Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் மூலம், பெளத்திரம் நீங்க எளிமையான இயற்கை கை வைத்தியம்!!

மூலம், பெளத்திரம் நீங்க எளிமையான இயற்கை கை வைத்தியம்!!

பெளத்திரம் என்பது ஆசன வாய்ப்பகுதியின் வெளிப்புறத்தில் ஏற்பட்ட புண் காரணமாக மலப்புழைக்கும், வெளிப்புறத் தோல் பகுதிக்கும் இடையே ஏற்படும் துவாரம் ஆகும்

பெளத்திரம் என்பது ஆசன வாய்ப்பகுதியின் வெளிப்புறத்தில் ஏற்பட்ட புண் காரணமாக மலப்புழைக்கும், வெளிப்புறத் தோல் பகுதிக்கும் இடையே ஏற்படும் துவாரம் ஆகும்.

அதாவது, மலக்குடலுக்கும், ஆசன வாய்ப்பகுதிக்கும் இடையே காணப்படும் குழாய் போன்ற புண்ணாகும்.

நோயின் இயல்பு :

அதிக உடல் உழைப்பு, அதிக கோபம், அதிக மோகம், காமம் இவைகளால் உடலில் உஷ்ணம் மீறி, தாதுக்கள் பலம் குறைந்து, மேகம் உண்டாகி ஆசனவாயின் உள்ளேயும், வெளியேயும், பக்கவாட்டிலும் முளைகளாகவும், கட்டிகளாகவும், புற்று கண்கள் போன்று வீக்கம் ஏற்பட்டு, அரிப்பு உண்டாகி கட்டிகள் பழுத்து உடைந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துளைகளில் இருந்து சீழ் மற்றும் ரத்தம் வடியும் இயல்புடைய நோயாகும்.

மலக்குடலில் துளைவிடுவதால் மலம் + நீரும் இதன் வழியாக வெளியேறும் கொடுமையான நோயாகும். இதை கவனிக்காமல் விட்டால் நோய் முற்றி புற்று நோயாக மாறிவிடும்.

அதாவது குதம் மற்றும் குய்யப்பகுதியில்  ஒரு குழாய் போன்ற துளை ஏதேனும் ஒரு பகுதியில் ஆரம்பித்து மறு பகுதியில் சென்று முடியும். 

அது தொடங்கும் இடத்திலோ அல்லது முடியும் இடத்திலோ அல்லது இரண்டு முனைகளிலுமோ திறப்பை உடையதாக இருந்து அதன் வழியே மலம், நீர், ரத்தம், சீழ் அல்லது நிணநீரும் கசியும் படி அமைப்பை பெற்றதாக இருக்கும். இது இடத்திற்கு ஏற்றவாறு பல்வேறு பெயர்களுடன் உண்டு

இந்நோயை 8 விதமாக பிரித்துள்ளனர். சர கண்ட மாலை, ஆசன கண்ட மாலை, கொடிப் பெளத்திரம், மேகப் பெளத்திரம், கிரந்தி பெளத்திரம், பக்க பெளத்திரம், மூலப் பெளத்திரம், ஆசனப் பெளத்திரம் எனக் கூறப்படுகிறது. பொதுவாக இதனை இருவகையாக பிரிக்கலாம்.

**மேல்பக்க பெளத்திரம் – இது குணமாவது கடினம்.

**கீழ்பக்க பெளத்திரம் – இந்த வகை பெளத்திரத்தில் துர்நாற்றத்துடன் கூடிய கசிவானது சொட்டு சொட்டாக இறங்கும்.

மூலநோய் 21 வகைகள் அவை:

நீர் மூலம், செண்டு மூலம், முளை மூலம், சிற்று மூலம், வரண் மூலம், ரத்த மூலம், வினைமூலம், மேக மூலம், பௌத்திர மூலம்,  கிரந்திமூலம், சூத மூலம், வெளி மூலம், சீழ் மூலம், ஆழி மூலம், தமரக மூலம், வாத மூலம், பித்த மூலம், சிலேத்தும மூலம், தொந்த மூலம், கவ்வு மூலம், உள் மூலம்.

ஆசனவாயின் உட்பகுதியிலுள்ள சிரைகள் வீங்கிப்பருத்து வெளிவருவதைத்தான் மூல நோய் என்கிறார்கள்.

மூலதாரம் சூடு ஏறி மலபந்தமாகும்போது, மலம் வெளியேறாமல் உள்ளுக்குள்ளேயே நின்று இறுக்குகிறது. முக்கி வெளியேற்ற முற்படும்போது மலவாய்க் குடலில் இருந்து சிரைகள் பாதிக்கப்பட்டு வெளியே தள்ளிக்கொண்டு வந்து விடுகின்றன.

