Home தமிழகம் மோடி குறித்து அவதூறு பேசிய நெல்லை கண்ணனுக்கு ஜாமீன்! 

மோடி குறித்து அவதூறு பேசிய நெல்லை கண்ணனுக்கு ஜாமீன்! 

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பதிவான வழக்கில் நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கி நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சி சார்பில் நெல்லையில் நடந்த மாநாட்டில் தமிழ் இலக்கியவாதியும் காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான நெல்லை கண்ணன் கலந்து கொண்டார். அதில் நெல்லை கண்ணன், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தும் அமித்ஷாவின் சோலியை முடிக்க வேண்டும் என்று கூறினார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனையடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என்று பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன் பின்னர், நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார். 

Nellai Kannan

நெல்லை கண்ணன் கடந்த 3 ஆம் தேதி ஜாமீன் கேட்டு  நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பின்னர், கடந்த 7 ஆம் தேதி ஜாமீன் கேட்டு மீண்டும் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.  
 

மாவட்ட செய்திகள்

Most Popular

ஜெயலலிதாவின் பீனிக்ஸ் மண்டபத்தில் என்ன ஸ்பெஷல்?

சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை புராண கதைகளில் வருணிக்கப்பட்டாலும், அதை தமிழக அரசியலுக்கு நுழைத்தவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான். அதிலிருந்தே தமிழகத்தில் பீனிக்ஸ் பறவைக்கென்று ஒரு மவுசு...

‘அடுத்தடுத்து 21 பெண்கள் கொலை’.. சிக்கிய சைக்கோ கில்லர்: தெலுங்கானாவை அதிரவைத்த சம்பவம்!

தெலுங்கானாவில் அடுத்தடுத்து 21 பெண்களை கொலை செய்த சைக்கோ கில்லர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசித்து வரும் ஆனந்தையா என்பவர் தனது மனைவி...

கருணாநிதி நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் சுமார் ரூ.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள...

18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : காப்பக இயக்குநருக்கு போலீஸ் வலைவீச்சு!

பாலியல் தொல்லை கொடுத்த காப்பகத்தில் இருந்த 18 சிறுமிகள் மீட்கப்பட்ட சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் சமூக பொருளாதார கல்வி புனர்வாழ்வு...
Do NOT follow this link or you will be banned from the site!