ரஜினி ஒரு நடிகர், அரசியல்வாதி கிடையாது – முதலமைச்சர் பழனிசாமி! 

ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லை என யார் சொன்னது? ரஜினி என்ன அரசியல் தலைவரா? என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லை என யார் சொன்னது? ரஜினி என்ன அரசியல் தலைவரா? என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி,  தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்பது இடைத்தேர்தல் மூலம் நிரூபணமாகியுள்ளது.  விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் போட்டியிட்ட ஒரு வேட்பாளர்களுமே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றன. புகழேந்தி அதிமுகவில் இணைவது குறித்து கடிதம் அளித்தால் அதுகுறித்து  கட்சியின் தலைமை கழகம் முடிவெடுக்கும். உள்ளாட்சி தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் அறிவிக்கும்.  

எடப்பாடி பழனிசாமி

நாடாளுமன்ற தேர்தலின் போது இருந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும். தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது என ரஜினி சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் என்ன அரசியல் தலைவரா? அல்லது கட்சி ஆரம்பித்துள்ளாரா? அவர் சொல்வதெற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து மாமல்லபுரத்தை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுத்துவருகிறது” எனக் கூறினார். 
 

Most Popular

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி லாபம் ஈட்ட முயன்ற பதஞ்சலிக்கு ரூ.10 லட்சம் அபராதம்

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி மக்களின் அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயன கலவையை...

’இந்த லிஸ்ட்டில் நானா?’ கிரிக்கெட்டர் மிதாலி ராஜ் ஆச்சரியம் – டாப்ஸி பெருமை!

ஆண்கள் மட்டுமே கோலோச்சிய வந்த கிரிக்கெட் உலகத்தில் ஒரு பெண் சட்டென்று எல்லோரின் பார்வையையும் தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர் மிதாலி ராஜ். ஆண்கள் கிரிக்கெட்டில் சச்சின் எப்படி கருதப்பட்டரோ அதற்கு...

கொரோனா காரணமாக நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க கோரி மனு!

நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மே மாதம் நடைபெறவிருந்த நீட் தேர்வு ஜூலை 26-ஆம் தேதிக்கு...

“வாஷிங் மெஷின் போல ஏடிஎம் மெஷினை அடிக்கடி தூக்கி செல்லும் கூட்டம் ” -இந்நிலை நீடித்தால் இனி ஏடிஎம் மெஷின்ல காசுக்கு பதில் காத்துதான் வரும்.

தென்மேற்கு டெல்லியில் உள்ள ராஜோக்ரி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் ஒரு ஏடிஎம் மெஷினை அடையாளம் தெரியாத இருவர் தூக்கி சென்றனர் .அந்த மெஷினில் மொத்தம் 18 லட்ச ரூபாய் பணம்...