தவிர, காய்ந்த மலம் ஆசனவாயைக் கிழிப்பதால் ரத்தம் பீறிட்டு வெளியே வரும். ஒவ்வொரு நாளும் இதே மாதிரி மலம் கழிக்கும்போது அந்த வாய்ப் பிளந்து கொள்ளும். இதை பிஷ்ஸர் அல்லது ஆசனவாய் வெடிப்பு என்கிறார்கள்.

இது புண்ணாகி நாளடைவில் சீழ் மூலம் அல்லது பவுத்திரமாக மாறும். இவ்வாறே நவ மூலங்கள் உண்டாகின்றன. இதில் ஒன்பது வகைகள் மிகக் கடுமையானவை என்பதால் இவற்றை நவமூலம் என்றும் சொன்னார்கள்.

மூலநோய்கள், பெளத்திரம், நவமூலங்களும் குணமாக மருத்துவம்!

ரத்த மூலம்:

சுண்டைக்காய் – ஐந்து எண்ணம்

பூண்டுப் பற்கள் – இரண்டு எண்ணம்

சின்ன வெங்காயம் – இரண்டு எண்ணம்

மிளகு – ஏழு எண்ணம்

சீரகம் – அரைத் தேக்கரண்டி

ஆகிய பொருட்களை சேர்த்து ஒன்றிரண்டாக இடித்து இருநூறு மில்லி தண்ணீரில் போட்டு சிறு தீயில் கொதிக்க வைத்து நூறு மில்லியாக சுருங்கியபின், தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டி காலை ஒருவேளை தினமும் குடித்து வர பதினைந்து நாட்களில் ரத்த மூலம் குணமாகும். நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து குடித்து வர மற்ற மூல நோய்களும் குணமாகும்.

நாள்தோறும் காலையில் காப்பி டீ குடிப்பது போல மூல நோய் இல்லாதவர்களும் அனைவரும் குடிக்கலாம். குழந்தைகளுக்கு இந்த பிரச்னை இருந்தால் ஓரிரு தேக்கரண்டி இந்த சுண்டைக்காய் கசாயம் கொடுத்து வர குணம் கிடைக்கும்.

திப்பிலி – ஐந்து கிராம்

வால் மிளகு- ஐந்து கிராம்

கருஞ்சீரகம் – ஐந்து கிராம்

பெருங்காயத்தூள்- ஐந்து கிராம்

இந்துப்பு – பதினைந்து கிராம்

அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அரைத்து தூளாக்கி வைத்துக் கொள்ளவும்.

தினமும் இரவு உணவுக்குப் பின் அரை மணி நேரம் கழித்து அரைத்து வைத்துள்ள பொடியில் இரண்டு கிராம் தூளை தேவையான அளவு நாட்டுப் பசு நெய்யில் குழைத்து உண்டு வர படிப் படியாக பவுத்திர நோய் குணமாகும்.

இரேவல் சின்னி – 5 கிராம்

இசப்புகோல்-50 கிராம்
(சப்சா விதை)

நிலவாரை-30 கிராம்

கடுக்காய்-15 கிராம்

என்ற அளவில் எடுத்து, இடித்து, பொடித்து, சலித்து ஒன்று அல்லது இரண்டு கிராம் தினமும் இரவில் இளஞ்சூடான நீரில் கலந்து, குடித்துவர அதி காலையில் மலம் எளிதாக வெளியேறும். நாட்பட்ட மலச்சிக்கலும் நீங்கும்.

திரிகடுகு சூரணம் – முப்பது கிராம்

காட்டுக் கருணைக் கிழங்கு – நூறு கிராம்

இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து எடுக்கவும். தினமும் இரவு உணவுக்குப் பின் அரை மணி நேரம் கழித்து நூறு மில்லி நாட்டுப் பசும்பாலை கொதிக்க வைத்து இறக்கி மிதமான சூட்டில் பத்து கிராம் அளவுக்கு அரைத்து வைத்துள்ள தூளைப் போட்டு கலக்கி குடித்து வர பல்வேறு வகையான மூல நோய்களும் குணமாகும் மலச்சிக்கலும் சரியாகும்.

நோயின் தீவிரத்துக்கு ஏற்றாற்போல் பாலில் சேர்க்கும் சூரணத்தின் அளவை கூட்டியோ குறித்தோ பயன் படுத்திக் கொள்ளலாம்.

உள் மூலம் குணமாக:

சின்ன வெங்காயம் – இருபத்தி ஐந்து கிராம் நறுக்கியது

மிளகு- ஐந்து கிராம்

பனை வெல்லம் – இருபது கிராம்

செக்கு நல்லெண்ணெய் -நூறு மில்லி

நல்லெண்ணெயை நன்கு காய்ச்சி நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்கி மிளகுத் தூளை போட்டு வேக விட்டு பின் பனை வெல்லம் சேர்த்துக் கிளறி அனைத்துப் பொருட்களும் வெந்து வந்தபின் இறக்கி வடி கட்டி ஆறவைத்துக் கிடைக்கும் தைலத்தைப் பாட்டிலில் சேமித்து வைக்கவும்.

