Home இந்தியா யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை எதிரொலி! பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதற்காக இழப்பீடாக ரூ.6.27 லட்சம் வழங்கிய உ.பி. மக்கள்.....

யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை எதிரொலி! பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதற்காக இழப்பீடாக ரூ.6.27 லட்சம் வழங்கிய உ.பி. மக்கள்…..

உத்தரப் பிரதேசத்தில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதற்காக பொதுமக்கள் வருத்தம் தெரிவித்ததுடன், தாங்களாகவே முன்வந்து இழப்பீடாக ரூ.6.27 லட்சம் வழங்கியுள்ளனர்.

உத்தர பிரதேசத்தின் பல மாவட்டங்களில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. சில பகுதிகளில் போராட்டங்கள் கலவரமாக வெடித்தது. கார்களுக்கு தீ வைப்பு, பொது சொத்துக்களை சேதப்படுத்தும் நடவடிக்கைகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டனர். 

வன்முறை

இதனையடுத்து, எதிர்ப்பு என்ற பெயரில் நீங்கள் வன்முறையில் ஈடுபட முடியாது. இது போன்ற சம்பவங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொது சொத்துக்களை சேதம் விளைவிக்கும் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்து, ஏலம் விட்டு இழப்புகள் ஈடு செய்யப்படும் என கடந்த வாரம் அம்மாநில  முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை செய்தார்.

யோகி ஆதித்யநாத்

மேலும், வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்டுபிடித்து இழப்பீடு பெறுவதற்காக அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். உத்தர பிரதேச அரசின் இந்த நடவடிக்கைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. புலண்ட்ஷாஹ்ர் பகுதிவாசிகள் பொதுசொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதற்கு வருத்தம் தெரிவித்து தாங்களாகவே முன்வந்து இழப்பீடாக ரூ.6.27 லட்சத்துக்கான  டிமாண்ட் டிராப்டை அம்மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் மூத்த காவல் துறை சூப்பிரண்டு ஆகியோரிடம் கொடுத்தனர். மேலும் எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாது என உறுதிமொழி கடிதமும் கொடுத்தனர். உத்தர பிரதேச மக்களின் இந்த நடவடிக்கை நல்லதொரு மாற்றத்துக்கான அறிகுறியாகவே தென்படுகிறது.

Most Popular

‘சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக கட்சியே இருக்காது’ – திமுக எம்.பி டி.ஆர் பாலு

அதிமுகவில் பெரும் பிரச்னை நீட்டிப்பதால் தேர்தலுக்கு பின்னர் அந்த கட்சியே இருக்காது என திமுக எம்.பி டி.ஆர் பாலு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். தமிழகத்தில் சட்டமன்ற...

ஓபிஎஸுடன் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திடீர் சந்திப்பு!

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சந்தித்து பேசினார். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓபிஎஸ் இன்று தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார்....

‘கால்வாயில் மிதந்த இரண்டு ஆண்களின் சடலங்கள்’ போலீசார் தீவிர விசாரணை!

மேட்டூர் ஸ்டான்லி நீர்த்தேக்கத்தில் கிடந்த அடையாளம் தெரியாத சடலங்கள் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம் மேட்டூர் ஸ்டான்லி நீர்த்தேக்கத்தில் நீர் திறந்து...

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்தி வைப்பு!

மருத்துவக் குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 8...
Do NOT follow this link or you will be banned from the site!