Home சினிமா முழுசா ஜெயலலிதாவாக மாறிய கங்கனா ...ஆச்சரியப்பட வைக்கும் ஃபஸ்ட்லுக் போஸ்டர்!

முழுசா ஜெயலலிதாவாக மாறிய கங்கனா …ஆச்சரியப்பட வைக்கும் ஃபஸ்ட்லுக் போஸ்டர்!

எம்ஜிஆராக நடிகர் அரவிந்த் சாமி நடிக்கிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பமாகியுள்ளன

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை  வரலாற்றை பலரும் படமாக எடுக்க முனைப்புக் காட்டி வந்த நிலையில்  இயக்குநர் விஜய் அதனைச் செயல்படுத்தி வருகிறார்.  தலைவி என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தில்  ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். எம்ஜிஆராக நடிகர் அரவிந்த் சாமி நடிக்கிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

kangana

நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்குக் கதாசிரியரும் இயக்குநர்  ராஜமவுலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் கதை எழுதுகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. புரொஸ்தெடிக் மேக்கப் உள்ளிட்ட பணிகளுக்காக அமெரிக்காவில்  உள்ள தலைவி படக்குழு தொடர்ந்து அதற்கான பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது.

ttn

இந்நிலையில் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தலைவி படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் ஒன்றை பதிவிட்டுள்ளதுடன்,  படத்தின் ரெட்ரோ இசை வெகு விரைவில்  வர இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். போஸ்டரில்   ஜெயலலிதாவாக மாறியுள்ள கங்கனா கொஞ்சம் கூட  தனது சாயலில் இல்லாமல் முழுவதுமாக ஜெயலலிதாவாக மாறியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாக இருப்பதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  
 
 

மாவட்ட செய்திகள்

Most Popular

ஈரோடு: ஊராட்சிகோட்டை குடிநீர் திட்ட பணிகளை முதல்வர் விரைவில் துவக்கி வைப்பார்- மாவட்ட செயலாளர் கே வி ராமலிங்கம்

ஈரோடு மாநகரில் நடைபெற்றுவரும் ரூபாய் 500 கோடி மதிப்பிலான ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. எனவே அடுத்த மாதம் முதலமைச்சர் இத்திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார், என்று...

தரமான தேயிலை கொள்முதல் செய்ய தேயிலை வாரியம் சுற்றறிக்கை!

தேயிலை தொழிற்சாலையில் தரமான தேயிலை கொள்முதல் செய்ய தேயிலை வாரியம் சுற்றறிக்கை. அனுப்பியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகள் 65,000 பேர் தேயிலை...

புதுக்கோட்டையில் திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை! அவருக்கு 6 நாட்களில் திருமணம்…

புதுக்கோட்டை மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளரான மாத்தூரை சேர்ந்த பாலச்சந்தர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 36 வயதான பாலசந்தருக்கு இந்த மாதம்...

பெரம்பலூரில் கண்டெடுக்கப்பட்டது டைனோசரின் முட்டைகள் இல்லை- அருங்காட்சிய காப்பாட்சியர்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் கடந்த புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் முட்டைகள் போன்ற உருவம் குறித்த முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அரசு...
Do NOT follow this link or you will be banned from the site!