Home ஜோதிடம் யாருக்கெல்லாம் காதல் கைகூடும் அதிர்ஷ்டமிருக்கு?

யாருக்கெல்லாம் காதல் கைகூடும் அதிர்ஷ்டமிருக்கு?

02.08.2019 (வெள்ளிக்கிழமை)
நல்ல நேரம்
காலை 9.15 மணி முதல் 10.15 வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 வரை
ராகு காலம்
காலை 10.30 மணி முதல் 12 வரை
எமகண்டம்  மாலை 3 மணி முதல் 4.30 வரை
சந்திராஷ்டமம் 

02.08.2019 (வெள்ளிக்கிழமை)
நல்ல நேரம்
காலை 9.15 மணி முதல் 10.15 வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 வரை
ராகு காலம்
காலை 10.30 மணி முதல் 12 வரை
எமகண்டம்  மாலை 3 மணி முதல் 4.30 வரை
சந்திராஷ்டமம் 
திருவோணம், அவிட்டம்
பரிகாரம்
வெல்லம்
இன்று  சந்திர தரிசனம்

mesham

மேஷம் 
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறைக் காட்டுங்கள். அதிர்ஷ்ட தேவதை எப்போதுமே ஒரு சோம்பேறி என்பதை நினைவில் வைத்திருங்கள். விதியை நம்பி இருக்காதீர்கள்.  உங்களிடம் கடமை உணர்வும் கடின உழைப்பும் இருந்தால் கவனிக்கப்படும். 
அதிர்ஷ்ட எண்: 1

rishabham

ரிஷபம் 
சந்தேகம், ஊக்கமின்மை, நம்பிக்கைக் குறைவு, பேராசை, ஈகோ, பொறாமை போன்ற கெட்டவற்றில் இருந்து விடுபட முயற்சி செய்யுங்கள். செலவுகள் அதிகமாகும்,  உங்களின் திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டு அதற்கான வேலையில் ஈடுபடுவதற்கு நல்ல நேரம். இது வரை உங்கள் வாழ்க்கையில் அனுபவித்த அத்தனை கஷ்டங்களையும் உங்கள் துணையின் அன்பில் மறப்பீர்கள். காதல் கைகூடுவதற்கான நேரம் இது.
அதிர்ஷ்ட எண்: 9

midhunam

மிதுனம் 
இன்று உங்களிடம் முன்வைக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களை இரண்டு முறை பாருங்கள். இன்று மற்றவர்களின் தேவையில் நீங்கள் கவனம் செலுத்த நேரிடும். புதிய முயற்சி தொடங்க நல்ல நாள். எல்லாமே பலன் தந்து விடாது. ஆனால் எல்லையில்லாத கிரியேட்டிவிட்டியும் உற்சாகமும் பயனுள்ள மற்றொரு நாளை உருவாக்கும். 
அதிர்ஷ்ட எண்: 7

kadagam

கடகம் 
உங்களுக்கு எது நல்லது என்று உங்களுக்குத் தான் தெரியும். எனவே வலுவாக, தைரியமாக இருந்து விரைந்து முடிவெடுங்கள். விளைவு எதுவாக இருந்தாலும் ஏற்க தயாராக இருங்கள். திடீரென கிடைக்கும் பண வரவு, உங்கள் முயற்சி மற்றும் கடமை உணர்வை குடும்பத்தினர் பாராட்டுவார்கள். இன்று உங்கள் மனதில் படும், புதிய ஐடியாக்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். கூர்மையாக கவனிக்கும் திறன் மற்றவர்களை விட நீங்கள் முன்னே செல்ல உதவியாக இருக்கும். 
அதிர்ஷ்ட எண்: 1

simmam

சிம்மம் 
உங்களின் சந்தேக குணம் உங்களுக்குத் தோல்வியைக் கொண்டு வரும். வெளி நாடுகளில் தொழில்முறை தொடர்புகளை ஏற்படுத்த இது அருமையான நேரம். முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். 
அதிர்ஷ்ட எண்: 9

kanni

கன்னி 
ஒவ்வொருவரும் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். அதில் உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கலாம். சந்தேகமான நிதி விவகாரங்களில் சிக்கிவிடாமல் கவனமாக இருங்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து எதிர்பாராத பரிசுகளும் அன்பளிப்புகளும் வரும்.
அதிர்ஷ்ட எண்: 7

