Home சினிமா ராஜமவுலிக்கு வந்த சோதனை: ராம் சரணை தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆருக்கு வந்த ஆபத்து?!

ராஜமவுலிக்கு வந்த சோதனை: ராம் சரணை தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆருக்கு வந்த ஆபத்து?!

ராஜமவுலியின் படப்பிடிப்பின் போது ராம் சரணைத் தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆருக்கும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. 

ராஜமவுலியின் படப்பிடிப்பின் போது ராம் சரணைத் தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆருக்கும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. 

ராஜமெளலி இயக்கத்தில் வெளியான  ‘பாகுபலி’ திரைப்படம் படம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகி வசூலைக் குவித்தது. பிரபாஸ், ராணா டகுபதி, சத்யராஜ், தமன்னா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் நடித்த அந்தப் படம், சுமார் 1000 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. ஆனால் பாகுபலி இந்தியாவைத் தாண்டி  உலகளவில் சாதனை படைத்தது.

rajamouli

இதனால் உலக அளவில் கவனத்தை ஈர்த்த இயக்குநர் ராஜமௌலியின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் அவர்,  தற்போது ‘ஆர் ஆர் ஆர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படமானது விடுதலைப் போராட்ட வீரர்களான  அல்லூரி  சித்தராம ராஜு  மற்றும் கோமராம் பீம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. இதில் தெலுங்கு ரசிகர்களின் மனதை வென்ற நாயகர்களான  ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் தேஜா ஆகியோர் கதாநாயகனாக ஒப்பந்தமாகியுள்ளனர். ஆர் ஆர் ஆர்  படப்பிடிப்பு புனேவில் தொடங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால்  அதற்கு முந்தைய நாள், ராம் சரணுக்கு காயம் ஏற்பட்டது. 

junior ntr

இந்நிலையில்  ஜூனியர் என்.டி.ஆர். சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கப் படக்குழு முடிவெடுத்தது. அதன்படி ஷூட்டிங் ஆரம்பமான நிலையில், படப்பிடிப்பில் தற்போது ஜூனியர் என்.டி.ஆரின் கையில் அடிபட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 

முன்னதாக இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான டெய்சி எட்கர் ஜோன்ஸ் எனும் பிரிட்டிஷ் நடிகை அப்படத்திலிருந்து சமீபத்தில் விலகியது குறிப்பிடத்தக்கது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

“அதிமுக-பாஜக கூட்டணி இத்துப்போன காய்லாங்கடை இஞ்சின்”- கிண்டலடித்த கே.பாலகிருஷ்ணன்!

தமிழக அரசியல் களத்தில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் அனல் பறக்கிறது. இரண்டு கூட்டணிகளிலும் கூட்டணிக் கட்சிகள் அதிக தொகுதிகளைப் பெறுவதில் மும்முரம் காட்டிவருகின்றனர். அந்த வகையில் திமுகவுடன் இந்திய கம்யுனிஸ்ட்...

எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன்? பரபரப்பு தகவல்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரையில் பெரும்பாலானோர் தாங்கள் ஏற்கனவே போட்டியிட்டு...

விழுப்புரம் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு பணி துவக்கம்!

விழுப்புரம் விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குச் சவாடிகளுக்கு அனுப்ப வேண்டிய வாக்குப்பதிவு இயந்திரங்களை, குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி இன்று நடைபெற்றது.

நீதிமன்ற உத்தரவுகளை கெடுவுக்குள் அமல்படுத்த வேண்டும் – தலைமைச் செயலாளருக்கும் டிஜிபிக்கும் உயர் நீதிமன்றம் ஆணை!

கொலை முயற்சி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட போக்குவரத்து காவல்துறையில் பணியாற்றிய குமரன் என்பவரைத் துறை ரீதியான விசாரணைக்குப் பின் பணி நீக்கம் செய்து 2009ஆம் ஆண்டு சென்னை காவல் துறை உத்தரவிட்டது....
TopTamilNews