மெல்ல மெல்ல குறையும் ரொக்க வர்த்தகம்! கடைகளில் டெபிட் கார்டு ஸ்வைப் அதிகரிப்பு…

வங்கி வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் டெபிட் கார்டை ஏ.டி.எம். எந்திரங்களில் பணத்தை எடுக்க மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.

டெபிட் கார்டை ஏ.டி.எம். மிஷினில் மட்டுமே பயன்படுத்தி வந்த நம்மவர்கள் தற்போது சிறுகடைகளில் பொருட்கள் வாங்கவும் டெபிட் கார்டை யூஸ் பண்ணுவது அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது.

card

வங்கி வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் டெபிட் கார்டை ஏ.டி.எம். எந்திரங்களில் பணத்தை எடுக்க மட்டுமே பயன்படுத்தி வந்தனர். ஆனால், ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு பொருட்கள் வாங்கவும் டெபிட் கார்டை யூஸ் பண்ணுவது அதிகரித்து விட்டது. கடைகளில் உள்ள ஸ்வைப் மிஷின்களில் டெபிட் கார்ட் பயன்படுத்தி பொருட்கள் வாங்குவது தற்போது அதிகரித்து வருகிறது.

rbi

இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையைபடி, கடந்த ஏப்ரல் மாதத்தில் டெபிட் கார்டு வாயிலாக 80 கோடி பண பரிவர்த்தனைகள நடைபெற்றுள்ளது. மொத்தம் ரூ.2.84 லட்சம் கோடிக்கு அந்த மாதத்தில் டெபிட் கார்ட் வாயிலாக பரிவர்த்தனை நடந்தது. மொத்த டெபிட் கார்ட் பரிவர்த்தனையில் ஏ.டி.எம். பங்கு என்று பார்த்தால் 66 சதவீதம். பாயிண்ட் ஆப் சேல்ஸ் எந்திரங்கள் (ஸ்வைப் மிஷின்கள்) பங்கு 34 சதவீதமாக உள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இது 31.4 சதவீதமாக இருந்தது. ஆக, பொதுமக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவதை இது வெளிப்படுத்துவதாக உள்ளது.

டிஜிட்டல் பணபரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வரும் வேளையில், ரிசர்வ் வங்கியின் இந்த அறிக்கை மத்திய அரசுக்கு மகிழ்ச்சி கொடுப்பதாக இருக்கும்.

Most Popular

தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் பலி! பட்டியலோடு நிரூபித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

இவர்களை தவிர வேறுயாரும் வெளியில் வரக்கூடாது! சென்னைவாசிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தல்!!

சென்னை பெருநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “சென்னையில் 08.08.2020 இரவு 12.00 மணி முதல் 10.08.2020 தேதி காலை 06.00 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு...

2 வாரங்களில் குழந்தையை பார்ப்போம் என்ற கனவுடன் இருந்த விமானி! விபத்தில் பலியான கொடுமை!!

கேரளாவின் கோழிக்கோடு விமானநிலையத்தில் நேற்றிரவு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மானி தீபக் வசந்த் சாதே, துணை விமானி அகிலேஷ் ஷர்மா உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 123 பேரில்...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் தப்பியோட்டம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் நெய்வேலிக்கு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மூதாட்டி கஸ்தூரி என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கேகே நகரில்...