மோதிரங்களை அளவுப்பார்ப்பதுபோல் விரலில் மாட்டிக்கொண்டு எஸ்கேப்!

தொடர்ந்து அடுத்தடுத்து மோதிரங்களை அளவுபார்க்க கேட்டதும், கடுப்பான சுதர்சன், முதலில் விரலில் மாட்டியிருக்கும் மோதிரங்களை கழற்றி வைக்கச் சொல்லிவிட்டு அடுத்த செட் மோதிரங்களை எடுக்க திரும்பியிருக்கிறார். அடுத்த செட் மோதிரங்களை எடுத்துவிட்டு திரும்பிப்பார்த்தவருக்கு அதிர்ச்சி.

சென்னை வியாசர்பாடியில் சுதர்சன் என்பவரின் நகைகடைக்கு நான்கு இளைஞர்கள் வந்திருக்கின்றனர். ஒருவர் மாற்றி ஒருவர்  வெவ்வேறு அளவுகளுடைய மோதிரங்களை போட்டுப்பார்த்துள்ளனர். யார் விரலுக்கு மோதிரம், எத்தனை மோதிரம், எத்தனை கிராமில் என எந்த கேள்விக்கும் முறையாக பதில் சொல்லாமல், வெவ்வேறு மோதிரங்களை விரல்களில் மாட்டி அளவுப்பார்ப்பதுபோல் போட்டுக்கொண்டு இருந்திருக்கின்றனர்.

Robbers

தொடர்ந்து அடுத்தடுத்து மோதிரங்களை அளவுபார்க்க கேட்டதும், கடுப்பான சுதர்சன், முதலில் விரலில் மாட்டியிருக்கும் மோதிரங்களை கழற்றி வைக்கச் சொல்லிவிட்டு அடுத்த செட் மோதிரங்களை எடுக்க திரும்பியிருக்கிறார். அடுத்த செட் மோதிரங்களை எடுத்துவிட்டு திரும்பிப்பார்த்தவருக்கு அதிர்ச்சி. விரலில் மாட்டியிருந்த மோதிரங்களோடு கம்பி நீட்டியிருக்கிறார்கள் வந்தவர்கள். சிசிடிவி காட்சியில் பதிவாகி இருக்கும் இளைஞர்களை அடையாளம் காணும் பணியில் காவல்துறை இறங்கியுள்ளது.

Most Popular

அமெரிக்காவிலும் களைகட்டிய ராமர் கோயில் பூமிபூஜை கொண்டாட்டங்கள்!

அயோத்தி ராமர் கோயில் பூமிபூஜை விழாவை அமெரிக்காவிலும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர் அங்குள்ள இந்தியர்கள். அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா இன்று சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் மொத்தம் 200 மத தலைவர்களுக்கு...

அண்ணாவின் கொள்ளுப்பேத்தி குடிமைப் பணி தேர்வில் வெற்றி – உதயநிதி வாழ்த்து

2019 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அதில் தேர்ச்சியானவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் நேர்காணல் நடத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பாதிப்பால் தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்தது....

புதுச்சேரியில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் குடும்பத்துடன் தலைமறைவு!

புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 286 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல் அதிகபட்சமாக ஒரே நாளில் 7பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 182 நபர்கள் புதுச்சேரியிலும், 21 பேர்...

மாப்பிள்ளை பிளஸ் டூ… மகள் இன்ஜினீயரிங்… காதல் திருமணத்தால் ஆத்திரம்!- அந்தஸ்தால் இளைஞரை கொன்று சாலையில் வீசிய பெண்ணின் தந்தை, தாய் மாமன்

பிளஸ் டூ படித்த காய் கறி வியாபாரியை இன்ஜினீயரிங் படித்து வரும் மகள் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் தந்தை, மாப்பிள்ளையை கொலை செய்துவிட்டு சாலையில் வீசி சென்ற...