ராகுல் நிகழ்ச்சியில் தேர்தல் விதி மீறல் இல்லை: மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம்!

சென்னை பெண்கள் கல்லூரியில் ராகுல் பங்கேற்ற நிகழ்ச்சியில், தேர்தல் விதிமுறைகள் மீறப்படவில்லை என்று மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.

சென்னை: சென்னை பெண்கள் கல்லூரியில் ராகுல் பங்கேற்ற நிகழ்ச்சியில், தேர்தல் விதிமுறைகள் மீறப்படவில்லை என்று மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.

மாணவிகளுடன் உரையாடிய ராகுல்:

rahul

தேர்தல் பரப்புரையைத் தொடங்கி வைப்பதற்காகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி கடந்த 13 ஆம் தேதி தமிழகம் வந்திருந்தார்.  அப்போது சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளுடன் ‘சேஞ்ச் மேக்கர்ஸ்’ என்ற தலைப்பில் உரையாடினார். இந்த நிகழ்ச்சி இணையம் மட்டுமல்லாமல், இந்திய அரசியலிலேயே பரபரப்பாகப் பேசப்பட்டது. 

புகார் கூறிய பாஜக :

rahul

இதையடுத்து தேர்தல் விதிமுறையை மீறி, ராகுல் காந்தி கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக பாஜக புகார் தெரிவித்தது. இதன் காரணமாக, ராகுல் காந்தியின் நிகழ்ச்சியை ஸ்டெல்லா மேரீஸ்  கல்லூரியில் நடத்த அனுமதித்தது எப்படி என்று விசாரிக்கக் கல்லூரி கல்வி இயக்குநர்  சாருமதி உத்தரவு பிறப்பித்தார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது எப்படி அனுமதிக்கலாம்? என்று நேரில் விசாரித்து அறிக்கை தர இணை இயக்குநருக்கு சாருமதி உத்தரவிட்டிருந்தார். 

மறுப்பு தெரிவித்த அழகிரி:

alagiri

ஆனால் இதற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ் அழகிரியோ, இந்நிகழ்ச்சி குறித்து  சில மாதங்களுக்கு முன்னதாகவே, கல்லூரி மாணவிகள் சங்கம் திட்டமிட்டதாகவும் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் அழைக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

சத்யபிரதா சாஹூ விளக்கம்:

sathya ttn

இந்நிலையில், சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் பங்கேற்ற நிகழ்ச்சி குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிக்கை  ஒன்றை சமர்ப்பித்துள்ளார். அதில், ‘கல்லூரி நிர்வாகம் சார்பில் முறையாக அனுமதி பெற்றே நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார். 

Most Popular

சாதித்த இ.பி.எஸ் அரசு: 3 ஆண்டுகளாக தேசிய விகிதத்தைக் காட்டிலும் அதிகமாக தமிழக பொருளாதார வளர்ச்சி விகிதம்!

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருப்பது தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது என்பதை காட்டும் வகையில் உள்ளது என்று பொருளாதார நிபுணர்கள்...

மூணாறு நிலச்சரிவில் இதுவரை 8 பேர் பலி !

தென் மேற்கு பருவமழையால் கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படும் நிலையில் அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளன. அதன்படி கேரள மாநிலம் இடுக்கி...

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு ரூ.5,000 நிதியுதவி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு பல்வேறு நிதியுதவியும் நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறது. சமீபத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 உதவித்தொகை...

வருமான வரித்துறை அதிகாரி மணிகண்டன் தற்கொலை

சென்னையில் வருமான வரித்துறை அதிகாரி மணிகண்டன்(54) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்தமாதம் குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் அவர், வாழ பிடிக்கல்லை என்று கடிதம்...