மும்பை குண்டு வெடிப்பு வழக்கு: சஞ்சய் தத்தை விடுவித்தது மாநில அரசுதான்; பேரறிவாளனுக்கு ஆர்டிஐ பதில்!?

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்  முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து ஆர்டிஐ விளக்கம் அளித்துள்ளது. 

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்  முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து ஆர்டிஐ விளக்கம் அளித்துள்ளது. 

perarivalan

பாலிவுட்  நடிகர் சஞ்சய் தத்துக்கு மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுத தடைச்சட்டத்தின் கீழ் 6 ஆண்டுகள்  சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை 5 ஆண்டுகளாக உச்சநீதிமன்றம் குறைத்தது. இதையடுத்து அவர், மும்பை எரவாடா சிறையில்  அடைக்கப்பட்டு, தண்டனை காலம் முடியும் முன்பே விடுதலை செய்யப்பட்டார்.

sanjay

இதையடுத்து ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், எந்த அடிப்படையில் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார்? என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் புனே எரவாடா சிறை நிர்வாகத்துக்குக் கடிதம் அனுப்பினார்.ஆனால்  தனது விடுதலை தொடர்பான தகவல்களைப் பேரறிவாளனுக்கு தெரிவிக்கக் கூடாது என  எரவாடா சிறை நிர்வாகத்துக்கு சஞ்சய் தத் கடிதம் எழுதினார். 
இதற்குப் பேரறிவாளன் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

perivalana

இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ்  நடிகர் சஞ்சய் தத் விடுதலை பற்றி பேரறிவாளன் கேட்ட கேள்விக்கு தற்போது பதிலளிக்கப்பட்டு உள்ளது. அதில், நடிகர் சஞ்சய் தத்தை மகாராஷ்டிரா அரசுதான் சிறையிலிருந்து முன்கூட்டியே விடுதலை செய்தது. இதற்கும் மத்திய அரசுக்கும் தொடர்பு இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

Most Popular

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி லாபம் ஈட்ட முயன்ற பதஞ்சலிக்கு ரூ.10 லட்சம் அபராதம்

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி மக்களின் அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயன கலவையை...

’இந்த லிஸ்ட்டில் நானா?’ கிரிக்கெட்டர் மிதாலி ராஜ் ஆச்சரியம் – டாப்ஸி பெருமை!

ஆண்கள் மட்டுமே கோலோச்சிய வந்த கிரிக்கெட் உலகத்தில் ஒரு பெண் சட்டென்று எல்லோரின் பார்வையையும் தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர் மிதாலி ராஜ். ஆண்கள் கிரிக்கெட்டில் சச்சின் எப்படி கருதப்பட்டரோ அதற்கு...

கொரோனா காரணமாக நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க கோரி மனு!

நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மே மாதம் நடைபெறவிருந்த நீட் தேர்வு ஜூலை 26-ஆம் தேதிக்கு...

“வாஷிங் மெஷின் போல ஏடிஎம் மெஷினை அடிக்கடி தூக்கி செல்லும் கூட்டம் ” -இந்நிலை நீடித்தால் இனி ஏடிஎம் மெஷின்ல காசுக்கு பதில் காத்துதான் வரும்.

தென்மேற்கு டெல்லியில் உள்ள ராஜோக்ரி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் ஒரு ஏடிஎம் மெஷினை அடையாளம் தெரியாத இருவர் தூக்கி சென்றனர் .அந்த மெஷினில் மொத்தம் 18 லட்ச ரூபாய் பணம்...