Home அரசியல் ‘மோடியை விட ஸ்டாலின் சிறந்த தலைவர்’ - சந்திரபாபு நாயுடு சென்னையில் பேட்டி

‘மோடியை விட ஸ்டாலின் சிறந்த தலைவர்’ – சந்திரபாபு நாயுடு சென்னையில் பேட்டி

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று அவரது இல்லத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

அடுத்தாண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த, பிரம்மாண்ட கூட்டணி அமைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சியினர் இறங்கியுள்ளனர். குறிப்பாக, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் இதற்கான பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்திய சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோரை நேற்று சந்தித்து சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தியிருந்தார்.

அதன் தொடர்ச்சியக திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக இன்று சென்னை வந்திருந்தார் சந்திரபாபு நாயுடு. 

ஆலோசனைக்கு பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது ஸ்டாலின் பேசுகையில், “மத்தியில் நடைபெற்று வரும் மக்கள் விரோத பாஜக ஆட்சியை அப்புறப்படுத்த சந்திரபாபு நாயுடுவின் முயற்சிக்கு திமுக முழு ஆதரவை தெரிவித்துள்ளது. 

சிபிஐ, ஆர்பிஐ உள்ளிட்ட அமைப்புகள் சுதந்திரமாக செயல்படாத நிலை உள்ளது. மாநில உரிமைகளை மீட்க பாஜகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அதற்கு, மாநில கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும். விரைவில் அனைத்து தலைவர்களும் இணைந்து டெல்லியில் அல்லது வேறு முக்கிய மாநிலத்தில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

அதன்பின் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, “சிபிஐ, ஆர்பிஐ ஆகியவற்றின் பெருமையும் புகழும் குலைக்கப்படுகிறது. ஆளுநர்களை தங்கள் விருப்பத்துக்கு மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. பணமதிப்பு நீக்கத்தால் கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டு விட்டது. ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ் உட்பட அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். நாட்டின் நலன் மீது அக்கறை கொண்டவர்களை ஒரே தளத்தின் கீழ் ஒன்றிணைக்க முயற்சி செய்கிறோம். தனிநபர்களைப் பற்றி பேச இது நேரமல்ல, நாட்டின் நலன், ஜனநாயகமே இப்போது முக்கியம்.” என பேசியுள்ளார்.

மேலும், எதிர்கட்சிகளின் கூட்டணியை வழிநடத்தும் தலைவர் யார் என்ற கேள்விக்கு, கூட்டணியை வழிநடத்த பல தலைவர்கள் உள்ளதாகவும், மோடியை விட ஸ்டாலின் சிறந்தவர் என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
        

மாவட்ட செய்திகள்

Most Popular

‘என்தோழி’- ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கான பாதுகாப்பு படை!

எக்ஸ்பிரஸ் ரயில்களில் ‘என்தோழி’திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இதன் மூலம் ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் அவர்கள் வீடு சென்று சேரும் வரை பெண்போலீசாரால் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

“கான்ஸ்டபிள் வருவார் ,கண்ட இடத்தில் தொடுவார்” -காவல் நிலையத்தில் கற்பமாக்கப்பட்ட சிறுமி கதறல்

சிறுமிகள் காப்பகத்திலிருந்து தப்பிய சிறுமியை ஒரு தலைமை கான்ஸ்டபிள் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அங்கு பலரை அதிச்சியடைய செய்துள்ளது

“அமைச்சர் துரைக்கண்ணு முழு நலம் பெற்று மீண்டும் வர வேண்டும்” – மு.க ஸ்டாலின் பதிவு!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைக்கண்ணு, பூரண குணமடைய பிரார்த்திப்பதாக மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

‘ஸ்டாலின் சொல்லித்தான் திருமாவளவன் பெண்களை இழிவாக பேசியுள்ளார்’ : ஹெச்.ராஜா

திருமாவளவனுக்கு சமஸ்கிருதம் தெரியுமா? என்று பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். திருமாவளவன் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு...
Do NOT follow this link or you will be banned from the site!