ரஜினிகாந்துக்கு 70 ஆவது பிறந்தநாள் இல்லை! 46 ஆவது பிறந்த நாள்… காரணம் தெரியுமா? 

சிவாஜிராவ் என பெயரிடப்பட்ட சூப்பர் ஸ்டார், நடிகராகும் ஆவலுடன் சென்னை வந்தார். அதன்பின் தன் நண்பர் ராஜ் பகதூரின் உதவியுடன் 1973 ஆம் ஆண்டு சென்னை வந்து திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார்.

சிவாஜிராவ் என பெயரிடப்பட்ட சூப்பர் ஸ்டார், நடிகராகும் ஆவலுடன் சென்னை வந்தார். அதன்பின் தன் நண்பர் ராஜ் பகதூரின் உதவியுடன் 1973 ஆம் ஆண்டு சென்னை வந்து திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார்.  1975 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார் சிவாஜிராவ். தமிழ் சினிமாவில் ஏற்கனவே நடிகர் திலகம் சிவாஜி இருக்கும்போது இவரையும் எப்படி சிவாஜி என அழைப்பது என்ற குழப்பம் கே.பாலசந்தருக்கு ஏற்பட்டது.  தனித்துவமான ஸ்டைலுக்கும் அவரின் வேகமான நடைக்கும் ஒரு பெயரை வைக்க நினைத்து சிந்திக்க ஆரம்பித்தார் கே. பாலச்சந்தர். 

ரஜினிகாந்த் கே பாலச்சந்தர்

அன்று ஹோலி பண்டிகை.. சென்னையிலிருந்த வடமாநிலத்தவர்கள், வண்ணமயமான கலர்களை முகத்தில் பூசிக்கொண்டு ஹோலிப்பண்டிகையை கொண்டாடி கொண்டிருந்தனர். அப்போது சிவாஜிராவை அழைத்தார் பாலச்சந்தர். இன்று முதல் உன் பெயர் ரஜினிகாந்த்.. உன் பெயரை மாற்றிக்கொள் என உரக்கக்கூறி ரஜினியை கட்டியணைத்தார். அதன்பின் அவரிடம் வாழ்த்து பெற்று அங்கிருந்து நகர்ந்தார் ரஜினிகாந்த்..

ரஜினிகாந்த் கே பாலச்சந்தர்

அப்படி பார்த்தால் ரஜினிகாந்த் பிறந்து 46 வருடங்கள்தான் ஆகிறது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ரஜினிகாந்த் ஹோலிப்பண்டிகையை தனது குடும்பத்தினருடன் உற்சாகமாக கொண்டாடுவார். ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் தன் குருநாதர் கே. பாலசந்தருக்கு பட்டு வேஷ்டி, பட்டு சட்டை,  ராஜம் அம்மாளுக்குப் பட்டுப்புடவை தவறாமல் கொடுத்து அனுப்பிவிடுவார். ஆன்மிக குருவாக ராகவேந்திரரையும், சினிமா குருவாக கே.பாலச்சந்தரையும் ரஜினி என்றுமே மறந்தது இல்லை. 

Most Popular

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....