Home சினிமா ரஜினி, கமலுக்கு அப்புறம் விஜய் தான்: போட்டுத் தாக்கும் ஹர்பஜன் சிங்

ரஜினி, கமலுக்கு அப்புறம் விஜய் தான்: போட்டுத் தாக்கும் ஹர்பஜன் சிங்

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், முதன் முறையாக தமிழ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனக்கு மிகவும் பிடித்த தமிழ் நடிகர் குறித்து மனம் திறந்துள்ளார்.

சென்னை: பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், முதன் முறையாக தமிழ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனக்கு மிகவும் பிடித்த தமிழ் நடிகர் குறித்து மனம் திறந்துள்ளார்.

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் இடம்பிடித்த கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தமிழ் ரசிகர்களை உற்சாகப்படுவதில் தனிகவனம் செலுத்துபவர். தமிழில் ட்வீட் செய்து தமிழ் ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்துள்ளார்.

இவர் சமீபத்தில் முதன் முறையாக தமிழ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அது தொடர்பான புரொமோ வீடியோவை ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

அந்த புரொமோ வீடியோவில், தமிழ் சினிமா நடிகர்கள் குறித்து ஹர்பஜனிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அடுத்ததாக தனக்கு தளபதி விஜய்யை மிகவும் பிடிக்கும் என்றார். மேலும், நடிகைகள் நயன்தாரா, ஸ்ருதிஹாசன், த்ரிஷா ஆகியோரையும் பிடிக்கும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews