Home ஆன்மிகம் யாருக்கெல்லாம் காதல் திருமணம்... என்னதான் சொல்கிறது உங்கள் ஜாதகம்?

யாருக்கெல்லாம் காதல் திருமணம்… என்னதான் சொல்கிறது உங்கள் ஜாதகம்?

ஒருவருடைய ஜாதகத்தினை கொண்டு எவ்வாறு எல்லாம் திருமணம் நடைபெறும் என்பதை பற்றி நம் முன்னோர்கள் ஜோதிட கணிதத்தில் மிகவும் தெளிவாக கூறியுள்ளனர் அதனை பற்றி இந்த பதிவில் மிகவும் விரிவாக பார்போம்.  

திருமணத்துக்கு ஜாதக பொருத்தம் பார்க்கும்போது இரண்டு விஷயங்களை முக்கியமாக கவனிப்பார்கள். ஒன்று செவ்வாய் தோஷம், மற்றொன்று ராகுகேது தோஷம்.

செவ்வாய் லக்னத்துக்கு 1,2, 4, 7, 8, 12ல் இருந்தால் தோஷம். ராகுகேது லக்னம், 2, 7, 8ல் இருந்தால் தோஷம். இந்த இடங்கள் எல்லாம் காதல் சுகத்தையும், குடும்ப தாம்பத்ய சுகத்தையும், இல்லற வாழ்க்கையையும் குறிக்கும் இடங்களாகும். 

lovehjjkk

செவ்வாய் 7, 8ல் இருந்தால் காதல் உணர்வு அதிகம் காணப்படும். அதற்கு இணையாக, அந்த ஜாதகக்காரருக்கு ஈடுகொடுக்கும் வகையில் இல்லத்துணை அமைய வேண்டும் என்ற நோக்கில்தான், அதேபோல் காதல் உணர்வு அதிகம் உள்ள 7, 8ல் செவ்வாய் உள்ள ஜாதகமாக பார்த்து சேர்த்தார்கள்.

ஏழாம் இடம் இடம் காதலை, காமத்தை நிர்ணயிக்கும் இடம். இதை களத்திர ஸ்தானம் என்று சொல்வார்கள். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெறுவதும், நீச்சம் அடையாமல் இருப்பதும் முக்கியம். இந்த இடத்தை வைத்துதான் ஒருவரது நடத்தை, ஆசை, விருப்பம், காதல் ஈடுபாடு போன்றவற்றை அறிய முடியும்.

lovehjk

குரு போக காரகன், சுக்கிரன் காம காரகன். இந்த இருவரும் இணைவது, பார்ப்பதில் நல்லதும் கெட்டதும் இருக்கிறது. இந்த இரண்டு கிரகங்களுக்கும் பாவ கிரக பார்வை, நீச்ச சேர்க்கை ஏற்பட்டால் ரகசிய உறவுகள் ஏற்படலாம். 8ம் இடத்தில் குரு அல்லது சுக்கிரன் இருப்பதால் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் காதல் கொள்வதற்கான சூழல் உள்ளது.

ஜாதகத்தில் 4வது இடம் சுக ஸ்தானம். எல்லா விதமான சுகங்களுக்கும் இந்த இடம்தான் முக்கியம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெற்று இருந்தால் காதல் சிறப்பாக நடக்கும்.

பெண்கள் ஜாதகத்தில் நான்காம் இடம் கற்பு ஸ்தானம். ஒழுக்க நெறியை பற்றி சொல்லும் இடம். நான்காம் இடம், நான்காம் அதிபதி பலமாக இருந்தால் ஒழுக்கம் தவறாத காதல், நெறி தவறாத வாழ்வு அமையும். 

ஏழாம் இடம் இடம் காதலை, காமத்தை நிர்ணயிக்கும் இடம். இதை களத்திர ஸ்தானம் என்று சொல்வார்கள். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெறுவதும், நீச்சம் அடையாமல் இருப்பதும் முக்கியம். 

lovehjkk

சனி, சந்திரன் சேர்க்கை, பார்வை பரிவர்த்தனை, நட்சத்திர சாரம், சனி வீட்டில் சந்திரன், சந்திரன் வீட்டில் சனி, சனி, சந்திரன் நீசம் போன்ற அமைப்புகள் ஜாதகத்தில் இருந்தால் அப்படிப்பட்டவர்கள் சுலபமாக மனதை மாற்றிக்கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள். புகழ்ச்சிக்கு மயங்குவார்கள், சபல புத்தி, சஞ்சல மனம் இருக்கும்.

ஆண்கள் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்து பத்தாம் இடத்தில் புதன் இருந்தால் வயதில் மூத்த காதலி அமைவார். ஏழாம் வீட்டில் நீச்ச கிரகம் இருந்தால் சபல புத்தி உண்டாகும். 

லக்னத்துக்கு 7, 8ல் ராகு,கேது உள்ள ஜாதகத்துடன் அதே சமதோஷமுள்ள ஜாதகத்தை சேர்ப்பதன் மூலம் அவர்களின் ஆசைகள், உணர்ச்சிகள் ஒத்துப்போகின்றன. இருவருக்கும் சரிபாதி இன்பம் கிடைக்கிறது. 

6, 8, 12 ஆம் இடத்துக்கு உடையவர்கள் அதிக பலம் பெற்று இருந்தாலோ, 6, 8, 12ஆம் வீட்டிலேயே இருந்தாலோ தீயசெயல்கள் செய்ய அஞ்சவும் மாட்டார்கள். அதற்கு வெட்கப்படவும் மாட்டார்கள். 

மாவட்ட செய்திகள்

Most Popular

அரசுப்பேருந்து சாலையில கவிழ்ந்து விபத்து; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

ஈரோடு ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்திற்கு உள்ளானதில் 35 பேர் படுகாயமடைந்தனர்.

சாலையை சீரமைக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

திருப்பத்தூர் ஜோலார்பேட்டையில் குண்டும் குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்கக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.

திமுக பிரமுகர் கொலை வழக்கில் கைதான 4 பேர், குண்டர் சட்டத்தில் அடைப்பு

திண்டுக்கல் திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் வெட்டிகொல்லப்பட்ட வழக்கில் கைதான 4 பேர், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த அக்டோபர் 22ஆம் தேதி திண்டுக்கல்...
Do NOT follow this link or you will be banned from the site!