Home சினிமா ரூட் மாறும் நடிகை ஐஸ்வர்யா ராய்! பணத்தை பெருக்க பலே ஐடியா!

ரூட் மாறும் நடிகை ஐஸ்வர்யா ராய்! பணத்தை பெருக்க பலே ஐடியா!

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பெங்களூரு ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்றில் ரூ.1 கோடி முதலீடு செய்துள்ளார்.

பொதுவாக நடிகர், நடிகைகள் தங்களது வருமானத்தில் ரியல் எஸ்டேட், விலையுயர்ந்த ஆபரணங்கள் ஆகியவற்றில் அதிகளவில் முதலீடு செய்வது வாடிக்கை. அதுதவிர, துபாய் போன்ற நாடுகளில் வீடு வாங்குவதும் உண்டு. ஆனால் சமீபகாலமாக நடிகர், நடிகைகள் நிறுவனங்களில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. உதாரணமாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்து உள்ளார். நடிகர் அக்சய் குமார் கோகி என்ற நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக கடந்த மாதம் தகவல் வெளியானது.

ஸ்டார்ட்அப் நிறுவனம்

அதுபோல், தற்போது நடிகர் அமிதாப்பச்சனின் மருமகளும், நடிகர் அபிஷேக் பச்சனின் மனைவியுமான நடிகை ஐஸ்வர்யா ராய் பெங்களூருவை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான அம்பீயில் முதலீடு செய்துள்ளார். காற்றின் தரத்தை டேட்டாவை பயன்படுத்தி அளவிடும் நிறுவனம் அம்பீ. கடந்த 2017ம் ஆண்டில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில்தான் ஐஸ்வர்யா ராயும், அவரது அம்மா விரிந்தா கே.ஆரும் ரூ.1 கோடி முதலீடு செய்துள்ளனர்.

அக்சய் ஷோஷி

ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா ராய் முதலீடு செய்வது இதுதான் முதல்முறை. இது குறித்து ஐஸ்வர்யா ராய் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதேபோல் அம்பீ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அக்சய் ஷோஷியும் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. 

மாவட்ட செய்திகள்

Most Popular

சொம்பால் அடித்து… சூலத்தால் வயிற்றை கிழித்து… மகள்களை நரபலி கொடுத்த விவகாரத்தில் உறைய வைக்கும் தகவல்கள்!

ஆந்திர மாநிலம் சித்தூரில் சொந்த மகள்களை நரபலி கொடுத்த சம்பவம் இந்தியாவேயே அதிர செய்திருக்கிறது. இதை அரங்கேற்றியது ஒரு கல்லூரியின் துணை முதல்வராக இருக்கும் தந்தையும், பேராசிரியராக இருக்கும் தாயும்...

கட்சியை கட்டிக்காத்த இரட்டையர்கள்- நெகிழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள் !

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தை, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் முன்னிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார். ஜெயலலிதாவுக்குப் பின்னர் அமைந்த இபிஎஸ் -...

சீர்காழியில் வடமாநில கொள்ளையன் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!

நகை வியாபாரியின் மனைவி மற்றும் மகனை கொலை செய்து 17 கிலோ தங்கம் திருடப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 3 வட மாநில கொள்ளையர்களில் ஒருவர் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் : சிறப்பம்சங்கள் என்ன?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தின் சிறப்பம்சங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம். கடந்த 2016ம் ஆண்டு...
Do NOT follow this link or you will be banned from the site!