தினமும் இரவு உணவுக்குப் பின் அரை மணி நேரம் கழித்து பத்து மில்லி தைலத்தை உள்ளுக்குக் குடித்து வர வர படிப் படியாக உள் மூலம் குணமாகும்.

கருணைக் கிழங்கு ஐம்பது கிராம், எடுத்து மேல் தோல் நீக்கி சிறி சிறு துனுகளாக நறுக்கி எடுத்து நூறு மில்லி நாட்டுப் பசு நெய்யைக் காய்ச்சி காய்ந்து கொண்டிருக்கும் நாட்டுப் பசு நெய்யில் நறுக்கி வைத்துள்ள சேனைக் கிழங்கு துண்டுகளைப் போட்டுப் பொன்னிறமாக வறுபட்ட பின் இறக்கி தைலப் பதத்தில் வடி கட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த நெய்யில் பத்து மில்லி தினமும் இரவு உணவுக்குப் பின் அரை மணி நேரம் கழித்துக் குடித்து வர மூல நோய் படிப் படியாகக் குணமாகும்.

கஸ்தூரி மஞ்சள் – ஒரு துண்டு

பிரண்டை-. நான்கு கணுக்கள் ( நரம்பு நீக்கி எடுக்கவும் )

இரண்டையும் சேர்த்து அரைத்து விழுதாக்கி பத்து கிராம் அதாவது ஒரு கொட்டைப் பாக்கு அளவு எடுத்து நாள்தோறும் காலை, இரவு என இரு வேளைகள் உணவுக்கு முப்பது நிமிடங்களுக்கு முன் சாப்பிட்டு வர மூலம் நோய் குணமாகும்.

மூன்று முதல் ஆறு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர மூல பவுத்திரம் நோய் குணமாகும். ஆறாத புண்கள் சீழ் வைத்த புண்கள் ஆற, இந்த விழுதை மேற் பூச்சாகப் பூசி வர ஆறாத புண்கள் சீழ் வைத்த புண்கள் ஆறும்.

குப்பை மேனித் துவையல்:

செக்கு நல்லெண்ணெய் – தேவையான அளவு

நெல்லி வற்றல் – ஐந்து

திப்பிலி -. ஐந்து

கருப்பு உளுந்து – இரண்டு தேக்கரண்டி

மிளகு-அரை தேக்கரண்டி

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி ஒவ்வொரு பொருளாகப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும்

மறுபடியும் வாணலியில் சிறிது நெல்லேண்ணெய் ஊற்றி குப்பைமேனி இலைகள் இருபது எண்ணம், சின்ன வெங்காயம் நறுக்கியது தேவையான அளவு, அரை தக்காளி நறுக்கியது

போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி 

இரண்டையும் சேர்த்து நன்கு அரைத்து இந்துப்பு சேர்த்து துவையலாக அரைத்து  சாப்பிட்டு வர மூலம் , பெளத்திரம், ரத்த மூலம்,  ஆசன வாய் எரிச்சல், ஆசன வாய் அரிப்பு, ஆசன வாய் நமைச்சல் போன்ற நோய்கள் குணமாகும்.

விளக்கெண்ணெய் நூறு மில்லி, குப்பை மேனி இலைகளை அரைத்து எடுத்த சாறு ஐந்து தேக்கரண்டி

வாணலியில் விளக்கெண்ணெயயை ஊற்றி நன்கு காய்ச்சி அத்துடன் குப்பைமேனி இலை சாறு ஊற்றிக் கலந்து கொதிக்க விட்டு தைலப் பதம் வந்தவுடன் இறக்கி பத்திரப்படுத்திக் கொள்ளவும்.

மேற்கூறிய நோய் உள்ளவர்கள் தினமும் இரவில் உணவு உண்ட பின் அரை மணி நேரம் கழித்து நூறு மில்லி நாட்டுப் பசும்பாலைக் காய்ச்சி இறக்கி இளஞ்சூட்டில் இருக்கும் பாலுடன் அரை தேக்கரண்டி ஏற்கெனவே செய்து வைத்துள்ள குப்பைமேனி தைலம் கலந்து மிதமான சூட்டில் குடித்துவர அனைத்து ஆசன வாய் நோய்களும் மூல பெளத்திரமும் குணமாகும்.

வெங்காயம் – இருபது கிராம்

விஜயன் கடுக்காய்- இருபது கிராம்

சீரகம்-இருபது கிராம்

கோரைக் கிழங்கு – இருபது கிராம்

அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

தினமும் இரவு உணவுக்குப் பின் அரை மணி நேரம் கழித்து அரைத்து வைத்துள்ள பொடியில் இரண்டு கிராம் தூளை தேவையான அளவு நாட்டுப் பசு நெய்யில் குழைத்து உண்டு வர படிப் படியாக பெளத்திரம் குணமாகும் . 

