மனோஜ் திவாரியை கழட்டி விட்ட பா.ஜ.க…. டெல்லி பா.ஜ.க.வின் புதிய தலைவர் ஆதேஷ் குமார் குப்தா…

டெல்லி பா.ஜ.க. தலைவராக இருந்த மனோஜ் திவாரி கடந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வின் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகுவதாக கட்சி தலைமையிடம் தெரிவித்தார். ஆனால் பா.ஜ.க. மேலிடம் எதுவும் சொல்லாமல் இருந்து வந்தது. அதேசமயம் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியை சத்தமில்லாமல் மேற்கொண்டதாக தெரிகிறது.

மனோஜ் திவாரி

இந்நிலையில் நேற்று வடக்கு டெல்லி மாநகராட்சியின் முன்னாள் மேயர் மற்றும் தலைநகரில் மேற்கு படேல் நகரின் கவுன்சிலர் ஆதேஷ் குமார் குப்தாவை டெல்லி பா.ஜ.க.வின் புதிய தலைவராக பா.ஜ.க. மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பா.ஜ.க.வின் தேசிய பொது செயலாளர் அருண் சிங், பா.ஜ.க.வின் டெல்லி பிரிவு தலைவராக ஆதேஷ் குமார் குப்தாவை பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா நியமனம் செய்த தகவலை தெரிவித்தார்.

பா.ஜ.க.

புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டது தொடர்பாக ஆதேஷ் குமார் குப்தா பேட்டி ஒன்றில், என்னை போன்ற தாழ்மையான ஒரு கட்சி தொண்டனை மாநில கட்சி தலைவராக நியமனம் செய்தற்கு மோடிஜி, நட்டாஜி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். கோவிட்-19 சூழலில், கட்சியின அடித்தளத்தை விரிவுப்படுத்துவதும், ஒருங்கிணைப்பதும் சவாலான விஷயம் என தெரிவித்தார். டெல்லி பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் மனோஜ் திவாரியின் பதவிக் காலமும் இந்த ஆண்டோடு முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Most Popular

ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை

ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிர்ச்சியை ஏற்படுதியிருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பாஸ்குமார்(19), கள்ளக்குறிச்சி மாவட்டம் நயினார்பாளையம் செம்பாகுறிச்சி கிராமத்தை சேர்ந்த...

கேரளாவில் இன்று 1,298 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்தது

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில்...

இ-பாஸ் நடைமுறை எதற்கு?- முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தொற்று சென்னையில் சற்று குறைந்து வரும் நிலையில், மற்ற மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. மேலும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. ஆரம்ப காலத்தில் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்ததால் லட்சக்கணக்கானோர் சொந்த...

பாஜகவுக்கு தாவுகிறாரா அனிதா ராதாகிருஷ்ணன்?

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களாக பார்த்து பாஜக வலை விரிக்கிறது என்று பேசப்பட்டு வரும் சூழலில் அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல் பரவியது. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற வி.பி.துரைசாமி, கு.க.செல்வம்...