Home அரசியல் ரஜினியை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறாரா அமித்ஷா?

ரஜினியை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறாரா அமித்ஷா?

அரசியலுக்கு வரவேண்டாம் என்று ரஜினியே நினைத்தாலும் அது முடியாது போலிருக்கிறது. அவர் வந்தே தீரவேண்டுமென்ற நெருக்கடியும் இருக்கத்தான் செய்கிறது.

வர இருக்கும் தேர்தலிலேயே தமிழக தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்துவிட முடியாது என்பது பாஜகவுக்கு தெரிந்ததுதான். ஆனாலும், குறிப்பிட்ட உறுப்பினர்களையாவது சட்டமன்றத்திற்குள் உட்கார வைக்க வேண்டும் என்றே கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது என்பது அக்கட்சியினரின் வேகத்தில் தெரிகிறது. அதே நேரத்தில், அதிமுக இல்லேன்னா திமுக, திமுக இல்லேன்னா அதிமுகங்கிற தமிழ்நாட்டின் அரசியல் நிலையை மாற்றிவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறது பாஜக என்ற பேச்சு எழுந்திருக்கிறது.

மூன்றாவதாக வரும் ஒரு பெரும் சக்தியாலதான் அதை நடத்திக்காட்ட முடியும். அந்த பெரும் சக்தியாக இருப்பது ரஜினிதான். அதனால் அவர் கட்சி ஆரம்பித்துவிட்டால் அதிமுக இல்லேன்னா திமுக, திமுக இல்லேன்னா அதிமுகங்கிற ஒரு கட்டுமானம் உடையும். அப்படி உடையும் பட்சத்தில் பாஜகவுக்கு பாதை அமையும் டெல்லி மேலிடம் கணக்கு போடுகிறதாம்.

இதெல்லாம் தெரிந்துதான் ரஜினி ஒதுங்கி ஒதுங்கியே போய்க்கொண்டிருக்கிறார் என்கிறார்கள் திராவிட கட்சியினர்.

உடல்நிலையை காரணம் காட்டி கட்சி ஆரம்பிப்பதில் இருந்து எஸ்கேப் ஆகிவிடலாம் என்றுதான் ரஜினியும் முயற்சித்து வருகிறார். ஆனாலும், இந்து அமைப்புகள் ரஜினி அரசியலுக்கு வந்துவிடுவார் என்றே சொல்லி வருகின்றார்கள். இது ஒரு புறம் இருக்க அமித்ஷாவின் நெருங்கிய நண்பர் ’துக்ளக்’ குருமூர்த்தி ரஜினியை நேரில் சந்தித்து 40 நிமிடங்கள் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

குருமூர்த்தியின் இந்த சந்திப்பு பல்வேறு யூகங்களை கிளப்பி விட்டிருக்கிறது. இப்போது இருக்கும் உடல்நிலையில் கட்சி ஆரம்பித்து பொதுக்கூட்டம், பிரச்சாரம் எல்லாவற்றையும் சமாளிக்க முடியாது போலிருக்கிறது என்று ரஜினி எடுத்துச்சொன்னதாகவும், உங்களுக்கு இருக்கும் பவருக்கு கட்சி ஆரம்பித்து கொடியை அறிமுகப்படுத்தினால் போதும். பொதுக்கூட்டம், பிரச்சாரம் என்று எங்கேயும் அலைய தேவையில்லை. காணொளி காட்சி வாயிலாகவே எல்லாவற்றையும் முடித்துவிடலாம் என்று அமித்ஷாவின் எண்ணத்தை ரஜினிக்கு பாஸ் செய்திருக்கிறார் குருமூர்த்தி என்ற பேச்சு உலவுகிறது.

இந்த அளவுக்கு, அதாவது காணொளி காட்சி ரேஞ்சுக்கு அமித்ஷா நெட்டித்தள்ளுவதால் கொடியை அறிமுகப்படுத்தும் நெருக்கடியில் இருக்கிறார் ரஜினி என்றே சொல்லி வருகிறார்கள் ரஜினி மன்றத்தினரும்.

மாவட்ட செய்திகள்

Most Popular

சம்மர் டூர் பிளான் செய்ய நல்ல வாய்ப்பு… குறைந்த கட்டணம் அறிவிப்பு வெளியிட்ட விமான நிறுவனங்கள்!

வரும் கோடைக் காலத்தில் வெளியூர் செல்ல பிளான் போடுகின்றீர்களா... உங்களுக்காகவே மிகக் குறைந்த கட்டண டிக்கெட்டை போட்டிப் போட்டு அறிவித்துள்ளன இன்டிகோஏர் மற்றும் ஸ்பைஸ்ஜெட். இன்டிகோ...

இந்தியில் ரீமேக்காகும் விஜய்யின் மாஸ்டர் ! ரீமேக் உரிமையைக் கைப்பற்றியது யார் தெரியுமா?

தமிழில் வசூல் சாதனைப் படைத்த மாஸ்டர் இந்தியில் உருவாகுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு தளபதி விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடித்து ஜனவரி 13-ஆம் தேதி வெளியான மாஸ்டர்...

வெறும் வயிற்றில் எலுமிச்சை சாரு அருந்துவது நல்லதா… கெட்டதா?

காலையில் எழுந்ததும் காபி, டீ, எனர்ஜி டிரிங்க்ஸ் அருந்துவதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். உடலை ஆரோக்கியமாக வைக்க நினைக்கும் பலர் தேன் கலந்த வெந்நீர், எலுமிச்சை நீர், இளநீர், நீராகாரம்,...

நாளை 166 இடங்களில் 19,073 சுகாதாரப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் நாளை 166 இடங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதில் 160 இடங்களில் கோவிஷீல்டு மருந்துகளும் 6 இடங்களில் கோவேக்சினும் வழங்கப்பட உள்ளன.
Do NOT follow this link or you will be banned from the site!