Home சினிமா ‘மெர்சல்’ பட நடிகர் சீனு மோகன் மரணம்; தமிழ் திரையுலகம் இரங்கல்

‘மெர்சல்’ பட நடிகர் சீனு மோகன் மரணம்; தமிழ் திரையுலகம் இரங்கல்

 விஜய், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் நடித்த நடிகர் சீனு மோகன் மாரடைப்பால் உயிரிழந்தார்.

‘மெர்சல்’ பட நடிகர் சீனு மோகன் மரணம்; தமிழ் திரையுலகம் இரங்கல்

சென்னை: விஜய், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் நடித்த நடிகர் சீனு மோகன் மாரடைப்பால் உயிரிழந்தார்.

கிரேஸி மோகனின் நாடகக் குழுவில் முக்கிய நடிகராக பணியாற்றி வந்த குணச்சித்திர நடிகர் சீனு மோகன்(61) மாரடைப்பால் காலமானார். சுமார் 3000-க்கும் அதிகமான மேடை நாடகங்களில் நடித்த சீனு மோகன், தமிழ் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமானவர்.

cheenumohan

சமீபத்தில் வெளியான ‘வடசென்னை’, ‘கோலமாவு கோகிலா’, ’செக்கச் சிவந்த வானம்’, ‘மெர்சல்’ உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். சீனு மோகனின் மரணம் தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சீனு மோகனின் மறைவுக்கு நடிகர் கிரேஸி மோகன் உட்பட தமிழ் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது உடல் சென்னை அண்ணாநகரில் உள்ள மின் மயானத்தில் நாளை மறுநாள் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மெர்சல்’ பட நடிகர் சீனு மோகன் மரணம்; தமிழ் திரையுலகம் இரங்கல்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

5 தினங்களில் ரூ.3.72 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. சென்செக்ஸ் 130 புள்ளிகள் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் சரிவை சந்தித்தது. கடந்த 5 வர்த்தக தினங்களில் சென்செக்ஸ் 130 புள்ளிகள் குறைந்தது.

திமுக ஊராட்சி மன்ற தலைவருக்கு வீடு புகுந்து கொலை மிரட்டல்

மதுரை விக்கிரமங்கலம் அருகே ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்றிய திமுக ஊராட்சி மன்றத் பெண் தலைவர் வீட்டிற்குள் ஐந்திற்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் சென்று வீடு, கார் மீது...

2 மாத குழந்தை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை

தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் அப்துல்லாபூர்மேட் மண்டலம் அனாஜ்பூரில் 2மாத குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மேகதாது அணை கட்டும் முடிவை கைவிட வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்

மேகதாது அணை கட்டும் முடிவை நிறுத்த வேண்டும் என கர்நாடக அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய...
- Advertisment -
TopTamilNews