Home தமிழகம் ராஜீவ்காந்தி கொலை வழக்கு : முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய நளினியின் மனு தள்ளுபடி!

ராஜீவ்காந்தி கொலை வழக்கு : முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய நளினியின் மனு தள்ளுபடி!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது பேரறிவாளன், ராபர்ட் பயஸ், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கு : முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய நளினியின் மனு தள்ளுபடி!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது பேரறிவாளன், ராபர்ட் பயஸ், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் நளினி வேலூர் பெண்கள் சிறையிலும், அவரது கணவன் முருகன் ஆண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். 28 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் நளினியும் முருகனும் தங்களை விடுவிக்கக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ttn

இவர்கள் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று பல தரப்பினர் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு முன்கூட்டியே அவர்களை விடுதலை செய்யத் தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அந்த தீர்மானத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் அளிக்காததால் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்களா.. இல்லையா என்பதில் குழப்பம் நிலவி வருகிறது. 

ttn

இந்நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து தங்களை முன்கூட்டியே விடுவிக்கக் கோரி சிறையில் இருக்கும் நளினி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனு இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில், தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய நளினி அளித்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.  
 

ராஜீவ்காந்தி கொலை வழக்கு : முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய நளினியின் மனு தள்ளுபடி!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு அரசு வழங்கும் மாத உதவித் தொகையை பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

குழந்தைகள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்து உடல்கள் மிதக்கும் வரை.. வெறித்து பார்த்துக் கொண்டிருந்த தாய்

பெற்ற குழந்தைகளை கிணற்றுக்குள் வீசியதில் அக்குழந்தைகள் தண்ணீருக்குள் மூழ்கி உயிரிழந்து உடல்கள் மேலே வந்து மிதக்கும் வரைக்கும் வெறித்து பார்த்து கொண்டிருந் திருந்கிறார். ஆட்கள் அருகே வந்ததும் தான் தற்கொலை...

2 நாட்களில் மூட்டைக்கு ரூ.55 குறைந்த சிமெண்ட் விலை!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக 70% கட்டுமான பணிகள் தேக்கமடைந்துள்ளன. கட்டுமானப் பணிகளுக்கு அழைத்து வரப்பட்டு பணி செய்து வரும் வட மாநில தொழிலாளர்கள் பொதுமக்கள் காரணமாக சொந்த...

விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்- முதல்வர் ஆலோசனை

விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
- Advertisment -
TopTamilNews