thulam

துலாம் 
நீண்ட கால அடிப்படையில் நீங்கள் முதலீடு செய்தால் கணிசமான லாபம் கிடைக்கும். குடும்ப டென்சன் உங்கள் பிரச்சினைகளை திசைதிருப்பி விடக் கூடாது. கெட்ட நேரம் அதிகமாக பாதிக்கும். சீனியர் லெவலில் உள்ளவர்களுடன் சில எதிர்ப்புகள் ஏற்பட்டாலும், நீங்கள் அமைதியாக இருக்க வேண்டியது முக்கியம். நீங்களாக முடிவெடுத்து, தேவையில்லாத செயல்களை செய்தால் இது துர் அதிர்ஷ்ட நாளாக இருக்கும். முன்கோபத்தால் சில பிரச்சினை ஏற்படலாம். 
அதிர்ஷ்ட எண்: 1

viruchagam

விருச்சிகம் 
உடல் நோயில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் விளையாட்டுப் போட்டியில் நீங்கள் பங்கேற்க முடியும். புதிய பண ஒப்பந்தம் இறுதியாகும், புதிதாக பணம் வரும். இன்று சில பிரச்சினைகளை சந்திப்பீர்கள். ஆனால் எப்போதும் போல உங்களின் இயல்பில் இருந்து மாறாமல், யதார்த்தமாக இருங்கள். உதவி செய்பவர்களிடம் அதிசயங்களை எதிர்பார்க்காதீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 2

dhanusu

தனுசு 
உங்களின் தாராள மனதை பிள்ளைகள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள இடம் தராதீர்கள். சில காலமாக நீங்கள் யோசித்து வந்தவாறு வேலையில் முக்கியமான மாற்றத்தை செய்ய வேண்டிய நேரம் இது. சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும்.
அதிர்ஷ்ட எண்: 8

makaram

மகரம் 
எல்லையில்லா பொருள் நிறைந்த வாழ்வை அனுபவிக்க உங்கள் வாழ்வை மேன்மையானதாக ஆக்கிடுங்கள். கவலைகள் இல்லாதிருப்பதே இதற்கான முதல் படியாகும். நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். உங்கள் நண்பரின் உதவியை நீங்கள் மிகவும் எதிர்பார்க்கும் நேரத்தில் அவர் கைவிட்டுவிடக் கூடும்
அதிர்ஷ்ட எண்: 8

kumbam

கும்பம் 
ஆரோக்கியத்தைப் பொருத்த வரை மிக நல்ல நாள். உற்சாகமான மன நிலை உங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் டானிக்காக இருந்து நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமாகத் தோன்றும். பிள்ளைகள் எதிர்காலத்துக்கு திட்டமிடாமல் வெளியில் சுற்றுவதில் அதிக நேரத்தை செலவிடுவதால் உங்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம். உறவினர்கள், நண்பர்களுடன் வெளியே செல்லும் போது அதிகம் செலவு செய்வதை தவிர்த்திடுங்கள். உங்கள் துணை உண்மையிலேயே ஒரு தேவதை தான். அதனை நீங்கள் இன்று உணர்வீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 6

meenam

மீனம் 
ஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். இது வரை நீங்கள் செய்த கடின உழப்பு இன்று உங்களுக்கு நல்ல பலன்களை தரும். இன்று உண்மையில் பலன் பெற விரும்பினால், மற்றவர்களின் யோசனைகளைக் கேளுங்கள். 
அதிர்ஷ்ட எண்: 4

மாவட்ட செய்திகள்

Most Popular

மாற்று பாதையில் சென்றது விவசாயிகளா? செல்ல வைத்தது டெல்லி போலீஸா? – குழப்பத்தில் தலைநகர்!

டெல்லி காவல் துறை அனுமதித்த வழித்தடங்களில் மட்டும் டிராக்டர் பேரணியை நடத்த கட்டுப்பாடுகள் நடத்திய நிலையில், விவசாயிகள் சிலர் வேறு பாதைகளில் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் தான் விவசாயிகள்...

பி.கே. சொன்ன பாயிண்ட்… கமல் விவகாரத்தில் ஒதுங்கிக்கொண்ட ஸ்டாலின்!

கமல்ஹாசனோடு கூட்டணி பேசினார் உதயநிதி ஸ்டாலின் என்று ஆரம்பகட்டத்தில் பேச்சு இருந்தாலும் அதன் பின்னர் அதுபற்றிய தகவல் எதுவும் இல்லை. விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்...

அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே எஞ்சியிருப்பதால்,...

புதிய பாதையில் செல்லுமாறு வற்புறுத்தும் டெல்லி போலீஸ்… தடைகளை தகர்த்த விவசாயிகள் பேரணி!

அனுமதிக்கப்பட்ட பாதை வழியே சென்ற டிராக்டர் பேரணியை புதிய பாதை வழியாக செல்லுமாறு டெல்லி போலீஸ் வற்புறுத்தியதால், விவசாயிகளுக்கும் போலீஸுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் மீது தடியடி நடத்தப்படுகிறது.
Do NOT follow this link or you will be banned from the site!