ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் மிரட்ட வரும் ‘பாட்ஷா’ : எந்தெந்த தியேட்டர்களில் ரிலீஸ் தெரியுமா?

தமிழ் சினிமாவின் பிளாக் பஸ்டர் கேங்க்ஸ்டர் படமான ‘பாட்ஷா’  ரிலீசானது.

ரஜினியின் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘பாட்ஷா’.  நக்மா, ரகுவரன், விஜயகுமார், தேவன், ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த 1995ம் ஆண்டு ஜன.12ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவின் பிளாக் பஸ்டர் கேங்க்ஸ்டர் படமான ‘பாட்ஷா’  ரிலீசானது.

batsha

ரஜினியின் ஸ்டைல் மட்டுமின்றி ரகுவரனின் வில்லத்தனமும் கலந்து புதுமையான கேங்க்ஸ்டர் கதையாக இப்படம் பேசப்பட்டது. இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள இப்படம் ஒருவருடத்துக்கும் அதிகமாக திரையில் ஓடி வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது.

ttn

இந்நிலையில் கோவா சர்வதேச  திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் கோல்டன் ஐகான் விருது பெற்றதை வரவேற்கும் விதமாகவும், அவரது பிறந்தநாளை  கொண்டாடும் விதத்திலும், பாட்ஷா படத்தை மீண்டும் திரையிட அதன் தயாரிப்பு நிறுவனமான சத்யா மூவிஸ்  முடிவெடுத்துள்ளது. 

அதன்படி, வரும்  டிசம்பர் 11ம் தேதி ரஜினியின் பாட்ஷா படம் உலக அளவில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் திரையிடப்பட உள்ளது. இதில் சென்னை ராயப்பேட்டை, போரூர், கோயம்பேடு என்ற ஒருசில திரையங்குகளில் பாட்ஷா திரைப்படம் டிஜிட்டல் வடிவில்  மீண்டும் பட்டையை கிளப்ப வரவுள்ளது. 

Most Popular

லட்சக்கணக்கில் அதிகரிக்கும் புதிய நோயாளிகள் – உலகளவில் கொரோனா நிலவரம்

சென்ற ஆண்டு டிசம்பரில் தொடங்கிய கொரோனா நோய்த் தொற்று உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. வல்லரசு நாடுகளான சீனா, அமெரிக்கா, ரஷ்யா போன்றவையே கொரோனா பரவலைத் தடுக்க கடும் போராட்டத்தில் உள்ளன.  இன்றைய தேதி...

விஜயவாடா தீ விபத்தில் 11 பேர் பலி: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி!

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பல இடங்கள் கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில் விஜயவாடா பகுதியில் உள்ள சொகுசு ஓட்டல் ஒன்றும் கொரோனா வார்டாக மாற்றம்...

இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 64,399 பேருக்கு கொரோனா; 881 பேர் பலி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2 ஆவது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டில் உயிரிழப்பவர்களின் விகிதம் குறைவாகவே இருக்கிறது....

தமிழக காவிரி எல்லையான பிலிகுண்டலுக்கு நீர்வரத்து 1 லட்சம் கனஅடியாக உயர்வு!

கர்நாடக மாநிலத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், நேற்று நொடிக்கு 50,000 கனஅடி...