மோடி பதவியேற்பு விழா: ஆஜராகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!?

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கவுள்ள விழாவில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிக்கு அழைப்பு வந்திருப்பதாகக் தகவல் வெளியாகியுள்ளது. 

புதுடெல்லி:  நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கவுள்ள விழாவில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிக்கு அழைப்பு வந்திருப்பதாகக் தகவல் வெளியாகியுள்ளது. 

மக்களவை தேர்தலில் பாஜக 353 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியை பின்னுக்கு தள்ளி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதன் மூலம் நரேந்திர மோடி  மீண்டும் பிரதமராக தேர்தெடுக்கப்படுகிறார்.

modi

இதைத்தொடர்ந்து, மோடி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆதரவு எம்பிகளுடன் புதிய அரசு அமைக்க கோரினார். இதையடுத்து குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் வரும் 30 ஆம்  தேதி மோடி, அவரது ஆதரவு எம்பிகளுடன் பதவியேற்பார் என்று குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில்  குடியரசு தலைவர் மாளிகையில் வரும் 30 ஆம் தேதி இரவு ஏழு மணிக்கு மோடி பதவியேற்கவுள்ளார். இந்த விழாவில் அரசியல் தலைவர்களும், திரைபிரபலங்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

rajini

அந்த வகையில் நடிகர் ரஜினிக்கு  மோடி  பிரதமராக பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தர்பார் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள ரஜினி வரும் 30 ஆம்  தேதி மும்பையிலிருந்து டெல்லி செல்வார் என்று கூறப்படுகிறது.

முன்னதாக பாஜக மீண்டும் வெற்றி பெற்றதற்கு நடிகர் ரஜினிகாந்த், ‘மதிப்பிற்குரிய பிரதமர் மோடி பாராளுமன்ற தேர்தலில் சாதித்து விட்டீர்கள், கடவுள் ஆசீர்வதிக்கட்டும். என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்’ என்று வாழ்த்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Most Popular

விருதுநகர் பட்டாசு ஆலையில் 25க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!

விருதுநகரில் தியாகராஜபுரம் அருகில் ராஜகண்ணு பட்டாசு தொழிற்சாலையில் 25க்கும் மேற்பட்ட பெண் குழந்தை தொழிலாளர்கள் மீட்கபட்டுள்ளனர். கடந்த இருபதாண்டுகளில் இந்தியாவில் மட்டும் இரண்டு லட்சம் குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றன. குழந்தை தொழிலாளர்களாகவும், கூலிக்கு அடிமைகளாகவும்...

வாடகை போலீஸ் ட்ரஸ்ஸை மாட்டினார் – லஞ்சம் வாங்கும்போது ஒரிஜினல் போலீசிடம் மாட்டினார்- போலீஸ் அதிகாரியாக நடித்து மாமூல் வாங்கிய பெண்.

டெல்லியில் ஒரு பெண், தான் டெல்லியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பணி புரியும் சப் இன்ஸ்பெக்டர் என்று கூறி பலரிடம் போலியான சலான்களை கொடுத்து பணம் வசூல் செய்துள்ளார் . டெல்லியில் இரண்டு...

கொரோனா தொற்று உறுதியானதால் ஞானவேல்ராஜா இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை!

பண மோசடி வழக்கில், சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ஆகஸ்ட் 27வரை நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது. 8 ஆம் தேதிக்குப் பின்னர் ஞானவேல்ராஜாவுக்கு கொரோனா...

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை முழுமையாக அகற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

வரும் 17 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தங்குதடையின்றி இ-பாஸ் அனுமதி கிடைக்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். ஆதார் அல்லது ரேஷன் அட்டை நகலுடன் விண்ணப்பித்தால் இ-பாஸ்...
Do NOT follow this link or you will be banned from the site!