மருந்து மூன்று: 

தினமும் இரவு ஒரு வாழைப் பழத்தை அரைத் தேக்கரண்டி விளக்கெண்ணையில் தோய்த்து சாப்பிட்டு வர நோய் கட்டுப் படும். இது ஒரு கை கண்ட எளிய அனுபவ வீட்டு மருத்துவம் ஆகும்

திரிபலா சூரணம்-முப்பது கிராம், மிளகுத் தூள்- ஐந்து கிராம், தோல் நீக்கிய சுக்குத் தூள்- ஐந்து கிராம், அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து சூரணமாக எடுத்துக் கொள்ளவும். இதில் மூன்று கிராம் சூரணத்துடன் பனை வெல்லம் தேவையான அளவு தூள் செய்து கலந்து இரவு உணவுக்குப் பின் அரை மணி நேரம் கழித்து சாப்பிட்டு வர படிப்படியாக மூல பெளத்திரம், வலி, கெட்ட வாய்வு நீங்கும்.

மூலத்தைப் போக்கும் சுகபேதி அல்வா:

▪️ விதை நீக்கிய பேரீச்சை

▪️ விதைநீக்கிய உலர்ந்த திராட்சை

▪️ நாட்டு வெல்லம்

▪️ உலர்ந்த நிலவாகை இலைப்பொடி

ஆகியவற்றைச் சம அளவு எடையில் எடுத்துக் கொள்ளவும். இவற்றை வரிசைப்படி ஒவ்வொன்றாக இட்டு இடித்துக் கலக்கினால், அல்வா பதத்தில் லேகியம் போல மருந்து கிடைக்கும்.

இதுதான், ‘சுகபேதி அல்வா’.

தினமும், மாலை 5 முதல் 6 மணிக்குள் இந்த மருந்தை நெல்லிக்காயளவு (5 கிராம் ) உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் நீங்கும். ரத்த மூலம், பவுத்திரம், மலவாய்க்கட்டி போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது அற்புத மருந்து. இந்நோய்களை முற்றிலுமாகக் குணப்படுத்தும். சர்க்கரை நோயுள்ளவர்களும் இம்மருந்தை சாப்பிடலாம்.

கொட்டைகரந்தைச் சூரணம்:

கொட்டக் கரந்தையை காய்க்காத செடியாக சேகரித்து நிழலிலுலர்த்தி இடித்த சூரணம் 350 கிராம்.

கருஞ்சீரகம், கடுக்காய்த் தோல், தான்றிக்காய்த் தோல், வசம்பு, திப்பிலி, மிளகு, இந்துப்பு, வாலுழுவை, கோஷ்டம், சுக்கு, சிறுதேக்கு, கார்போகரிசி (சம்மங்கி விதை), கொடிவேலி வேர் பட்டை

இவைகள் வகைக்கு 35 கிராம் இடித்து சூரணம் செய்து, அரைத்து, முன் சூரணத்துடன் பனை வெல்லம், தேன் சம அளவு சேர்த்து நாட்டு மாட்டு நெய் விட்டு கிண்டி வைக்கவும்.

தினம் காலை மாலை இருவேளை பெரிய கொட்டைப் பாக்களவு சாப்பிடவும். சகல மூலம், பெளத்திரம் தீரும்.

கருணைக்கிழங்கு குழம்பு:

கருணைக் கிழங்கை உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும். எலுமிச்சை அளவு புளியை கெட்டியாக கரைத்து கொள்ளவும். சின்ன வெங்காயம் ஒரு கப் அளவு உரித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

இத்துடன் மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி அத்துடன் புளிக்கரைசல் சேர்த்து உப்பு போடவும். வேக வைத்த கருணைக்கிழங்கை உதிர்த்து கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும். கெட்டியானதும் இறக்கவும். மூலத்தால் உண்டாகும் புண்களை கருணைக் கிழங்கு குணப்படுத்தும்.

வெந்தயக் கீரை கட்லட்:

கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெந்தயக் கீரையை சுத்தம் செய்து நெய்யில் வதக்கவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய காய்கறிகளுடன் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, ரொட்டித்தூள், வதக்கிய வெந்தயக் கீரை, பச்சைப் பட்டாணி ஆகியவற்றை உலர்வாக பிசைந்து கொள்ளவும். இதை வடை போல தட்டி தோசைக் கல்லில் எண்ணெய் வார்த்து வேக வைத்து சாப்பிடலாம். இதில் போதுமான அளவு நார்ச்சத்து உள்ளது.

