Home இந்தியா ரயிலில் சீட்டுக்காக போட்டுக்கொண்ட சண்டை... கொலையில் முடிந்த விபரீதம்

ரயிலில் சீட்டுக்காக போட்டுக்கொண்ட சண்டை… கொலையில் முடிந்த விபரீதம்

கைக்குழந்தையோடு நின்று கொண்டிருந்த  தன் மனைவி உட்காறுவதற்காக, இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணியை சற்று தள்ளி உட்காருமாறு கேட்டுள்ளார். இதை மறுத்த அந்த பெண் மார்காட்டுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் தீவிரமடைய மார்க்காட்டை, ஆறு பெண்கள் உட்பட 12 பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர்.

வியாழக்கிழமை அன்று, மும்பை-லாதூர்-பிதர் எக்ஸ்பிரஸில் ஒரு இருக்கைக்காக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். மகாராஷ்டிராவில் புனே மற்றும் டவுண்ட் ரயில் நிலையங்களுக்கு இடையே வியாழக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் நடந்திருப்பதாக ஜிஆர்பி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சாகர் மார்காட், என்பவர் அவரது மனைவி ஜோதி, தாய் மற்றும் இரண்டு வயது மகள் ஆகியோருடன் புனே நிலையத்திலிருந்து பொது பெட்டியில் அதிகாலை 12.45 மணியளவில் ஏறியுள்ளனர்.

Mumbai-Latur-Bidar-Express

கைக்குழந்தையோடு நின்று கொண்டிருந்த  தன் மனைவி உட்காறுவதற்காக, இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணியை சற்று தள்ளி உட்காருமாறு கேட்டுள்ளார். இதை மறுத்த அந்த பெண் மார்காட்டுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் தீவிரமடைய மார்க்காட்டை, ஆறு பெண்கள் உட்பட 12 பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர்.

மார்க்காட் குடும்பத்தினர் தாக்குதல் நடத்தியவர்களைத் தடுக்க முயன்றபோது, அவர்கள் அதைக் கண்டுகொள்ளாமல், ரயில் டவுண்ட் ஸ்டேஷனை அடையும் வரை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவரைத் தாக்கியுள்ளனர்” 

டவுண்ட் நிலையத்தில், காவல்துறையினர் மார்க்காட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து மார்க்காட்டின் மனைவி அளித்துள்ள புகாரின் பேரில், பிரிவு 302 (கொலை) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிற தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

’1989ல் ஜெயலலிதா எடுத்த முடிவு’ சசிகலா விலகலுக்கு இதுதான் காரணம்!

சசிகலா போல் 1989ஆம் ஆண்டு ஜெயலலிதாவும் அரசிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில், நான்...

“சசிகலா முடிவு ஜெயலலிதா ஆன்மாவை சாந்தியடைய வைக்கும்” : கே.பி.முனுசாமி

ஜெயலலிதாவின் விசுவாசியாக இருப்பதாக சசிகலா கூறியது மகிழ்ச்சி என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்துவார்...

பா.ஜ.க.வை காப்பியடிக்கும் காங்கிரஸ்.. சமாஜ்வாடியை எதிர்பார்ப்புகளுடன் பார்க்கும் மக்கள்.. அகிலேஷ் யாதவ்

பா.ஜ.க.வை காங்கிரஸ் காப்பியடிக்கிறது, சமாஜ்வாடி கட்சியை மக்கள் எதிர்பார்ப்புகளுடன் பார்ப்பதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும்,...

சர்க்கரை நோய் வராமல் இருக்க இதை செய்யுங்க…!

மக்கள் மத்தியில் அதிகம் புழங்கும் ஒரு நோயாக உருமாறிவிட்டது சர்க்கரை நோய்.முன்பெல்லாம் இந்த நோயை பணக்காரர்களின் வியாதி என்று கூறுவார்கள்.காரணம் பலரின் வீட்டில் அரிசி சாதம் இருக்காது; பணம் படைத்தவர்கள்...
TopTamilNews