூ.10 லட்சத்துக்கு விற்பனைக்கு செய்யும் வகையில் மின்சார கார் தயாரிக்க ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்ய உள்ளது.

காற்று மாசுவால் லட்சக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் உயிர் இழந்து வருகின்றனர். மேலும், வாகனங்கள் வெளியிடும் புகையால் சுற்றுப்புறச்சூழலுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு சுற்றுப்புறச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மின்சார வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என பலரும் தற்போது வலியுறுத்தி வருகின்றனர்.

ஹூண்டாய்  கோனா

மத்திய அரசும் தற்போது மின்சார வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மின்சார வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. மேலும், 150 சிசி திறனுக்கு குறைவான அனைத்து இருசக்கர, மூன்று சக்கர வாகன தயாரிப்புகளும் மின்சார வாகனங்களாக இருக்க வேண்டும் என்றும், அதற்காக வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு சில ஆண்டுகள் காலஅவகாசமும் மத்திய அரசு வழங்கியுள்ளது.

அதேசமயம் பல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் மின்சார கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. அதில் ஒன்றுதான் தென்கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய். அந்த நிறுவனம் சமீபத்தில் கோனா எஸ்.யூ.வி. மின்சார காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ.25 லட்சத்துக்கும் மேல் என்பதால் விற்பனை பெரிய அளவில் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய்

அதேசமயம் ஹூண்டாய் நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களை கவரும் வகையில், ரூ.10 லட்சம் விலையில் மின்சார கார் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக தனது சென்னை ஆலையில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்ய உள்ளது. மேலும், சுசுகி மற்றும் டொயோட்டோ நிறுவனங்களை போன்று இந்தியாவில் மின்சார பேட்டரி ஆலையை தொடங்கவும் ஹூண்டாய் யோசனை செய்து வருகிறது. இதற்காக தகுந்த கூட்டாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

ஸ்டாலினை தோற்கடிப்பது எப்படி? கராத்தே தியாகராஜன் சொல்லும் ஐடியா!

தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது, அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மயிலாப்பூர், காரைக்குடி, சேப்பாக்கம் ,வேளச்சேரி ,காஞ்சிபுரம், திருத்தணி, பழனி, சிதம்பரம்,...

சலசலப்பை ஏற்படுத்திய மணிசங்கர் அய்யர்; சரிகட்டும் ஜோதிமணி

கே.எஸ்.அழகிரியின் கண்ணீருக்கு கிடைத்த பரிசுதான் 25 சீட்டு. இத்தனை பாடுபட்டு கண்ணீர் சிந்தி அவர் 25 சீட்டு வாங்கியிருக்கும்போது, அதிகமான இடங்கள் வாங்கினாலும் ஜெயிக்க முடியாது என்று காங்கிரசாரே சொல்லி...

திமுகவின் முக்கிய அறிவிப்பு : ஆவலுடன் கூட்டணி கட்சிகள்!

திமுக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்த நிலையில் இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும்.. மாநிலங்களவையில் பா.ஜ.க. பெண் எம்.பி. கோரிக்கை

பெண்கள் தினம் கொண்டாடுவது போல் சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று மாநிலங்களவையில் பா.ஜ.க. பெண் எம்.பி. சோனல் மான்சிங் கோரிக்கை விடுத்தார்.
TopTamilNews