பூண்டு சாதம்:

பூண்டு 100 கிராம் அளவுக்கு எடுத்து உரித்து பொடியாக நறுக்கவும். இதை நல்லெண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பாசுமதி அரிசியை தனியாக உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி சேர்க்கவும். இத்துடன் வதக்கிய பூண்டு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கி வேகவைத்த பாசுமதி அரிசி சாதத்தையும் சேர்த்துக் கிளறவும். பூண்டில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.

நாட்டு வைத்தியம்:

துத்தி இலை சூரணம்

தேவையான பொருள்கள்

துத்தி இலை
(நிழலில் உலர்த்தியது) – 500 கிராம்
சீரகம் – 25 கிராம்
மிளகு – 10 கிராம்
மஞ்சள் – 10 கிராம்

செய்முறை:

மேற்கண்ட அனைத்துப் பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்துப் பொடியாக்கிக்கொள்ளவும். தினமும் காலிஅ மற்றும் இரவு உணவுக்குப் பிறகு 5 கிராம் அளவு பாலில் கலந்து சாப்பிட்டால் மூல நோய்கள், உஷ்ண நோய்கள் போன்ற அனைத்தும் தீரும்.

வெந்தயப் பொடி-அரை தேக்கரண்டி
நெல்லிக்காய்ப் பொடி – அரை தேக்கரண்டி
தயிர்-நான்கு தேக்கரண்டி

மேற்கூறிய மூன்று பொருட்களையும் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட இரண்டு நாட்களில் மூல நோயிலிருந்து முழுமையாக விடு படலாம். மூலம் நோய்க்கு சிறந்த எளிய அனுபவ மருந்து.

சோம்பு தூள்-ஒரு தேக்கரண்டி

மிளகுத் தூள்- கால் தேகரண்டி

சிறிது நீர் விட்டு சிறு தீயில் நன்கு வேக விட்டு நீர் சுண்டி லேகியப் பதம் வந்த உடன் இறக்கி தேன் கலந்து கிளறி நாள்தோறும் காலை மாலை என இரண்டு வேளைகள் சாப்பிட்டு வர அனைத்து மூலங்களும் ( நவ மூலங்கள் ) குணமாகும். ஒவ்வொரு வேளையும் புதிதாக செய்து சாப்பிட வேண்டும்.

பிரண்டை இருபது கிராம் சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வாணலியில் ஐம்பது மில்லி நெய் ஊற்றிக் காய்ந்ததும் பிரண்டையைப் போட்டு நன்கு வதக்கி நிறம் மாறி வந்ததும் சிறிது இந்துப்புப் போட்டுக் கிளறி இறக்கி சோற்றில் போட்டுப் பிசைந்து சாப்பிட்டு வர மூல நோய் மற்றும் மூலநோயினால் வரும் எரிச்சல் ,அரிப்பு ,ஊறல் குணமாகும்.

குப்பைமேணி எனும் மூலிகையை ஓர் கைப்பிடி அளவெடுத்து கால் லிட்டர் ஆமணக்கெண்ணெயில் வறுத்து எடுத்தெரிந்து விட்டு அந்த எண்ணையை 1 தேக்கரண்டி அளவு இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால் சில நாட்களில் மூலம், பவுந்தரம் போன்ற நோய்கள் நீங்கி உடல்நலம் பொறலாம்.

மூலச்சூடு குணமாக:

அருகம்புல் வேர், மாதுளம்பூ, சீரகம், மிளகு, அதிமதுரம் முதலியவைகளை சேர்த்து கஷாயமாக்கி பசுவின் வெண்ணெய் சேர்த்து குடித்து வர மூலச்சூடு, மூலக்கடுப்பு குணமாகும்.

மூலத்தில் காணும் முளைகள் மறைய:

ஒரு கைப்பிடி முருங்கை இலையையும், பழுப்பான எருக்கன் இலை நான்கையும் சம அளவு எடுத்து அம்மியில் வைத்து அரைத்து இரவில் உறங்கும் முன்னர் ஆசன வாயில் பற்று போட்டு வந்தால் மூலத்தில் காணும் முளைகள் வற்றி மறைந்து விடும்.

ஒரு டம்ளர் மோருடன் ஒரு டம்ளர் முள்ளங்கி சாறு கலந்து 25 நாட்கள் தொடர்ந்து அருந்திவர மூலநோய் அகலும்.

ஆமணக்கு இலைகளை நல்லெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூடாக இருக்கும் போது ஆசனவாயில் தழைகள் படும்படி இறுக்கமாக கட்டவும்.இவ்வாறு செய்து வந்தால் மூல நோய் அகலும்.

15 துளசி இலை, 2 மிளகு, 2 சிறு வெங்காயம்

ஆகியவற்றை அரைத்து சுடு நீரில் நெல்லிக்காய் அளவு கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் மூல நோய் குணமாகும்.

முளைக்கீரை, துத்திக்கீரை இரண்டையும் சம அளவு எடுத்து, சிறுபருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் உள் மூலம், சுடினால் ஏற்படும் கட்டி, இரத்த மூலம் போன்றவை எளிதில் சரியாகும்.

பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சிறுபருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் மூலச்சூடு, மூலக்கடுப்பு போன்றவை தீரும்.

வெங்காயத்தாள், பொடுதலை, வெந்தயம் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த மூலம், பௌத்திரக் கட்டி போன்றவை குணமாகும். முடக்கத்தான் கீரையுடன் 2 கடுக்காயைத் தட்டிப்போட்டு கஷாயமாக்கிச் சாப்பிட்டால் மூல நோய்கள் குணமாகும்.

அகத்திக்கீரையை சாறாக எடுத்து சாற்றில் 5 கடுக்காய்களை உடைத்துப்போட்டு கஷாயம் தயாரித்து, அதை வாய் அகன்ற பாத்திரத்தில் ஊற்றி சுமார் அரை மணி நேரம் ஆசனக் குளியல் செய்தால், மூலக்கிருமிகள், மூல எரிச்சல், மூலச்சூடு, இரத்த மூலம் போன்றவை முழுமையாக குணமாகும்.

கானாம்வாழைக் கீரையையும் துத்தி இலையையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த மூலம் எளிதில் குணமாகும். துத்திக் கீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கிக் கட்டினால், மூல நோயில் உண்டாகும் பௌத்திரக் கட்டி குணமாகும்.

புளியாரைக் கீரைச் சாறில் துத்தி இலையை சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த மூலம் சரியாகும். சுக்காங் கீரைச் சாறில் கடுக்காய் தோலை ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் மூல நோய்கள், குடற்புண்கள் குணமாகும்.

சுக்காங் கீரை, துத்திக் கீரை இரண்டையும் சம அளவு எடுத்துப் பாலில் கலந்து சாப்பிட்டால் இரத்த மூலம் உடனே தீரும். பண்ணைக் கீரைச் சாறில் நாவல் பருப்பை அரைத்துச் சாப்பிட்டால் இரத்த மூலம் உடனே குணமாகும்.

பாற்சொரிக் கீரைச், துத்திக்கீரை இரண்டையும் அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டால் மூல நோய்கள் குணமாகும். பாற்சொரிக் கீரைச் சாறில் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த மூலம் குணமாகும்.

பத்து துத்தி இலைகள் ஐந்து சின்ன வெங்காயம் சேர்த்து வாயில் இட்டு வெற்றிலை பாக்கு மெல்வது போல மென்று தின்று விழுங்கி வர மூல நோய் குணமாகும்.

அகத்திக் கீரை சாற்றில் ஐந்து கடுக்காய்களை உடைத்துப் போட்டு கஷாயம் வைத்து ஆசனவாயில் தடவினால் எரிச்சல் குணமாகும்.

அம்மான் பச்சரிசிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் மலக்கட்டு உடையும்.

அரைக்கீரையுடன் பாசிப்பயிறு, மிளகு, நெய் சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.

ஆகாயத் தாமரை இலையை அரைத்து கட்டினால் வெளிமூலம், மூலக்கட்டி போன்றவை குணமாகும்.

ஆடையொட்டி இலை, வில்வ இலை இரண்டையும் சம அளவில் எடுத்து பாலில் கலந்து குடித்து வந்தால் குடல் புண் மற்றும் மூலப்புண் குணமாகும்.

ஆமணக்கு விதைப்பருப்பை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து சாப்பிட்டால் மலக்கட்டு தீரும்.

அரை லிட்டர் ஆமணக்கு எண்ணெயுடன் கடுக்காய் 50 கிராம் சேர்த்து காய்ச்சி வைத்து கொள்ளவும். இதனை தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டால் குணமடையும்.

மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் விளக்கெண்ணெய்யை தினமும் ஆசன வாயில் தடவினால் தீர்வு காணலாம்.

ஆலம் பழத்தை உலர்த்தி பொடி செய்து சர்க்கரை கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும். ஆவாரம் பூவை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.

இஞ்சி சாற்றில் கடுக்காய் பொடியை கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டால் விடுதலை பெறலாம்.

இஞ்சியை துவையல் அல்லது பச்சடி செய்து சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் தீரும்.

இலந்தை இலையை அரைத்து புளித்த மோரில் நெல்லிக்காய் அளவு கலந்து குடித்தால் மூலக்கடுப்பு குணமாகும்.

ஆவாரம்பூ (பச்சையாகவோ, காய வைத்ததோ) ஒரு ஸ்பூன். மாங்கொழுந்து 8 எண்ணிக்கை எடுத்துக்கோங்க…. ரெண்டையும் ஒரு டம்ளர் தண்ணியில போட்டுக் காய்ச்சி அரை டம்ளராக்கணும். இதை, காலையில வெறும் வயித்துல 10 நாள் தொடர்ந்து குடிச்சிட்டு வரணும். 10 நாள் இடைவெளிவிட்டு, திரும்பவும் 10 நாள் குடிச்சா… மூல வியாதி அத்தனையும் இருக்குற இடம் தெரியாமப் போயிரும்.

