Home அரசியல் ம.பி காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை கடத்திய பா.ஜ.க! - சொகுசு ஹோட்டலில் உள்ளதாக குற்றச்சாட்டு

ம.பி காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை கடத்திய பா.ஜ.க! – சொகுசு ஹோட்டலில் உள்ளதாக குற்றச்சாட்டு

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கமல்நாத் முதல்வராக உள்ளார். இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் நான்கு பேரையும் சுயேட்சை எம்.எல்.ஏ-க்கள் நான்கு பேரையும் பா.ஜ.க தங்கள் பக்கம் இழுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த எட்டு பேரும் தற்போது ஹரியானா மாநிலம் குருகிராமில் (டெல்லி புறநகர் பகுதி) உள்ள சொகுசு ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ம.பி காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை கடத்திய பா.ஜ.க! - சொகுசு ஹோட்டலில் உள்ளதாக குற்றச்சாட்டு

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை இழுத்து ஆட்சியைப் பிடித்தது போல் மத்திய பிரதேசத்திலும் பா.ஜ.க ஆட்சியை பிடிக்க முயற்சி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கமல்நாத் முதல்வராக உள்ளார். இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் நான்கு பேரையும் சுயேட்சை எம்.எல்.ஏ-க்கள் நான்கு பேரையும் பா.ஜ.க தங்கள் பக்கம் இழுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த எட்டு பேரும் தற்போது ஹரியானா மாநிலம் குருகிராமில் (டெல்லி புறநகர் பகுதி) உள்ள சொகுசு ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

mp-mlas

இது குறித்து மத்திய பிரதேச நிதி அமைச்சர் தருண் பானோட் கூறுகையில், “எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. அவர்களை மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவர் வலுக்கட்டாயமாக குருகிராமில் உள்ள ஐடிசி மராத்தா ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், வெளியே செல்ல அனுமதிக்க மறுக்கின்றன என்றும் கூறினார். இது உண்மையா என்று அறிய ஐ.டி.சி ஹோட்டலுக்கு மத்திய பிரதேச அமைச்சர்கள் ஜெயவர்த்தன் சிங் மற்றும் ஜீது பட்வாரி ஆகியோர் சென்றனர். ஆனால், அவர்களை உள்ளே விட ஐடிசி நிர்வாகம் மறுத்துவிட்டது. ஹரியானாவில் பா.ஜ.க ஆட்சி உள்ளதால் அம்மாநில போலீசாரும் பா.ஜ.க-வின் மத்திய அமைச்சருக்கு ஆதரவாகவே நடந்துகொள்கின்றனர்” என்றார்.

shivraj-singh-chauhan

மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும் பா.ஜ.க தலைவருமான சிவ்ராஜ் சிங் சௌகான் மற்றும் பா.ஜ.க எம்.எல்.ஏ நரோட்டம் மிஸ்ரா ஆகியோர் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.25 முதல் 35 கோடி வரை வழங்க பேரம் பேசியதாக சமீபத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கூறியிருந்தார். இந்த நிலையில் எம்.எல்.ஏ-க்கள் கடத்தப்பட்டதாக காங்கிரஸ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் மத்திய பிரதேச அரசில் மாற்றம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ம.பி காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை கடத்திய பா.ஜ.க! - சொகுசு ஹோட்டலில் உள்ளதாக குற்றச்சாட்டு
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

இந்த ஆட்சியானது தாய்ப்பறவை போல செயல்படுகிறது…பாரதிராஜா மகிழ்ச்சி

மு. க. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் சென்று முதல்வருக்கு நேரில் வாழ்த்து சொன்னார் இயக்குனர் பாரதிராஜா. இந்நிலையில் தற்போது கொரோனா...

சிபிஎஸ்இ +2 தேர்வு தொடர்பான வழக்குகள் நாளை விசாரணை!

டபுள் மாஸ்க் அணிவித்து சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஒரு மாணவர் தரப்பு வாதம் செய்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக...

தமிழ்நாட்டில் மட்டும் கொரோனா 2ஆம் அலை கோரதாண்டவம் ஆடியது ஏன்? – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் கொரோனா முதல் அலை எட்டு மாதங்கள் நீடித்தது. இந்த அலை ஓரளவு குறைந்து வந்தடையடுத்து பிரதமர் மோடி கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டதாகப் பெருமிதம் தெரிவித்தார். கொரோனாவை வென்றுவிட்டதாக அவர் சொன்ன...

‘பப்ஜி மதனிடம்’ பணத்தை பறிகொடுத்ததாக 100க்கும் மேற்பட்டோர் புகார்!

யூடியூபில் பப்ஜி சொல்லிக் கொடுப்பது போல ஆபாசமாக பேசி பணத்தை குவித்து வந்தவர் பப்ஜி மதன். இவருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு போலீசில் 150க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்ததையடுத்து, போலீசார்...
- Advertisment -
TopTamilNews