Home தமிழகம் யெஸ்பேங் திவாலால் சிக்கலில் இருக்கும் தமிழக உள்ளாட்சி அமைப்புகள்!? 

யெஸ்பேங் திவாலால் சிக்கலில் இருக்கும் தமிழக உள்ளாட்சி அமைப்புகள்!? 

தமிழகத்தில் பல நகராட்சிகள், மாநகராட்சிகள், அரசு நிறுவனங்கள் யெஸ்பேங்கில் கணக்கு வைத்திருந்த செய்திகள் இப்போதுதான் வெளிவரத் துவங்கி இருக்கின்றன. உதாரணமாக தமிழ்நாடு செய்தித்தாள் உற்பத்தி நிறுவனமான (TNPL), தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி நிதியம் (TNUDF) மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் போன்ற நிறுவனங்கள் இந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தன.

தமிழகத்தில் பல நகராட்சிகள், மாநகராட்சிகள், அரசு நிறுவனங்கள் யெஸ்பேங்கில் கணக்கு வைத்திருந்த செய்திகள் இப்போதுதான் வெளிவரத் துவங்கி இருக்கின்றன. உதாரணமாக தமிழ்நாடு செய்தித்தாள் உற்பத்தி நிறுவனமான (TNPL), தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி நிதியம் (TNUDF) மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் போன்ற நிறுவனங்கள் இந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தன.

tnpl

இப்போது யெஸ்பேங் திவாலானதால் இந்த நிறுவனங்களிம் அக்கெளண்ட்கள் முடக்கப்பட்டு விட்டன. இவை மட்டுமல்ல, சென்னை மாநராட்சியே சொத்துவரியை யெஸ்பேங்கில் நேரடியாக செலுத்த வசதி செய்திருந்தது. கோவை,மதுரை மாநகராட்சிகளுக்கும் கூட இந்த வங்கியில் கணக்கு வைத்து இருந்ததாகத் தெரிகிறது. இவற்றில் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பது தூத்துக்குடி மாநகராட்சிதான்.தூத்துக்குடி வங்கிக்காக மட்டும் 15 ஊழியர்கள் மறும் ஒரு சூப்பர்வைசரை நியமித்திருந்தது யெஸ்பேங்.

yes-bank-90

குடிநீர் கட்டணம்,சொத்துவரி,வீட்டுவரி போன்ற மாநகராட்சிக்கு தினசரி வருமானம் வரகூடிய 10 கவுண்ட்டர்களிலும் யெஸ்பேங் தாற்காலிக ஊழியர்கள்தான் இருந்தனர்.கடந்த 9.3.2020 வரை தூத்துக்குடி மாநகராட்சிக்கு சராசரியாக 2 முதல் 3 லட்சம் ரூபாய் வரை இந்தக் கவுண்ட்டர்கள் மூலம் வசூலாகி யெஸ்பேங்கில் இருக்கும் தூத்துக்குடி மாநகராட்சி கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருக்கிறது.

இப்போது யெஸ்பேங் திவால் என்று அதன் பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டு விட்டதால் தூத்துக்குடி மாநகராட்சியின் கணக்கும் முடக்கப்பட்டு விட்டது. அடுத்த மாதம் மாநகராட்சி ஊழியர் சம்பளம் உள்ளிட்ட செலவுகளை தூத்துக்குடி மாநகராட்சி எப்படி எதிர்கொள்ள போகிறது என்பதுதான் அங்குள்ளவர்களின் இப்போதைய கவலை.தமிழக நிதித்துறை செயலாளரும், தலைமைச் செயலாளரும் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

மாவட்ட செய்திகள்

Most Popular

கொரோனாவுக்கு இதுவரை 1.36 லட்சம் பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், உலக நாடுகளில் இரண்டாம் கட்ட அலையில் கொரோனா இருப்பதால் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தீபாவளி...

‘உடல் உறுப்பு தானம்’ – முதல்வர் பெருமிதம்!

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக தேர்வானதற்கு முதல்வர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். உடல் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில்...

கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவால் காய்கறிகளின் விலை சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்ட...

’பிக்பாஸ் வீட்டில் உருவானது மூன்றாவது அணி! –ஆனா…’ பிக்பாஸ் 53-54-ம் நாள்

புயல், மழை காரணமாக போட்டியாளர்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர் என்று செய்திகள் முன்பே வந்தன. ஆனால், அதை பிக்பாஸ் நிகழ்ச்சியின் செய்தித் தொடர்பாளர் மறுத்து கூறியிருந்தார். ஆனால், நேற்றைய எப்பிசோட்டில்...
Do NOT follow this link or you will be banned from the site!