Home தமிழகம் மு.க.ஸ்டாலினுக்கு குடைச்சல்... ரஜினி கட்சியில் இணைகிறார் கராத்தே தியாகராஜன்..!

மு.க.ஸ்டாலினுக்கு குடைச்சல்… ரஜினி கட்சியில் இணைகிறார் கராத்தே தியாகராஜன்..!

கராத்தே தியாகராஜன், திமுக – காங்கிரஸ் பற்றிய தகவல்களை ரஜினியிடம் அவ்வப்போது கூறி வருவதாகவும், திமுக காங்கிரஸ் கூட்டணியை உடைக்க முயன்றதாகவும் மு.க.ஸ்டாலினுக்கு தகவல் சென்றுள்ளது.

மு.க.ஸ்டாலினுக்கு குடைச்சல்... ரஜினி கட்சியில் இணைகிறார் கராத்தே தியாகராஜன்..!

காங்கிரஸ் கட்சியிலிருந்து தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்னணியில் அவர் ரஜினியிடம் திமுக சார்ந்த சில தகவல்களை பகிர்ந்து கொண்டதே காரணம் எனத்தகவல்கள் வெளியாகி உள்ளது. azhagiri

தி.மு.க. மூத்த எம்.பி. ஒருவர் காங்கிரஸ் மேலிடத்திற்கு கொடுத்த நெருக்கடி காரணமாக தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக 21ல் சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. அதில் கராத்தே தியாகராஜன் பேசும்போது, ‘கடந்த 2016ல் உள்ளாட்சி தேர்தல் அறிவித்தபோது சென்னையில் உள்ள 200 வார்டுகளில் காங்கிரசுக்கு 4 வார்டுகள் தான் தி.மு.க. ஒதுக்கீடு செய்தது. மீண்டும் தி.மு.க.விடம் பேச்சு நடத்திய பின் 10 வார்டுகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டன. எனவே இந்த தேர்தலில் தென் சென்னை மாவட்டத்தில் காங்கிரஸ் தனியாக போட்டியிட்டால் உள்ளூர் கட்சிகளின் புரிந்துணர்வுடன் 35 வார்டுகளில் வெற்றி பெற முடியும். எனவே தி.மு.க. மாவட்ட செயலர்களிடம் தொகுதி பங்கீடு பேச்சு நடத்தாமல் ஸ்டாலினிடம் பேசி கணிசமான பங்கீட்டை காங்கிரஸ் பெற வேண்டும்’’ எனப்பேசினார். karate thiagarajan

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு ‘உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்தே போட்டியிட வேண்டும். எவ்வளவு நாளைக்குத் தான் காங்கிரசுக்கு பல்லக்கு துாக்குவது’ என்றார். அதற்கு கராத்தே தியாகராஜன் ‘சூழ்நிலையை பொறுத்து கூட்டணி அமைகிறது. நாங்கள் யாரையும் பல்லக்கு துாக்க சொல்லவில்லை’ என்றார்.

 இதனால் தி.மு.க. – காங்கிரஸ் உறவில் உரசல் ஏற்பட்டது. இதையடுத்து நேரு வெளியிட்ட அறிக்கையில் ‘கூட்டணி தொடர்பாக நான் கூறியது என் தனிப்பட்ட கருத்து’ என்றார். உடனே கராத்தே தியாகரஜனும் ‘உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நேரு சொன்னது அவரது தனிப்பட்ட கருத்து என்றால் நான் கூறியதும் முழுக்க முழுக்க என் தனிப்பட்ட கருத்து’ என்றார். 

ஆனால், இந்த விளக்கத்தை தி.மு.க. மேலிடம் ஏற்க மறுத்து விட்டது. இதையடுத்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தல்படி அக்கட்சியின் மூத்த எம்.பி.யான டி.ஆர்.பாலு டெல்லி காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபாலை சந்தித்து கராத்தே தியாகராஜன் மீது புகார் கூறி நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி இருக்கிறார். தி.மு.க. நெருக்கடியை தொடர்ந்து கராத்தே தியாகராஜன் நேற்று கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டார்.stalin

இதன் பின்னணியில் கராத்தே தியாகராஜன், திமுக – காங்கிரஸ் பற்றிய தகவல்களை ரஜினியிடம் அவ்வப்போது கூறி வருவதாகவும், திமுக காங்கிரஸ் கூட்டணியை உடைக்க முயன்றதாகவும் மு.க.ஸ்டாலினுக்கு தகவல் சென்றுள்ளது. அதனையடுத்து கராத்தே தியாகராஜனின் பேச்சுக்களும் தலைமைக்கெதிராக இருப்பதால் அவர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 
 

மு.க.ஸ்டாலினுக்கு குடைச்சல்... ரஜினி கட்சியில் இணைகிறார் கராத்தே தியாகராஜன்..!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

முதல்வரிடம் ரூ.10 கோடி நிதி வழங்கிய கலாநிதி மாறன்

முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு சென்ற சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன், கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.10 கோடிக்கான காசோலையை தந்தார். காவேரி கலாநிதிமாறன் மற்றும் துர்க்கா ஸ்டாலின் உடன்...

தரையில் அமர வைத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை : தொடரும் அவலம்!

புதுச்சேரியில் கொரோனா நோயாளிகள் தரையில் அமர்ந்தவாறு சிகிச்சை பெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு...

கொரோனா நோயாளிகளை வெளியேற்றும் தனியார் மருத்துவமனைகள்… அதிர்ச்சி சம்பவம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 33 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் நோயாளிகளின்...

“வென்டிலேட்டருக்கும் மோடிக்கும் இருக்கும் 3 ஒற்றுமைகள்”

கடந்தாண்டு கொரோனா பரவல் அதிகரித்ததால் மருத்துவ செலவுகளுக்காக பிஎம் கேர்ஸ் நிதியம் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு சாமானியர்களும் தொழிலதிபர்கள், திரைப் பிரபலங்களும் நிதி அளித்தனர். ஆனால் இந்த நிதியானது எப்படி செலவிடப்பட்டது,...
- Advertisment -
TopTamilNews