Home ஆன்மிகம் மூன்றே மாதங்களில், தீராத கடனையெல்லாம் தீர்க்கும் குலதெய்வ வழிபாடு- -ஜெகத்குரு பாலசுப்ரமணியன்

மூன்றே மாதங்களில், தீராத கடனையெல்லாம் தீர்க்கும் குலதெய்வ வழிபாடு- -ஜெகத்குரு பாலசுப்ரமணியன்

 

god

பொதுவாக நாம் எந்த ஆலயத்திற்கு சென்று வழிபட்டாலும், ஒவ்வொருவருக்கும் இஷ்ட தெய்வம், குலதெய்வம் என்று தனித்தனியாக இருக்கும்.
வருடத்திற்கு ஒரு முறையாவது முறையாக குலதெய்வ வழிபாடு செய்து வருவது நமது குலத்தைத் தழைக்கச் செய்யும்.  குலத்தை நின்று காக்கும் தெய்வம் என்பதால் குலதெய்வம் என்கிறோம். இன்று நாம் சந்திக்கின்ற நல்ல பலன்களாக இருந்தாலும் சரி, தொல்லைகளாக இருந்தாலும் சரி.. இவை எல்லாமே முற்பிறவியின் செய்வினைகளின் பயன் தான். பலரது தீராத கடன் பிரச்னைகளுக்கும் நமது முற்பிறவியின் செய்வினைகளைத் தான் காரணம் சொல்கிறார்கள்.
நாம் எந்த தெய்வத்தை வழிபட்டு வந்தாலும், குல தெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே பிற தெய்வங்களால் நம்மை ஆசிர்வதிக்க முடியும் என்கிறது இந்து மதம். 

god

முறையாக குல தெய்வ வழிபாடு செய்து இறைவன் மீது நம்பிக்கை வைத்தால் கடன் தொல்லைகளில் இருந்து மீண்டு வரலாம். 

கடன் பிரச்சினைகளில் இருந்து விரைவா வெளியில் வந்து சுதந்திரமான செல்வ சுவாசத்தை அனுபவிக்க தொடர்ந்து மூன்று பெளர்ணமி நாட்கள்லில் உங்களது குலதெய்வத்தை மனமுருக  வேண்டி, வழிபட்டு வர வேண்டும். அப்படி முறையாக வழிபட்டு வந்தால் கடன் தொல்லைகள் அனைத்தும் விலகும்.

temple

நம்மில் பலருக்கு குலதெய்வத்தின் ஆலயம் வெகு தொலைவில், வெவ்வேறு ஊர்களில் இருப்பதால் தொடர்ந்து மூன்று பவுர்ணமிகளில் செல்ல இயலாத நிலை இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு சில பரிகாரங்களை வீட்டிலேயே செய்யலாம். வீட்டில் குலதெய்வ படம் வைத்துள்ளவர்கள் அதன் முன்பாக ஐந்து முகங்கள் கொண்ட விளக்கில் நெய் விட்டு தீபம் ஏற்ற வேண்டும். அதன் பிறகு அவரவர் வழக்கப் படி குலதெய்வத்திற்கு படையல் இட்டு வழிபட்டு வந்தால் கடன் பிரச்னைகள் அனைத்தும் நீங்கும்.  குலதெய்வ கோவில் உள்ள திசை நோக்கி இந்த வழிப்பாட்டை செய்யலாம். 

அப்படி இந்த மூன்று பெளர்ணமி பூஜைகளைச் செய்து வருகிற நாட்களில், உங்களது கடன் பிரச்னைகள் தீர இன்னும் சில பரிகாரங்களையும் தொடர்ந்து செய்து வாருங்கள். 

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் காலையில் எழுந்து, பிரம்ம முகூர்த்த நேரத்தில் குளித்து, பூஜைகள் செய்து அருகில் உள்ள மளிகைக்கடைக்கு சென்று மனதார மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு கல் உப்பு வாங்கி வந்து பாத்திரத்தில் போட்டு வைகக்வும். இதை இந்த குலதெய்வ பூஜைகள் செய்கிற மூன்று மாதங்களுக்கும் தவறாமல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செய்து வர, வீட்டில் மகாலட்சுமி வரவிற்கு குறைவே இருக்காது.

temple

வெள்ளிக்கிழமை காலை 5 வெற்றிலை, 5 கொட்டைப்பாக்கு 5 ஒரு ரூபாய் நாணயம் ஆகியவற்றை பூஜையில் வைத்து லட்சுமி வழிபாடு செய்யவேண்டும். பின்பு அனைத்தையும் ஒரு தாளில் மடித்து வைக்கவும். பின்பு அடுத்தவாரம் செய்யும் போது மேற்கண்டதை ஒரு உண்டியலில் போட்டு வைக்கவும்.

வளர்பிறை நாட்களில் வருகின்ற வரக்கூடிய திருதியை அன்று அன்னதானம் செய்தாலும் கடன் பிரச்சினை மற்றும் பணப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும் இதை ஒவ்வொரு மாதமும் செய்யலாம்.

மாவட்ட செய்திகள்

Most Popular

அரசியலுக்காக கோவிட் தடுப்பூசி தொடர்பாக சிலர் தவறான தகவல்களை பரப்புகிறார்கள்… மத்திய அமைச்சர் வேதனை

அரசியல் காரணங்களுக்காக கோவிட் தடுப்பூசி தொடர்பாக சிலர் தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என்று கட்சியை மத்திய அமைச்சர் ஹா்ஷ் வர்தன் தெரிவித்தார். நாடு முழுவதுமாக அனைத்து...

உத்தர பிரதேச காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் பிரியங்கா காந்தி?.. 10 லட்சம் பிரியங்கா காந்தி பட காலண்டர் விநியோகம்

2022 உத்தர பிரதேச தேர்தலை மனதில் வைத்து, மக்களை சென்றடையும் நோக்கில், அம்மாநில நகரங்கள் மற்றும் கிராமங்களில் வீடு வீடாக சென்று பிரியங்கா காந்தி பட காலண்டரை விநியோகம் செய்ய...

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பா.ஜ.க.வில் ஐக்கியம்… மம்தாவுக்கு தொடர்ந்து ஷாக் கொடுக்கும் தாமரை கட்சி

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அரிந்தம் பட்டாச்சார்யா பா.ஜ.க.வில். இணைந்தார். இது மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. மேற்கு வங்கம் மாநிலம் நாதியா...

சிறையிலுள்ள இளவரசிக்கும் உடல்நலக்குறைவு!

கடந்த 2017 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா, இளவரசி, சுதாகர் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் நன்னடத்தை விதிகளை மீறிய சசிகலா, தனது...
Do NOT follow this link or you will be banned from the site!