Home ஜோதிடம் யாருக்கெல்லாம் குடும்ப வாழ்க்கை பிரகாசமாக அமையும்!

யாருக்கெல்லாம் குடும்ப வாழ்க்கை பிரகாசமாக அமையும்!

உங்களின் எண்ணங்களை, நடிவடிக்கைகளை மாற்றிக் கொண்டால், நிச்சயம் உங்களைச் சுற்றும் அனைத்து பிரச்சனைகளும் தீரும். 

இன்றைய ராசிபலன்

30 -7-19 (செவ்வாய்க்கிழமை)
நல்லநேரம்
காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை
ராகுகாலம்
பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்
காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சந்திராஷ்டமம்
அனுஷம் மாலை 4 வரை பிறகு கேட்டை
பரிகாரம்
பால்

மேஷம் 
இன்று உங்கள் ராசி கிரகங்களின் படி, தொழில் ரீதியிலான முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம். 

ரிஷபம் 
சந்திரன் உங்களுக்கு சாதகமாக நிற்பதால், முதலில் நீங்கள் உங்களை நம்ப வேண்டும். அப்போது தான் மற்றவர்கள் உங்களை நம்புவர்.

மிதுனம் 
தாமதம், பதட்டம் போன்ற எந்த விஷயங்களுக்கும் இடம் கொடுக்காதீர்கள். இவையெல்லாம், உங்களின் முன்னேற்றத்தை தடைக் கல்லாக மாற்றி விடும். அடுத்த வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டிய காலக்கட்டம் இது.

கடகம் 
கூட்டு முயற்சி உங்களுடைய வெற்றியை வசப்படுத்தும். பணியை செம்மையாக செய்யும். வழக்கத்தை விட கூடுதலான வசீகரத்துடன் தோற்றமளிப்பீர்கள். உங்களின் உண்மையான பிரச்சனை என்ன என்பதை கண்டறியுங்கள். அப்போது தான் அதனை உடனே களைய முடியும்.

சிம்மம்
பணவரவு இருக்கும். குடும்பத்துடன் நேரம் செலவழிப்பீர்கள். மற்றவர்களின் மீது அதிக கரிசனம் காட்டுவீர்கள். இதனால், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள்.

கன்னி 
ஏற்கனவே திட்டங்கள் வைத்திருந்தால், அந்த கோடிட்ட இடங்களை நிரப்ப இப்போது மிகச் சரியான நேரமாகும்.

துலாம் 
கடந்த காலங்களில் முயற்சிகள் மற்றும் தியாகங்கள் அனைத்தும் வீணாய் போனதாய் உணர்ந்தீர்கள். இப்போது அதற்கான பலன்களை அறுவடை செய்கிற நேரமாக உங்களுக்கு வாய்த்திருக்கிறது. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

விருச்சிகம் 
மற்றவர்கள் உங்கள் திறமையையும், பணியையும் குறைத்து மதிப்பிட்டு, உங்களை விட அவர்கள் சிறந்தவர்கள் என்று எண்ணி வந்தார்கள். இப்போது நீங்கள் அவர்களை ஓவர் டேக் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. உங்கள் ஆளுமையை வெளிகாட்டும் தருணம் இது.

தனுசு 
நீங்கள் விரும்புவதை புதன் உங்களுக்கு நிறைவேற்றிக் கொடுப்பார். வழக்கத்து மாறாக, சுவாரஸ்யமான, திகிலூட்டும் அனுபவங்களை எதிர் நோக்கி காத்திருக்கலாம். 

மகரம்
உங்களின் எண்ணங்களை, நடிவடிக்கைகளை மாற்றிக் கொண்டால், நிச்சயம் உங்களைச் சுற்றும் அனைத்து பிரச்சனைகளும் தீரும். 

கும்பம் 
தவறான புரிதல்கள் உங்களிடம் நிறைய காணப்படுகிறது. தேவையில்லாத மனக்குழப்பத்தை விட்டு அகற்றுங்கள். வாழ்வில் ஏற்றம் கிடைக்கும்.  உங்கள் கிரகங்கள் பிரகாசமாக உள்ளது. குடும்ப வாழ்க்கை உங்களுக்கு பிரகாசமாக அமையும். சிறப்பாக வழிநடத்தவும், தனிப்பட்ட உறவுகளை வளர்த்துக் கொள்ளவும் இது சரியான நேரம்.

மீனம் 
சந்திரன் உங்களுக்கு பக்கபலமாக இருப்பதால், உங்களது உணர்வுகள் கட்டுக்கோப்பாக இருக்கும். அதுவே, உங்கள் இலக்கை நோக்கி முன்னேற தேவையான விவாதங்களை, ஆலோசனைகளை நோக்கி உங்களை நகர்த்திச் செல்லும்.

மாவட்ட செய்திகள்

Most Popular

வருவாய் சூப்பர்… லாபம் சுமார்… நெஸ்லே இந்தியா

நெஸ்லே இந்தியா நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் லாபமாக ரூ.587 கோடி ஈட்டியுள்ளது. பிரபலமான மேகி நூடுல்ஸ், மில்கி பார் சாக்லேட் உள்பட பல்வேறு நுகர்வோர்...

ஐபிஎல்: டெல்லி அணியை வீழ்த்தி ஐதராபாத் சன்ரைசர்ஸ் அசத்தல் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று 47-வது ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ்...

தோஷங்களை போக்கும் பிரதோஷத்தில் சோமசூக்த பிரதட்சணம்!

உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து, தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் சிவப்பெருமான். இவ்வாறு உலகை காத்த உத்தமனான பரமனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம்....
Do NOT follow this link or you will be banned from the site!