Home சினிமா யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் மீண்டும் ரைசா வில்சன்

யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் மீண்டும் ரைசா வில்சன்

பியார் பிரேமா காதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கும் அடுத்த படத்தில் ரைசா வில்சன் கதாநாயகியாக நடிக்க உள்ளார்

சென்னை: பியார் பிரேமா காதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கும் அடுத்த படத்தில் ரைசா வில்சன் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

தனது இசை அமைப்பு திறமையால் தமிழ் ரசிகர்களை தன் வயப் படுத்தி உள்ள யுவன் ஷங்கர் ராஜா , தனது சொந்த பட நிறுவனமான YSR பிலிம்ஸ் என்கிற நிறுவனம் மூலம் “பியார் பிரேமா காதல்” என்கிற படத்தை உருவாக்கி பெரும் வெற்றியும் பெற்றார்.

pyaar prema kadhal

தற்போது அவரது தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும் பெயர் இடப்படாத படம் ஒன்றையும் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடந்து வருகிறது. இதை தொடர்ந்து தனது  தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த  படத்தின் அறிவிப்பை நேற்று வெளியிட்டார். 

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி,பியார் பிரேமா காதல் வெற்றி படத்தின் மூலம் ரசிகர்களின் இதயத்தில் கோலோச்சிய ரைசா வில்சன் “ஆலிஸ்” கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் மணி சந்துரு இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்.

Alis
 
“ஆலிஸ்” ஒரு பிரமாதமான கதை.  இயக்குனர் கதை சொன்ன தருணத்திலேயே இந்த படத்துக்கு ஒரு பெரிய கதாநாயகி தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.பியார் பிரேமா காதல் படத்தின் வெற்றியும், அதை தொடர்ந்து பெருகிய ரைசாவின் புகழும் அவரையே தேர்ந்து எடுக்க வைத்து உள்ளது.  அவருடைய நடிப்பு திறமையும் , கட்டுக்கோப்பான தொழில் நேர்த்தியும் அவரையே கதாநாயகியாக்கியது. மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

மேலும் இப்படத்தில் இயக்குநர் மணி சந்திரன் தவிர, ஒளிப்பதிவாளர் எழில் அரசு , கலை இயக்குனர் ஏ.ஆர்.ஆர். மோகன், அர்ஜுனா நாகா ஏ கே படத்தொகுப்பாளராக அறிமுகமாகின்றனர். யுவன் ஷங்கர் இசையமைக்கிறார். மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

நான் ஊழல் இல்லாதவன் என்பதால் 30 நொடியில் தூங்கி விடுவேன்.. மோடியை பார்த்து பயப்படமாட்டேன்.. ராகுல் காந்தி

நான் ஊழல் இல்லாதவன் என்பதால் 30 நொடியில் தூங்கி விடுவேன், மோடியை பார்த்து பயப்படமாட்டேன் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்...

காஷ்மீரில் கல் வீசுதல், பந்த் போன்ற நடவடிக்கைகளில் இப்பம் யாரும் ஈடுபடுவதில்லை.. மேஜர் ஜெனரல் தகவல்

வடக்கு காஷ்மீரில் கல் வீசுதல் மற்றும் பந்த் போன்ற நடவடிக்கைகளில் இப்போது யாரும் ஈடுபடுவதில்லை என்று மேஜர் ஜெனரல் எச்.எஸ். ஷஹி தெரிவித்தார். காஷ்மீரின் சிறப்பு...

திருமண பாக்கியம் அருளும் ஆண்டாள் ஸ்லோகம்!

ஆண்டாள் நாச்சியார் பூமாதேவியின் அவதாரமாக பார்க்கப்படுகிறார். 12 ஆழ்வார்களில் ஒரே பெண் இவர்தான். மிகச்சிறந்த பெருமாள் பக்தை. தோட்டத்தில் பச்சிளம் குழந்தையாக பெரியாழ்வாரால் கண்டுபிடிக்கப்பட்டவர் ஆண்டாள். மிகச்சிறந்த விஷ்ணு பக்தையாக...

நிச்சய உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும் சில உணவுகள்!

ஆரோக்கியமான உணவுகள் எது என்று ஓரளவுக்கு தெரிந்து வைத்துள்ளோம். ஆரோக்கியமில்லாத உணவு, சாப்பிட்டால் நிச்சயம் உடல்நல குறைபாட்டை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ள சில உணவுகள் பற்றித் தெரியுமா... தினமும்...
TopTamilNews