ராமர் ஆனார் ராகுல்: சர்ச்சையை ஏற்படுத்திய போஸ்டரின் பின்னணி?

காங்கிரஸ் பேரணியை முன்னிட்டு ஒட்டப்பட்ட போஸ்டரில், ராகுல் காந்தியை ராமர் போல் சித்தரிக்கப்பட்ட போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னா: காங்கிரஸ் பேரணியை முன்னிட்டு ஒட்டப்பட்ட போஸ்டரில், ராகுல் காந்தியை ராமர் போல் சித்தரிக்கப்பட்ட போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரி 3-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் ‘ஜன் ஆகன்ஷா பேரணி’ பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விரைவாக நடைபெற்று வருகிறது. எல்லா இடங்களிலும் பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதில் ராகுல் காந்தியை ராமர் போல் சித்தரித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள், சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

 

இதுகுறித்து இந்த போஸ்டரை அச்சிட்டு ஒட்டிய காங்கிரஸ் ஊழியர் விஜய் குமார் சிங், “ராமராய் இருக்க அத்தனை தகுதிகளும் உடையவர் ராகுல் காந்தி, ராமர் பெயரை வைத்து அரசியல் செய்பவர்தான் நரேந்திர மோடி. காங்கிரஸ் இந்த நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபடுகிறது. அயோத்தி பிரச்சனையை தீர்க்க காங்கிரஸ் அரசால்தான் முடியும்” என தெரிவித்துள்ளார். பிப்ரவரி 3-ஆம் தேதி நடக்கவுள்ள பேரணியில், காங்கிரஸ் அம்மாநிலத்தில் தங்கள் பலத்தை காட்ட இருக்கிறது.

Most Popular

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....