இளநீரில் ஓட்டை போட்டு, ஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டு மூடி, வீட்டு மொட்டை மாடியில ஒரு ராத்திரி வச்சிரணும். காலையில அந்த இளநீரை குடிச்சிட்டு, வெந்தயத்தையும் சாப்பிடணும். தொடர்ந்து 5 நாள் இதே மாதிரி செய்தா மந்திரத்துக்கு கட்டுப்பட்டது கணக்கா… மூலம் ஓடிப்போயிரும். அப்படியும் சரியாகலைனா…. 5 நாள் கழிச்சி திரும்பவும் சாப்பிட்டா கண்டிப்பா சரியாயிரும்.

வெள்ளை வெங்காயம் ஒரு கைப்பிடி எடுத்து, பொடியா நறுக்கி, நெய் விட்டு வதக்கணும். ஓரளவு வதங்கினதும் ஒரு ஸ்பூன் பனங்கல்கண்டு, இல்லனா… பனைவெல்லம் போட்டுக் கிளறணும். விழுதானதும் இறக்கி வச்சு, சூடு ஆறினதும் பாதியைச் சாப்பிடணும். மீதியை மறுநாள் காலையில சாப்பிடணும். தொடர்ந்து 5 தடவை இப்படி செஞ்சி சாப்பிடணும். (ஒரு தடவை செய்ததில் பாதியை முதல் நாளும், மீதியை மறுநாள் காலையும்). அதுக்கு மேல செஞ்சி வச்சா கெட்டுப்போயிரும். இந்த வெள்ளை வெங்காயம் சாப்பிட்டா மூலம், பவுத்திரம், ரத்தப்போக்கு எல்லாமே சரியாகிவிடும்.

சோத்துக்கத்தாழை மடல் எடுத்து மேல்தோலை நீக்கி நல்லா கழுவணும். அதுல ரெண்டு அங்குல அளவு துண்டு போட்டு, அப்படியே சாப்பிடணும். தண்ணியில கழுவினாலும் லேசா கசப்பு இருக்கும். அதனால பனைவெல்லத்தையும் சேர்த்துச் சாப்பிடணும். மூலத்தை குணமாக்கற இந்தக் கத்தாழை, கேன்சரைகூட குணமாக்கும். முக்கியமா கர்ப்பப்பை புற்றுநோய்க்கு நல்ல மருந்து இது.

குப்பைமேனி. இந்த செடியைப் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க. சிலர் இதை ஒண்ணுக்கும் ஆகாத செடினு சொல்வாங்க. ஆனா, மூலத்துக்கு இது நல்ல மருந்து. குப்பைமேனி இலையை காய வச்சு நல்லா தூளாக்கி வச்சுக்கிடணும். அதுல கால் ஸ்பூன் அளவு எடுத்து நெய் சேர்த்து ஒரு மண்டலம் சாப்பிட்டா, எல்லா வகை மூலமும் சரியாயிரும்.

அருகம்புல் 20 கிராம் அளவு எடுத்து, மை போல அரைச்சு, காய்ச்சின பசும்பால்ல கலந்து சாப்பிட்டு வந்தா… மூலம் மட்டுமில்லாம ரத்த சோகையும் குணமாகும்.

துத்தி இலையை விளக்கெண்ணெய் விட்டு வெண்மை பெறும் வகையில் வதக்கி, இளஞ்சூட்டோடு ஒத்தடம் கொடுத்துவிட்டு அதன் மேலே கட்டி வைத்தால் ஆசன வாயில் அமைந்து துன்பம் தரும் மூலம், கட்டிகள், புண்கள் ஆகியன குணமாகும்.

துத்தி இலையை நெய், பருப்பு சேர்த்து காரத்துக்கு சிறிதளவு மிளகு சேர்த்து (மிளகாய் சேர்க்காமல்) சமைத்து சுடுசாதத்தில் இட்டுப் பிசைந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வர ஒன்பது வகையான மூலங்களும் விரைவில் குணமாகும்.

மூலம் குணமாக பத்தியம்

மருந்து உண்ணும் காலம் வரை இச்சா பத்தியம் ( தாம்பத்திய உறவு எனப்படும் உடல் உறவைத் தவிர்த்தல் ) இருந்தால் மட்டுமே இந்த மருந்து வேலை செய்யும்.

