Home சினிமா மூச்சு விடவே கடினப்பட்டுக் கொண்டிருந்த பரவை முனியம்மாள் : மருத்துவமனையில் சேர்த்த நடிகர்..!

மூச்சு விடவே கடினப்பட்டுக் கொண்டிருந்த பரவை முனியம்மாள் : மருத்துவமனையில் சேர்த்த நடிகர்..!

நடிகர் அபி சரவணன் இன்று காலை பரவை முனியம்மாவின் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்தார்.

பிரபல நாட்டுப்புற பாடகியான பரவை முனியம்மாள் உடல் நலம் சரியில்லாததால் மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். போதிய பணவசதி இல்லாததால், சிகிச்சையைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். தனது சிகிச்சைக்கு உதவும் படி, தமிழக அரசிடம் பரவை முனியம்மா கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் நடிகர் அபி சரவணன் இன்று காலை பரவை முனியம்மாவின் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்தார். மேலும், பரவை முனியம்மாவிற்கு பழங்கள், துணிகள் மற்றும் மருந்துப் பொருட்கள் என அனைத்தையும் வாங்கி கொடுத்தார். 

Abi saravanan

அதனையடுத்து, பரவை முனியம்மா மூச்சு விடுவதற்கே மிகவும் சிரமப் படுகிறார் என்று பரவை முனியம்மாவின் குடும்பத்தினர் அபி சரவணனுக்கு தகவல் அளித்துள்ளனர். அதனைக் கேட்டவுடனே பரவை முனியம்மாவை மதுரையில் உள்ள வேலம்மாள் மருத்துவமனையில், அவசர சிகிச்சைப் பிரிவில் நடிகர் அபி சரவணன் அனுமதித்துள்ளார். 

Paravai muniyamma

 
இந்த தகவலை அறிந்தவுடன், நடிகர் சங்கத்திலிருந்து கார்த்தி, நாசர், பொன்வண்ணன், ஐசரி கணேஷ் மற்றும் பாக்யராஜ் ஆகியோர் அபி சரவணனிடம் பரவை  முனியம்மாளின் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளனர். பரவை  முனியம்மாள் அவர்களுக்கு தற்போது தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. 

Most Popular

அதிமுக எம்பி எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனுக்கும் விவசாயம் பற்றி தெரியாதா? முதல்வருக்கு ஸ்டாலின் பதிலடி!

மத்திய அரசின் சட்டங்களைப் பற்றி ஆராய்ந்து கருத்து சொல்ல விவசாயியாக இருக்க அவசியம் இல்லை என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சஞ்சு சாம்சனின் வெறித்தனம்… ஆர்ச்சரின் சர்பரைஸ்! – ராஜஸ்தான் வென்றது எப்படி? #CSKvsvRR

ஐபிஎல் திருவிழாவில் ஒவ்வொரு போட்டியும் அனல் பறக்கும் யுத்தம் போல மாறிவிட்டது. பஞ்சாப் – டெல்லி போட்டியில் சூப்பர் ஓவர் சென்றது. பெங்களூரு – ஹைதரபாத் போட்டியில் கடைசி ஓவர்...

ஆழ்துளை கிணறுகளில் சிக்கிய குழந்தைகளை மீட்க 6 விதமான கருவிகள்: மெக்கானிக் நாகேந்திரன் சாதனை

ஆழ்துளை கிணறுகளில் தவறி விழும் குழந்தைகளை உயிருடன் மீட்க, 6 விதமான கருவிகளை உருவாக்கி மீட்பு நடவடிக்கைக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார் நாகையை சேர்ந்த மெக்கானிக் நாகேந்திரன்.

பெற்ற தாயுடன் சேர்ந்து சிறுமியின் வாழ்க்கையை வீணடித்ததை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

கடந்த ஜூலை மாதம் போக்ஸோ சட்டத்தின் கீழ் நாகர்கோவில் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்டார். 15 வயது சிறுமிக்கு கடந்த 3 ஆண்டுகளாக பாலியல்...
Do NOT follow this link or you will be banned from the site!