Home க்ரைம் மொபைல் போனில் நியூஸ் பார்த்தால் பணம்! - நூதன மோசடியில் ஈடுபட்ட பட்டதாரிகள் கைது!

மொபைல் போனில் நியூஸ் பார்த்தால் பணம்! – நூதன மோசடியில் ஈடுபட்ட பட்டதாரிகள் கைது!

ஈரோடு அருகே மொபைலில் செய்தியைப் பார்த்தாலே ஆயிரக் கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி மக்களை ஏமாற்றிய பி.இ பட்டதாரிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் “மொபைல் போன் ஆப்-ல் ஏ.டி.சி நியூஸ் என்ற செய்தி சேனல் தொடங்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்தாலே வருமானம் கிடைக்கும். ஆந்திராவில் அதிக வருமான வரி செலுத்தியதற்கான சான்றிதழ் பெற்ற நிறுவனம். இந்திய அரசின் அங்கீகாரம் பெற்றது” என்று எல்லாம் கூறி ஒரு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. மேலும், இது போன்ற விளம்பரம் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் பரப்பப்பட்டது.

மொபைல் போனில் நியூஸ் பார்த்தால் பணம்! - நூதன மோசடியில் ஈடுபட்ட பட்டதாரிகள் கைது!

Money Fraud in Erode

மேலும், செல்போன் வைத்துள்ள அனைவருக்கும் இந்த வாய்ப்ப உள்ளது. ஆட்களை சேர்க்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தனர். இந்த மொபைல் ஆப்பில் மைக்ரோ, மினி, பேசிக், சில்வர், கோல்டு, டைமண்ட் என்று திட்டங்கள் உள்ளன. இதில், நீங்கள் எந்த திட்டத்திலாவது சேரலாம். அப்படி சேர்ந்தால் மாதந்தோறும் ரூ.277 முதல் 8,704 வரை கிடைக்கும். இந்த திட்டங்களின் விலை ரூ.1440 முதல் ரூ.46,080 வரை. உங்களுக்கு கீழ் ஒருவர் ரூ.46,080 கொடுத்து சேர்ந்தால், அதில் 10 சதவிகிதம் உடனடியாக உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று எல்லாம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இது மோசடி திட்டம் என்பதை புரிந்து பலரும் இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து நாமக்கல் மாவட்டம் ஆலம்பாளையத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் (25), ஈரோடு மாவட்டம் தேவஸ்தானபுரத்தைச் சேர்ந்த பிரபாகரன் (25) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் எத்தனை பேரை ஏமாற்றினார்கள், எவ்வளவு வசூல் செய்தார்கள், இதில் யார் யாருக்கு எல்லாம் தொடர்பு என்று விசாரணை செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரும் பி.இ பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மொபைல் போனில் நியூஸ் பார்த்தால் பணம்! - நூதன மோசடியில் ஈடுபட்ட பட்டதாரிகள் கைது!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

5 தினங்களில் ரூ.3.72 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. சென்செக்ஸ் 130 புள்ளிகள் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் சரிவை சந்தித்தது. கடந்த 5 வர்த்தக தினங்களில் சென்செக்ஸ் 130 புள்ளிகள் குறைந்தது.

திமுக ஊராட்சி மன்ற தலைவருக்கு வீடு புகுந்து கொலை மிரட்டல்

மதுரை விக்கிரமங்கலம் அருகே ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்றிய திமுக ஊராட்சி மன்றத் பெண் தலைவர் வீட்டிற்குள் ஐந்திற்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் சென்று வீடு, கார் மீது...

2 மாத குழந்தை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை

தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் அப்துல்லாபூர்மேட் மண்டலம் அனாஜ்பூரில் 2மாத குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
- Advertisment -
TopTamilNews