மெக்சிகோவில் பெருவெள்ளம் – மீட்பு பணி தீவிரம்!

மெக்சிகோவில் பெய்த பெருமழையால் வெள்ளப் பெருக்கெடுத்து வயல்வெளிகளில் நீர் புகுந்தன. பொதுமக்களை மீட்கும் பணி ஹெலிகாப்டரில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மெக்சிகோ நாட்டின் கடலோர மாநிலங்களில் நார்த்தா எனும் புயல் வீசி வருகிறது. இதனால் பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை அந்தந்த மாநிலங்களில் தொடர்ந்து சில நாட்களாக பெய்து வருகிறது. இந்த கனமழையால் நீர்நிலைகள் மற்றும் அணைகள் நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டன.

மெக்சிகோவில் பெய்த பெருமழையால் வெள்ளப் பெருக்கெடுத்து வயல்வெளிகளில் நீர் புகுந்தன. பொதுமக்களை மீட்கும் பணி ஹெலிகாப்டரில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மெக்சிகோ நாட்டின் கடலோர மாநிலங்களில் நார்த்தா எனும் புயல் வீசி வருகிறது. இதனால் பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை அந்தந்த மாநிலங்களில் தொடர்ந்து சில நாட்களாக பெய்து வருகிறது. இந்த கனமழையால் நீர்நிலைகள் மற்றும் அணைகள் நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டன. இருப்பினும் கொள்ளளவை தாண்டி சென்றதால் நிரம்பி வழிந்து அருகிலுள்ள சாலைகள் மற்றும் வயல்வெளிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

mexico

முக்கிய நகரங்களில் பலத்த சூறாவளி காற்றுக்கு மரங்கள் சாய்ந்தது வீடுகளில் விழுந்ததில் வெகுவான சேதங்கள் ஏற்பட்டன. மேலும் இந்த இடிபாடுகள் மற்றும் வெள்ளத்தில் மக்கள் பலர் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடி வருகின்றனர். இவர்களை படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கும் பணியில் மெக்சிகோ நாட்டின் ராணுவம் ஈடுபட்டுவருகிறது.

இதுமட்டுமில்லாமல், மலைப்பகுதிகளில் பெய்த தொடர் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு மீட்புப் பணிக்காக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி நடைபெற்று வருவதால் ஒவ்வொருவராக மட்டுமே மீட்கப்பட்டு வருகின்றனர். இதனால் பலர் உணவின்றி யும், மூச்சுத்திணறல் ஏற்பட்டும், நீண்ட நேரம் நீரில் இருப்பதால் உடல்நிலை சரியில்லாமலும் உயிரிழக்க நேரிடலாம். 

இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு துவங்கவில்லை. மழை பெய்வது நின்ற பிறகு இதுகுறித்து கணக்கெடுப்புகள் துவங்கும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

சினாலோ, ஒசாக்கோ, ஜாலிஸ்க்கோ ஆகிய நகரங்கள் இந்த புயல் மற்றும் வெள்ளத்தினால் வெகுவாக பாதிப்பிற்கு உள்ளாகின.

Most Popular

காங்கிரசின் இந்துத்துவா ஆதரவு நிலைப்பாட்டை ராகுல், பிரியங்கா காந்தி பின்பற்றுகிறார்கள்.. பினராயி விஜயன்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜைக்கு காங்கிரசின் முக்கிய தலைவர்களான ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் வாழ்த்து தெரிவித்தது எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை என செய்தியாளர்களின் சந்திப்பின் போது கேரள...

ராமர் கோயில் பூமி பூஜை.. மக்களின் மத உணர்வுகளை வெளிப்படையாக சுரண்டுவது.. சீதாராம் யெச்சூரி ஆவேசம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி ராமர் கோயில் பூமி பூஜை விழாவை கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், இந்த பூமி பூஜை விழா...

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் தந்தைவழி உறவுகளால் நன்மைகள் வந்து சேரும்!

இன்றைய ராசிபலன்கள் 7.08. 2020 (வெள்ளிக்கிழமை) நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை ராகு காலம் 10.30 மணி முதல் 12 வரையில் எமகண்டம்...

சீன அத்துமீறலை ஒப்புக்கொண்ட பாதுகாப்பு துறை அமைச்சகம்.. பிரதமர் மோடி ஏன் பொய் சொல்கிறார்?.. ராகுல் தாக்கு

கடந்த மே மாதம் சீன ராணுவம் இந்திய எல்லையில் ஊடுருவ முயற்சி செய்தது. இதன் உச்ச கட்டமாக கடந்த ஜூன் 15ம் தேதியன்று கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு...