Home தமிழகம் "ராமுவுக்கும் கொரோனா வந்துடுமோன்னு பயந்துட்டேன்".. நாய்க்கும் மாஸ்க் போட்டுவிட்டு வெளியே கூட்டிச்செல்லும் நபர்!

“ராமுவுக்கும் கொரோனா வந்துடுமோன்னு பயந்துட்டேன்”.. நாய்க்கும் மாஸ்க் போட்டுவிட்டு வெளியே கூட்டிச்செல்லும் நபர்!

பலர் அதன் பாதுகாப்பை உணராமல், மாஸ்க் அணியாமல் வெளியே சுற்றித்திரிகின்றனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்த பட்டிருப்பினும் பலர் அதன் பாதுகாப்பை உணராமல், மாஸ்க் அணியாமல் வெளியே சுற்றித்திரிகின்றனர். இந்நிலையில், ஒரு நபர் தான் வளர்க்கும் நாய்க்கும் மாஸ்க் அணிந்து, சானிடைசர் போட்டு விட்டு வெளியே கூட்டிச்செல்வது பாராட்டை பெற்றுள்ளது. 

ttn

கரூர் மாவட்டத்தை சேர்ந்த அசோகன் என்பவர் ராமு என்ற நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். கொரோனா பரவிதில் இருந்து ராமுக்கு அவர் மாஸ்க் அணிவித்து தான் வெளியே கூட்டிச் செல்கிறாராம். இது குறித்து பேசிய அசோகன், கடந்த 2 1/2 வருடங்களாக ராமுவுடன் தான் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறேன். எனக்கு அவன் மீதிலும்,  அவனுக்கு என் மீதிலும் அதிக அளவு பாசம். இப்போது பரவி வரும் கொரோனா வைரஸ் ஒரு புலிக்கு பரவி விட்டது என்று அறிந்து பயந்து விட்டேன். அதனால் தான் ராமுவுக்கு மாஸ்க் அணிந்து வெளியே கூட்டிச் செல்கிறேன். 

ttn

ராமுவை வெளியே கூட்டிச் சென்று வீட்டுக்கு வரும் போது, நானும் அவனும் கைகளில் சானிடைசர் போட்டு சுத்தப்படுத்திக் கொண்டு தான் உள்ளே செல்வோம். அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டும் தான் வெளியே செல்வேன்” என்று கூறியிருக்கிறார். இவரின் இந்த செயல் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.
 

மாவட்ட செய்திகள்

Most Popular

காதலிக்கக்கூறி வற்புறுத்திய ஒருதலை காதலன்… விரக்தியில் இளம்பெண் தற்கொலை

ஆரணி அருகே இளம்பெண்ணை காதலிக்க கூறி ஒருதலைக் காதலன் மிரட்டல் விடுத்ததால் விரக்தியில் இளம் பெண் தற்கொலைக்கு முயற்சித்தார். ஆரணி அடுத்த மோட்டுக்குடிசை கிராமத்தைச் சேர்ந்த...

குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை… கணவரிடம் போலீசார் விசாரணை…

திருச்சி துவரங்குறிச்சி அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி...

அரசு மருத்துவமனையிலிருந்து எம்ஜிஎம் கொண்டு செல்லப்பட்டார் அமைச்சர் காமராஜ்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அமைச்சர் காமராஜ், மியாட் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இருப்பினும் தொற்று பாதிப்பு...

தடுப்பூசி போட்டும் கட்டுக்குள் வராத கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 9கோடியே 56 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 20 லட்சத்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை...
Do NOT follow this link or you will be banned from the site!