Home சினிமா ’ராஜா ராணி’ சீரியல் நடிகை ஆல்யாவுக்கும், எனக்கும் கல்யாணம் ஆகிடுச்சு! மனம் உருகும் சஞ்சீவ்!

’ராஜா ராணி’ சீரியல் நடிகை ஆல்யாவுக்கும், எனக்கும் கல்யாணம் ஆகிடுச்சு! மனம் உருகும் சஞ்சீவ்!

‘சரவணன் மீனாட்சி’ சீரியலுக்குப் பிறகு, ‘ராஜா ராணி’ சீரியலை கொண்டாடித் தீர்த்தனர், தமிழக மக்கள். ‘குளிர் 100 டிகிரி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்த சஞ்சீவையும், `மானாட மயிலாட’ ரியாலிட்டி ஷோ மூலம் சின்னத்திரை ரசிகர்களுக்குப் பரிச்சயமாகியிருந்த ஆல்யா மானசாவையும், ஹீரோ – ஹீரோயினாக்கி தொடங்கப்பட்ட சீரியல் இது.

‘சரவணன் மீனாட்சி’ சீரியலுக்குப் பிறகு, ‘ராஜா ராணி’ சீரியலை கொண்டாடித் தீர்த்தனர், தமிழக மக்கள். ‘குளிர் 100 டிகிரி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்த சஞ்சீவையும், `மானாட மயிலாட’ ரியாலிட்டி ஷோ மூலம் சின்னத்திரை ரசிகர்களுக்குப் பரிச்சயமாகியிருந்த ஆல்யா மானசாவையும், ஹீரோ – ஹீரோயினாக்கி தொடங்கப்பட்ட சீரியல் இது.

alya and sanjeev

2017,மே 29ல் ஆரம்பித்தது ராஜா ராணி சீரியல். இந்த சீரியல், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், அதில் நடித்து வந்த சஞ்சீவ் – ஆல்யா மானசா ஜோடி ரியல் லைஃப்பிலும் ஜோடிகளாகியிருக்கிறார்கள். இவர்களின் நிஜப்பெயரைவிட செம்பா – சின்னய்யா என்ற இவர்களது கதாபாத்திரங்கள் மக்கள் மனத்தில் நின்றன. இந்நிலையில், இருவரும் காதலிக்கிறார்கள் என்ற செய்திகள் வர, அதற்கு கொஞ்சமும் சளைக்காமல், ‘ஆமா… நாங்க ரியல் ஜோடிதான்’ என்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார்கள் இருவரும். அதன்பின், காதல் ஜோடிகளாக பல பேட்டிகள் கொடுத்தனர். விஜய் டி.வி-யில் வரும் ரியாலிட்டி ஷோக்களில் மட்டுமல்லாது எல்லா இடங்களுக்கும் சேர்ந்தே சென்றனர். இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்பது உறுதியானவுடன், இவர்களுக்கான ரொமான்டிக் காட்சிகள் இன்னும் அதிகமாக்கப்பட்டன.

alyasanjeev

விஜய் டி.வி விருது விழாவின் மேடையில் இவர்கள் இருவரையும் மாலை மாற்றச் சொல்லி நிச்சயதார்த்தம் செய்து வைத்தனர், விஜய் டி.வி நண்பர்கள். ‘அடுத்து எப்போ கல்யாணம்?’ என்ற பேச்சு கிளம்பியது. திடீரென்று,  “நாங்கள் இருவரும் ஆல்யா பிறந்த நாளான மே 27ம் தேதியன்று திருமணம் செய்து கொண்டோம்.  அன்னைக்குத் தான் ஆல்யாவுக்கு பிறந்த நாள். ஜூலை வரை சீரியல் ஷூட்டிங் இருந்தது. அதை முடிச்சுட்டு சொல்லலாம்னு, யார்கிட்டேயும் சொல்லலை. ஆல்யா மானசா வீட்ல பேசிப் பார்த்தோம். ஆனா, அவங்க வீட்டுல இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்கலை. ஆல்யாவும் எவ்ளோவோ பேசிப் பார்த்தாங்க. ஆனா, அவங்க ஒத்துக்கலை. அவங்க, நாங்க சொல்றதைக் கேட்காம ஆல்யாவுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அதனால தான், உடனே கல்யாணம் பண்ண வேண்டியதாகிடுச்சு. கல்யாணம் முடிஞ்ச பிறகு தான், எங்க வீட்லயும் சொன்னேன். அப்புறம், எங்க வீட்டுல இருந்து எல்லோரும் முறைப்படி பொண்ணு கேட்கப் போனாங்க. அப்பவும் அவங்க வீட்ல ஒத்துக்கலை. சரினு, எங்க வீட்டுல இருக்கிறவங்க முன்னிலையில ஆகஸ்ட் 28-ம் தேதி, முறைப்படி கல்யாணம் நடந்தது.

alya sanjeev

இப்போ, ஆல்யா எங்க வீட்ல தான் இருக்கா. ஆல்யாவுடைய அப்பா, தங்கச்சி ரெண்டு பேரும் பேசிக்கிட்டு தான் இருக்காங்க. ஆனா, அவங்க அம்மா இன்னும் பேசலை. அம்மா பேசமாட்டேங்கிறாங்கன்னு ஆல்யாவுக்கு ரொம்ப வருத்தம். இந்த மாதிரியான சூழல் இருக்கும் போது எப்படி எல்லார்கிட்டேயும் சொல்றதுனு தான் வெளியே சொல்லலை

மாவட்ட செய்திகள்

Most Popular

தாயின் உடலை வீட்டு முன் புதைக்க முற்பட்ட மகன்! வருத்தம் தெரிவித்த வட்டாட்சியர்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சேந்தன்குடி கிராமத்தில் வசித்து வந்த செல்லாயி(வயது70) உடல்நலக்குறைவினால் நேற்று காலமானார். இதனால் அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்தது. சடலத்தை...

ஸ்டாலினை குரங்கு என விமர்சித்த அமைச்சர் செல்லூர் ராஜூ

முதல்வரின் தீர்க்கமான நடவடிக்கையால் நிவர் புயல் பாதிப்பு குறைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, “...

அறிமுகமானது சாம்சங் ஏர்டிரெஸ்சர் – விலை எவ்வளவு தெரியுமா?

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த, சாம்சங் ஏர்டிரஸ்சர் கருவியை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஆனால், இந்தியாவில் அல்ல, இங்கிலாந்தில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சரிவு கண்ட பங்கு வர்த்தகம்.. ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ.59 ஆயிரம் கோடி லாபம்…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 110 புள்ளிகள் உயர்ந்தது. பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது....
Do NOT follow this link or you will be banned from the site!