யூடியூபில் மாயமான ‘தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ டிரைலர்..!

‘தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ திரைப்படத்தின் டிரைலர் திடீரென யூடியூபில் இருந்து மாயமானதாக நடிகர் அனுபம் கேர் தெரிவித்துள்ளார்.

மும்பை: ‘தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ திரைப்படத்தின் டிரைலர் திடீரென யூடியூபில் இருந்து மாயமானதாக நடிகர் அனுபம் கேர் தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சயா பாரு எழுதிய `தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் விஜய் தத் இயக்கியுள்ளார். இப்படத்துக்கு ஹன்சல் மேத்தா திரைக்கதை எழுதியுள்ளார்.

மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில், அவரது நிர்வாகத்தில் சோனியா காந்தியின் தலையீடு இருந்ததை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலரில், அணு சக்தி ஒப்பந்தம், காஷ்மீர் பிரச்னை, மன்மோகன் சிங் மீன்ஸ் பிசினஸ் போன்ற அம்சஙகள் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, காங்கிரஸ் தரப்பில் படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், திடீரென யூடியூபில் இருந்து ‘தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ படத்தின் டிரைலர் காணாமல் போனதாக நடிகர் அனுபம் கேர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். யூடியூபில் நேற்று வரை டாப் ட்ரெண்டிங்கில் இருந்த டிரைலரை தற்போது தேடினால் 50 வது இடத்தில் காட்டுகிறது. யூடியூப் உதவுங்கள் என அனுபம் கேர் பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நேரம் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை கொண்ட இப்படம் ரிலீசாவது தேர்தலை பாதிக்கும் என அரசியல் வல்லுநர்கள் ஒருபக்கம் கருத்துக் கூறி வருகின்றனர்.

Most Popular

“நான் எவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டியா?”- தங்கையை காதலித்த வாலிபரை வீடு புகுந்து கொலை செய்த அண்ணன்

"நான் எவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டியா?" என கூறி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தங்கையின் காதலனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் வாலிபர். இந்த சோக சம்பவம் தேவகோட்டையில் நடந்துள்ளது. சிவகங்கை மாவட்டம்,...

விமானப்படையின் உதவியை நாடினார் கேரள முதல்வர்; என்ன காரணம்?

தென்மேற்கு பருவமழையின் காரணமாக கேரள மாநிலத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீர் நிலைகள் நிரம்பி, பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. இன்று காலை திடீரென...

மதுரை உலைப்பட்டியில் தொல்லியல் ஆய்வு வேண்டும்! – சீமான் கோரிக்கை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உலைப்பட்டியில் தொல்லியல் பொருள்கள் கிடைத்துள்ளதால் அங்கு விரிவான ஆய்வு மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

சாதித்த இ.பி.எஸ் அரசு: 3 ஆண்டுகளாக தேசிய விகிதத்தைக் காட்டிலும் அதிகமாக தமிழக பொருளாதார வளர்ச்சி விகிதம்!

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருப்பது தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது என்பதை காட்டும் வகையில் உள்ளது என்று பொருளாதார நிபுணர்கள்...