டயட்:

உணவுதான் மூலத்துக்கு தீர்வு. மலச்சிக்கலை தவிர்க்க வேண்டும் அசைவம் போதைப் பொருட்களை தவிர்த்தல் அஜீரணம் வராமல் பார்த்துக் கொள்ளுதல் அடிக்கடி உணவில் கருணைக் கிழங்கு எளிதில் செரிமானம் ஆகும் உணவுகள் சாப்பிடுதல் உடல் உஷ்ணம் அடையாமல் பார்த்துக் கொள்ளுதல்

தினமும் இரண்டு வேளை உணவில் கீரை சேர்க்க வேண்டும். முளை கட்டிய பயறு வகைகள், மாதுளை, சப்போட்டா ஆகிய பழங்களை சாப்பிடலாம். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இரவு நேரத்தில் பூண்டை உரித்து பொடியாக நறுக்கி பாலில் போட்டு கொதிக்க வைத்து அருந்தலாம். தினமும் பூண்டு பால் சாப்பிடுவதன் மூலம் இந்த பிரச்னையில் இருந்து விடுபடலாம். வாரத்தில் இரண்டு முறை கருணைக் கிழங்கை உணவில் சேர்க்க வேண்டும். கத்தரிக்காய், தேங்காய், கருவாடு மசாலா உணவுகள் தவிர்க்கவும். சில்லி சிக்கன், சில்லி மீன் என எண்ணெயில் பொரித்த, பொரிக்காத அசைவ வகைகள், முட்டை வேண்டாம். சுத்த சைவமாக மாறிவிடுவது நல்லது. கீரைகள், நார்ச்சத்துள்ள காய்கறிகள் தினமும் உணவில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது அவசியம்.

மேலும் சில நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை:

1. அதிகாலையில், குளிர்ந்த நீரில், நாளும் தலைக்கு குளிக்கும் பழக்கம் வேண்டும்.

2. வாரம் இரண்டுமுறை எண்ணெய் குளியல் தேவை.

3. நொறுக்குத் தீனி பழக்கத்தை விட வேண்டும். ( முறுக்கு, பிஸ்கட்) பதிலாக பழங்கள் பயன்படுத்தலாம்.

4. இரவுத் தூக்கம் முக்கியமாக இரவு 9 முதல் 3 மணி வரை ஓய்வெடுத்தல் வேண்டும்.

5. புளிப்பு மற்றும் பச்சை மிளகாய், மிளகாய் காரத்தைக் குறைத்துக் கொள்க. மிளகு காரம் சேர்க்கலாம்.

6. காலை, இரவு உணவு,7 மணி முதல் 9 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும்.

7. தாகம் இல்லாத போது தண்ணீர் குடிக்க்க கூடாது. தாகத்தின் அளவறிந்து சுவைத்து குடித்தல் நல்லது.

8. கருணைகிழங்கு சேர்த்துக் கொள்ளவும். உணவில் நெய், நல்லெண்ணெய் பயன்படுத்த வேண்டும்.

10. இட்லி, தோசை போன்ற உணவை விட்டுவிட்டு நன்கு மென்று சாப்பிடக் கூடிய வகையில் உணவுகளை பயன்படுத்துக.

11. உயிர் ஆற்றலை அழிப்பதையே மருத்துவமாக கொண்ட எதிர்முறைய மருந்துகளை எந்த சூழலிலும் பயன்படுத்தல் நலமன்று.

12. பொதுவாக மேற்கண்ட பழக்கங்கள் நோயற்ற வாழ்வைக் கொடுக்கும்.

வந்த நோய்கள் அனைத்தையும் நீக்கி சுகமளிக்கும்.வயிற்றில் இருந்துதான் பெருங்குடலிற்கு சத்தி கிடைக்கிறது எனவே மேறகண்ட பழக்கங்கள் மூல நோயை முழுமையாக களைய தேவைப்படும்.

மாவட்ட செய்திகள்

Most Popular

ஆக்ஷன் காட்சியில் தெறிக்கவிடும் ‘சரவணா ஸ்டோர்ஸ்’ அருள் – வைரல் போட்டோஸ்!

தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் பலருக்கும் பரிட்சியமானவர். அவர் கடையின் விளம்பரத்தில் உள்ளூர் முதல் வெளிநாட்டு அழகி வரை ஆடி வந்த அவர், தற்போது வெள்ளித்திரையில் நடித்து...

மாற்றுத்திறனாளி கணவரை எரித்துக்கொன்ற பெண் கைது!

ராமநாதபுரம் ராமநாதபுரம் அருகே குடும்ப தகராறில் மாற்றுத்திறனாளி கணவரை தீவைத்து எரித்த பெண்ணை போலீசார் கைதுசெய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அடுத்த...

விருப்பமனு அளித்தவர்களிடம் கமல், பழ.கருப்பையா நேர்காணல்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றுகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளும் ஒருபுறம் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இதனிடையே,...

“மனநலம் பாதித்த ஒருவரின் செயல்…” : வீரமணி கண்டனம்!

தஞ்சை ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு காவித்துண்டு அறிவிக்கப்பட்டதற்கு வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு கலை...
TopTamilNews